சாத்தியமற்ற எதிர்பார்ப்புகள்: இந்தியா மற்றும் ரஷ்யா-உக்ரைன் சமாதானம் குறித்து

 ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவின் முயற்சிகள் குறைந்த அளவு திறனைக் கொண்டுள்ளன.

 

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு பயணம் செய்தார். இந்த பயணம் இரு நாடுகளுக்கும் உலக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது பயணத்தின்போது, ​​ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயையும் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் அவரது பயணத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.


அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா பிரிக்ஸ் (Brazil, Russia, India, China and South Africa (BRICS)) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். 2023-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் குழு விரிவுபடுத்தப்பட்ட பின்னர் இந்த தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 


  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் வாங்தோவலுக்கும் வாங்குக்கும் இடையிலான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா-சீனா பேச்சுவார்த்தை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த இரண்டு உயர்மட்ட அதிகாரிகளும் சந்தித்தனர். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இராணுவ நிலைப்பாட்டைத் தீர்ப்பதே பேச்சுவார்த்தையின் நோக்கமாக இருந்தது. 


இந்த சந்திப்பின் போது, தோவல் மற்றும் வாங் இருவரும் "தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க" முடிவு செய்தனர். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகளை விலக்குவதை முடிக்க "அவசரமாக" செயல்பட முடிவு செய்தனர். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சாத்தியமான சந்திப்புக்கு முன்னர் முன்னேற்றம் ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

 

படைகளை திரும்பப் பெறும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 2020க்கு முன்பு இருந்த நிலைமைக்கு திரும்பிச் செல்லாது என்றாலும், சீனாவுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. 


 மேலும், அஜித் தோவல் அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து புதினிடம் தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க பிரதமர் மோடியால் அனுப்பப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். அமைதிக்கான முயற்சிகளில் இந்தியா மிகவும் உறுதியான நிலைப்பாட்டை இது காட்டுகிறது. 

 

அரசாங்கம் சமாதான முயற்சிகளை ஏற்படுத்த விரும்பினால், அது என்ன உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போரின் போது இந்தியா ரஷ்யா, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செய்திகளை அனுப்புகிறது. ஆனால் உண்மையான சமாதான முயற்சிகளுக்கு நிறைய முயற்சி, நேரம் மற்றும் பொறுமை தேவைப்படும். 


டர்கியே, இந்தோனேசியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரிலிருந்து இரு தரப்புடனும் பேசி வருகின்றன. உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி, அதிபர் புடின், பர்கன்ஸ்டாக் கம்யூனிக் மற்றும் பிரேசில் மற்றும் சீனாவில் இருந்து ஆறு அம்சத் திட்டம் ஆகியவை இப்போது சமாதான முன்மொழிவுகளாக உள்ளன.


இருப்பினும் மோதல்கள் குறித்த கவலை தொடர்கிறது. குர்ஸ்க் மீதான உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் இதற்கு சிறந்த  உதாரணம். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது நீண்ட தூர தாக்குதல் நடத்த அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து அனுமதி கோரி வருகிறார். 


ஐநா கூட்டங்கள், குவாட் உச்சி மாநாடு மற்றும் ஜெலென்ஸ்கியுடன் சந்திப்புக்காக பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். அதன்பிறகு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். இந்தப் பயணங்கள் முக்கியமானதாக இருக்கும், ஆனால் இந்தியாவின் அமைதிக்கான முயற்சிகள் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளுடன் அதிகமாக இருக்கக்கூடாது.



Original article:

Share: