மாற்றங்களைச் சரிசெய்தல்: தகுதி அடிப்படையிலான மருத்துவக் கல்வி பாடத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் குறித்து . . .

 புதிய பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் (NATIONAL MEDICAL COMMISSION (NMC)) திரும்பப் பெற்றது அனைவராலும் வரவேற்க்கப்படுகிறது.  


சமூக முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம். ஆனால், கல்வி என்று அழைக்கப்படும் அனைத்தும் நல்லது அல்ல. கால மாற்றத்தினால் கல்வியில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட தகுதி அடிப்படையிலான மருத்துவக் கல்வி (Competency-Based Medical Education) பாடத்திட்ட வழிகாட்டுதல்களை அரசாங்கம் சமீபத்தில் திரும்பப் பெற்றது. இந்த வழிகாட்டுதல்கள் பல தவறான விளக்கங்களைக் கொண்டிருந்தன.

 

ஆகஸ்ட் 31-அன்று வெளியிடப்பட்ட பாடத்திட்டம்,  பால்புதுமையினரை "இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள்" (unnatural sexual offences) என்று குறிப்பிட்டது மற்றும் அவற்றை பாலியல் குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்தது. 


தேசிய மருத்துவ ஆணையம் (NATIONAL MEDICAL COMMISSION (NMC)) தேவையான ஏழு மணிநேர மாற்றுதிறனாளிகளுக்கான பயிற்சியை அடிப்படை படிப்பிலிருந்து நீக்கியது. இதைச் செய்வதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ மாணவர்களை சரியான நேரத்தில் பின்னுக்குத் தள்ளுவது மட்டுமல்லாமல், குறைந்தபட்சம் இரண்டு சட்டங்களை மீறியது மற்றும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களைப் புறக்கணித்தது.

 

பால்புதுமையினரை குற்றங்கள் அல்லது வக்கிரங்கள் என்று பெயரிடுவதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம்,  திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 (Transgenderpersons (Protection of Rights) Act, 2019)-ஐ மீறியது. மேலும், சென்னை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் எச்சரித்த பிறகு, LGBTQIA+ சமூகத்தைப் பற்றி தவறான  அல்லது பாரபட்சமான தகவல்களை ஏற்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் அக்டோபர் 2021-ஆம் ஆண்டில் கூறியது.


அடிப்படைப் பாடத்தில் இருந்து மாற்றுதிறனாளிகளுக்கான தேவையான  பயிற்சிகளை நீக்குவதன் மூலம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities Act) 2016, தேசிய மருத்துவ ஆணையம் மீறியது.  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் குறைபாடுகள் உள்ளவர்களின் உரிமைகளை சேர்க்க வேண்டும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சியின் ஒரு பகுதியாகமாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி இருக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.

 

தேசிய மருத்துவ ஆணையம், பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, 2019-ஆம் ஆண்டில் மாற்றுதிறனாளிகளுக்கான திறன்களை தனது பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திறன்கள், மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கான தடைகளைக் உடைப்பதற்கும், தரமான பராமரிப்புக்கான நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அடிப்படை உரிமைகள் தேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

திருநங்கைகள் மற்றும் ஊனமுற்றோர் உரிமைக் குழுக்கள் (Transgender and disability rights groups) திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதப்போவதாக குழுக்கள் மிரட்டின.  தவறுகள் உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.


 

தற்போது முடிவுக்கு வந்தாலும், இச்செயல் பொதுமக்கள் மற்றும் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய குழுக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளது. அரசாங்கம்  நலன்களை மனதில் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை இது அவர்களுக்கு ஏற்படுத்தியது. உணர்வுகளையும் பழைய பார்வைகளையும் மாற்றுவது கடினமான செயல்முறையாகும். இந்த சிறிய ஆதாயங்களை ஒரு அரசாங்க அமைப்பு ரத்து செய்வது பாரபட்சமான செயல். வழிகாட்டுதல்களை திரும்பப் பெற்றது ஒரு பெரிய நிவாரணம்.



Original article:

Share: