ஆக்கிரமிப்பு சீனா மற்றும் குழப்பமான அண்டை நாடுகளிலிருந்து சவால்கள்: இந்தியா ஒரு முக்கியமான இராஜதந்திர நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளது - அரண் பிரகாஷ்

 அண்டை நாடுகளில் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகெங்கிலும் நிலையற்ற தன்மை இருப்பதால், இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள திறமையான அரசாட்சி தேவைப்படுகிறது. 


இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான இராஜதந்திர பணிமுறையின் 31 வது கூட்டம் ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்தது. இந்திய வீரர்கள் இப்போது குளிர்ந்த இமயமலைப் பகுதிகளில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை (People's Liberation Army (PLA)) எதிர்கொள்ளும் மற்றொரு குளிர்காலத்திற்கு தயாராகி வருகின்றனர். இராணுவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலம், சீனாவின் ஆக்கிரமிப்பு நகர்வுகளை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், லடாக்கில் சீனா தனது இராணுவ நிலைகளை பலப்படுத்தி வருவதுடன், அருணாச்சல எல்லையில் "எல்லை பாதுகாப்பு" கிராமங்களை உருவாக்கி வருகிறது. 

பாகிஸ்தானை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனா ஆதரித்து வருகிறது. இது தெற்காசியாவில் சீனாவின் கருவியாக செயல்பட பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது. சாலை மற்றும் கடல்சார் முன்முயற்சி போன்ற பிற திட்டங்களை சீனா தொடங்கியுள்ளது.  இந்த திட்டங்கள், பொருளாதார முயற்சிகளாக முன்வைக்கப்பட்டாலும், இந்தியாவை சீனா அரசியல் ரீதியில் சுற்றி வளைப்பது குறித்த நிலைகளை எழுப்பியுள்ளன. 

 

2012-ஆம் ஆண்டில், மாலத்தீவு ஒரு இந்திய நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒரு பெரிய விமான நிலைய நவீனமயமாக்கல் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்கியது. அடுத்த பத்தாண்டில், மாலத்தீவில் "இந்தியாவிற்கு முதலிடம்" (India First) அணுகுமுறை "இந்தியாவை வெளியேற்றுவோம்" (India Out) என்பதான பிரச்சாரத்திற்கு மாறியது.  இது அதிபர் முகமது முய்ஸு ஆட்சிக்கு வர உதவியது. இதேபோல், ஆகஸ்ட் மாதத்தில், வங்கதேசத்தில் பொதுமக்களின் உணர்வு குறித்த தவறான புரிதல் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய சார்பு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, இது இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது. இப்போது, வங்கதேசம் குழப்பமான சக்திகளின் சாத்தியமான ஆட்சியை எதிர்கொள்கிறது. 


இந்த சம்பவங்களும், நேபாளம் மற்றும் இலங்கையுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதும் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவதாக, இந்தியா தன்னை ஒரு புத்திசாலித்தனமான மற்றும் நட்பான "விஸ்வகுரு"வாகக் கருதினாலும், ஏன் இன்னும் அதன் அண்டை நாடுகளால்  "பெரிய சகோதரனாக" அல்லது "கொடுமைப்படுத்துபவராக" பார்க்கப்படுகிறது? இரண்டாவதாக, பிளவுபடுத்தும் உள்நாட்டு அரசியல் மற்றும் போராட்டங்களைத் உருவாக்கும் அறிக்கைகள் நமது அண்டை நாடுகளை எவ்வளவு பாதிக்கின்றன என்பதை நாம் குறைத்து மதிப்பிடுகிறோமா? 


இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற இலக்கிற்க்கு அண்டை நாடுகளின் அமைதியான ஒத்துழைப்பு மிக முக்கியமானவை. இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மற்றும் அணு ஆயுத இராணுவ சக்தியாகும். இது 2047-ஆம் ஆண்டிற்க்குள் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  ஒரு தொழில்நுட்ப பாய்ச்சல் இந்தியாவை ஒரு உற்பத்தி சக்தியாக மாற்றக்கூடும். 2047-ஆம் ஆண்டுக்குள், சிறந்த பொருளாதார மேலாண்மை வறுமை மற்றும் வேலையின்மை வளர்ச்சி போன்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்த முடியும். 


எவ்வாறாயினும், இந்த நம்பிக்கையான சிந்தனையுடன் அரசாங்கம் புத்திசாலித்தனமாக விஷயங்களை நிர்வகிக்கிறது என்று கருதுகிறது. அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் இராஜதந்திர கருவிகளைப் பயன்படுத்தி தேசிய நலன்களைப் பாதுகாக்க ஒரு நாட்டை ஆளும் மற்றும் நிர்வகிப்பது ஒரு கலை  ஆகும். தேசிய பாதுகாப்பு என்பது அரசாட்சியின் மையம். இது உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு நாட்டின் திறன். 


நவீன அரசாட்சி இராஜதந்திரிகள், வீரர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களை வழிநடத்தும் விரிவான மற்றும் நிலையான திட்டங்களை நம்பியுள்ளது. தெளிவான உத்திகள் தற்செயல் திட்டங்களை உருவாக்கவும், வளங்களை ஒதுக்கவும், தேசிய இலக்குகளைப் பின்தொடரும்போது அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கவும் உதவுகின்றன. மாற்றத்தை எதிர்பார்க்கும் மற்றும் உத்திகளை மாற்றியமைக்கும் திறன் முக்கியமானது. சைபர் மற்றும் பயங்கரவாத போர் போன்ற புதிய பாதுகாப்பு சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆளில்லா அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய முறைகள் தேவை. 


இந்தியாவின் அணு ஆயுத அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் பிராந்திய முறைகளைக் கொண்டுள்ளன. இவை இந்தியாவைத் தூண்டி, வளங்களை வளர்ச்சியிலிருந்து திசை திருப்புகின்றன. இந்தியாவின் வளமான பாரம்பரியமான நிலையான கலாச்சாரம் இருந்தபோதிலும், அதன் அரசாட்சி மற்றும் இராணுவ நிலைப்பாடு இந்த எதிரிகளைத் தடுத்து நிறுத்தவில்லை.  இந்த "தடுப்பு தோல்வி"

(“deterrence failure”) ஒரு தெளிவான திட்டமுறை மற்றும் பலவீனமான அரசாட்சி இல்லாததில் இருந்து வருகிறது. தேசிய பாதுகாப்புக்கான பொறுப்பு அரசியல்வாதிகளிடம் உள்ளது என்பதை முடிவெடுப்பவர்கள் அங்கீகரிக்க வேண்டும். மேலும், அது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.  


 


இந்தியாவின் திட்டமுறை உயரடுக்கு (strategic elite) அதன் சிக்கலான பாதுகாப்பு சூழலைக் கையாளும்போது, மூன்று தீவிர நிலைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாவதாக, சீனாவின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கம் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும்போது, தற்போது 85 பில்லியன் டாலராக உள்ள சீனாவுடனான அதன் வளர்ந்து வரும் வர்த்தக பற்றாக்குறையில் இந்தியாவின் பெரிய பாதிப்பு உள்ளது. மின்னணுவியல், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் அரிய பொருட்கள் போன்ற இறக்குமதிகளை இந்தியா சார்ந்திருப்பது சீனாவுக்கு எதிரான அதன் திட்டமுறை விருப்பங்களை கட்டுப்படுத்துகிறது. 


இரண்டாவதாக, பாதுகாப்பு இறக்குமதியை இந்தியா நம்பியிருப்பது அதன் "திட்டமுறை சுயாட்சி" (strategic autonomy) மற்றும் இராணுவ திறன்களுக்கு ஒரு தடையாக உள்ளது. ரஷ்யா, உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இராணுவ தளவாடங்களின் முக்கிய சப்ளையர்களாக உள்ளன. ஆனால் இந்த மூன்று நாடுகளும் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பின் முதுகெலும்பாக இருக்க முடியாது. தற்சார்பு இந்தியா (Atmanirbharta) போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அவை அதிக நேரம் எடுக்கும். புதிய விநியோகச் முறையை நிறுவ இந்தியா ஒரே எண்ணம் கொண்ட நாடுகளுடன் கூட்டு சேர வேண்டும். 


மூன்றாவதாக, அணு ஆயுத தடுப்பில், சீனாவும் பாகிஸ்தானும் ஒரு நன்மையைப் பெற்றுள்ளன. சீனா தனது அணு ஆயுதங்களின் அளவு, விளைச்சல் மற்றும் துல்லியத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் "நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு" என்பதில் இருந்து "முழு ஸ்பெக்ட்ரம் தடுப்பு" (full spectrum deterrence) நிலைக்கு நகர்ந்துள்ளது. இந்தியா அதன் 2003 அணுசக்தி கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமானால், பாகிஸ்தானின் தந்திரங்கள் மற்றும் சீனாவின் பெரிய ஏவுகணைகளிலிருந்து சாத்தியமான அணுசக்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அது திட்டமிட வேண்டும். 


முறையான திட்டமுறை கூட்டணிகள் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடிய அரசாட்சியின் முக்கிய பகுதியாகும். இந்தியா ஆதிக்கத்திற்கு எதிராக பாதுகாக்க வேண்டும் மற்றும் அதன் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான இடத்தை உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப இடைவெளிகளை சரி செய்ய வேண்டும். அதன் இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும்.

 இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள தயாராகும் அதே வேளையில், வெளிப்புற கூட்டாண்மைகளை நாட வேண்டும். தேவைப்பட்டால், அது பழைய நிகழ்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எப்போதும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டும். 


அரண் பிரகாஷ் , முன்னாள் கடற்படைத் தளபதி.



Original article:

Share: