தற்போது, குறைந்த அளவிலான குடும்ப சேமிப்புகள் (household financial savings) இருப்பதால், நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 3%-ஆக வைத்திருக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு வருவாயை விட செலவு அதிகமாக இருந்தால், அது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். 1980-ஆம் ஆண்டில், அதிக நிதிப்பற்றாக்குறைகள் மற்றும் வளர்ந்து வரும் அரசாங்கக் கடன் ஆகியவை கடினமான பணச் சமநிலை நிலைமைக்கும், அதிக வட்டி செலுத்துதலுக்கும் வழிவகுத்தது. இதனால், அரசு தனது வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நிதிநிலை அறிக்கையின் குறிப்பு
2024-25-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் இறுதி நிதிநிலை அறிக்கை, 2026-27-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதே இலக்கு என்றும், ஒன்றிய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக குறையும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை 2024-25-ல் 4.9% இருந்து 2025-26-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஆக குறைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒருங்கிணைப்பு (fiscal consolidation) ஏன் மிகவும் முக்கியமானது?
இரண்டு ஆண்டுகளுக்கான இந்த நிதிப் பற்றாக்குறை அளவுகளுடன், ஒன்றிய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2025-26-ஆம் ஆண்டில் 54% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மதிப்பீடு இரண்டு ஆண்டுகளில் 10.5% என்ற பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி கடன் விகிதத்தை மட்டும் குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிர்ணயிக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management (FRBM)) இலக்குகளை ஒன்றிய அரசுக்கு 40% மற்றும் மாநில அரசாங்கத்திற்கு 60% என்ற இலக்கை காலவரையறையின்றி கைவிடுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையை 4.5% ஆக வைத்திருக்கும் அதே வேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% -11% ஆக வளர்ந்தால், ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சியடையும் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை பராமரிக்க முடியும். இந்த நிதிப் பற்றாக்குறை மட்டத்தில், கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2048-49-ஆம் ஆண்டுக்குள் 48%-ஆகக் குறைந்து. மொத்த உள்நாட்டு உற்பத்தி கடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே இருக்கும்.
மாநில அரசுகள் அவற்றின் சொந்த நிதி பொறுப்புடைமை சட்டங்களை (Fiscal Responsibility Legislations (FRLs)) கொண்டுள்ளன மற்றும் நிதிப் பற்றாக்குறையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) 3% ஆக நிர்ணயித்துள்ளன. இருப்பினும், அவர்கள் தங்கள் இலக்குகளை கைவிட்டு, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கவனம் செலுத்தலாம். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையை முறையே 4.5% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக பராமரித்தால், ஒருங்கிணைந்த பற்றாக்குறை பல ஆண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% ஆக இருக்கும்.
கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையால், தனியார் துறை மூலம் கிடைக்க கூடிய கிடைக்கக்கூடிய முதலீட்டு நிதிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இந்தச் சூழல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும்.
பன்னிரண்டாவது நிதிக்குழு, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா துறைகளுக்குக் கிடைக்கும் பணம் வீட்டுச் சேமிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இருந்து வருகிறது என்று கூறியது. இந்தப் பணத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் பங்கை கடனாகப் பெறப்படலாம் என்று வாதிட்டது.
பன்னிரண்டாவது நிதிக்குழு (அதன் அறிக்கையின் பத்தி 4.41-ல்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% குடும்ப சேமிப்பு, 1.5% நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடன் சேர்ந்து, அரசாங்க நிதிப் பற்றாக்குறை 6% ஆகவும், தனியார் நிறுவனங்கள் 4%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% கடன்களை அரசு சாரா பொது நிறுவனங்கள் வாங்குகின்றன என குறிப்பிட்டது.
சமீப காலமாக, வீட்டு சேமிப்பு குறைந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில், வீட்டு நிதி சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3% ஆக இருந்தது. இது முந்தைய நான்கு ஆண்டுகளில் 7.6% ஆக இருந்தது. குடும்ப சேமிப்பு 5.3% ஆகவும், வெளிநாட்டு மூலதன வரவு (foreign capital inflow) சுமார் 2% ஆகவும் இருந்தால், மொத்த முதலீட்டு உபரி (total investible surplus) 7.3% ஆகும். இந்த உபரியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% ஆக இருக்கும். நிதிப் பற்றாக்குறை சரி செய்யபட்டால், குடும்ப சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும்.
நிலையான கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறை
நிதிப்பற்றாக்குறைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதத்தைக் குறைக்க, நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைச் சரிசெய்ய வேண்டும்.
2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட இந்தியாவின் நிதிப் பொறுப்புக் கட்டமைப்பானது, மாநிலங்கள் தங்கள் நிதிப் பொறுப்புச் சட்டங்களை (Financial responsibility laws (FRLs)) ஏற்றுக்கொள்வதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதிப் பற்றாக்குறை அளவுகளுக்கான வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது.
இந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதம் நிதிப் பொறுப்புச் சட்ட விதிமுறைகளை விட அதிகமாக இருந்தால், வருவாய் வரவுகளுக்கு (revenue receipts) வட்டி செலுத்தும் விகிதம் அதிகமாக இருக்கும். இது மற்ற செலவினங்களுக்கான அரசாங்கத்தின் வருவாயைக் கட்டுப்படுத்துகிறது.
2016-17-ஆம் ஆண்டில் வரிப் பகிர்வைத் (tax devolution) தவிர்த்து, வருவாய் ரசீதுகளுக்கான ஒன்றிய அரசின் வட்டி செலுத்துதலின் விகிதம் 35%-ஆகக் குறைந்தது. இருப்பினும், 2021-22-ஆம் ஆண்டு முதல் 2023-24-ஆம் ஆண்டு வரை, இந்த விகிதம் சராசரியாக 38.4% ஆக அதிகரித்துள்ளது. வரி பகிர்வு மற்றும் மானியங்கள் உட்பட அனைத்து வருவாய் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளும்போது, இந்த விகிதம் சராசரியாக 51.6% ஆக இருந்தது.
ஒரு சர்வதேச ஒப்பீடு
பல நாடுகளில் இந்தியாவை விட அரசாங்க கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகமாக உள்ளது. இருப்பினும், வருவாய் ரசீதுகளுடன் ஒப்பிடும்போது அவர்களின் வட்டி செலுத்தல்கள் மிகக் குறைவாக உள்ளது. 2015-19-ஆம் ஆண்டுக்கு இடையில், வருவாய்க்கு வட்டி செலுத்துதல் விகிதம் ஜப்பானில் சராசரியாக 5.5%, இங்கிலாந்தில் 6.6% மற்றும் அமெரிக்காவில் 8.5% ஆக இருந்தது. இதற்கு மாறாக, 2015-16-ஆம் ஆண்டு முதல் 2019-20-ஆம் ஆண்டு வரை, வருவாய் ரசீதுகளுக்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த வட்டி செலுத்துதல் (combined interest payments) விகிதம் சராசரியாக 24% ஆக இருந்தது, இடமாற்றங்களைக் கணக்கிட்ட ஒன்றிய அரசின் விகிதம் சராசரியாக 49% ஆக இருந்தது.
சமீபத்திய கொள்கைகள் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை ஒரு முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றன. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கான இலக்கு அல்லது பாதையை குறிப்பிடவில்லை. பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையின் சிக்கல் என்னவென்றால், COVID-19 தொற்றுநோய் போன்ற இயற்கை பேரிடர்கள் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை கடுமையாக மாற்றின. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொற்றுநோய் காரணமாக 2019-20-ஆம் ஆண்டில் 50.7%-ஆக இருந்து 2020-21-ஆம் ஆண்டில் 60.7% ஆக உயர்ந்தது.
தொற்றுநோய்க்கு முந்தைய கடன் அளவுகளுக்குத் திரும்புவது மெதுவாக உள்ளது. இன்னும் அந்த இலக்கிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். பொருளாதார பின்னடைவுகளுக்குப் பிறகு கடனுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களை சரிசெய்வது அவற்றை மீண்டும் கீழே கொண்டு வருவதை விட வேகமாக இருக்கும். அரசாங்கங்கள் பெரும்பாலும் கடன் அளவைக் குறைப்பதில் தாமதப்படுத்துகின்றன. வருவாயுடன் ஒப்பிடும்போது வட்டி அதிகமாக செலுத்துகின்றன.
முதலீடு செய்ய போதுமான பணம் இல்லை என்றால் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதில் எந்தப் பயனும் இல்லை. தற்போதைய, குறைந்த குடும்பச் சேமிப்பைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% வைத்திருக்க வேண்டும். இந்த இலக்கை அடைய தெளிவான திட்டம் வேண்டும். இந்த விதியை தளர்த்துவது மோசமான நிதி நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்.
சி.ரங்கராஜன், பேராசிரியர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்.
டி.கே. ஸ்ரீவஸ்தவா, பேராசிரியர் மற்றும் பதினாறாவது நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.