சிறந்த நிதி வசதியும் (fiscal space), மாநில அளவில் நல்ல செயல்பாட்டுக் கட்டமைப்புகளும் சுகாதாரத் திட்டங்களுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் செயல்திறனில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஒன்றிய பட்ஜெட்டில் சுகாதார ஒதுக்கீடுகளை முழுமையாகப் பயன்படுத்த, பல மாநில அளவிலான காரணிகள் முக்கியம். இந்த நிதிகளில் பெரும்பாலானவை ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு (Centrally Sponsored Schemes (CSS)) செல்கின்றன. இதில் மாநிலங்கள் செலவில் கணிசமான பகுதியை பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், அவற்றை செயல்படுத்துவதற்கும் மாநில அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியம். இந்த திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளின் செயல்திறன் மாநில அளவிலான காரணிகளைப் பொறுத்தது. இந்த காரணிகளில் நிதி இடம் மற்றும் மாநில அளவில் செயல்பாட்டு கட்டமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இப்போது, ஒன்றிய அரசு மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இரண்டு முக்கியத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. அவை பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM)) மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனித வளங்கள் (Human Resources for Health and Medical Education (HRHME)).
முதலாவதாக, PM-ABHIM சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை (building health and wellness centres (AB-HWCs)) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி அளவிலான பொது சுகாதார பிரிவுகளை (block-level public health units (BPHUs)) உருவாக்குவதையும், ஒருங்கிணைந்த மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்கள் (integrated district public health laboratories (IDPHLs)) மற்றும் தீவிர பராமரிப்பு மருத்துவமனை தொகுதிகளை (critical care hospital blocks (CCHBs)) உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தொற்றுநோய்கள் போன்ற எதிர்கால அவசரநிலைகளுக்கு இந்தியாவை சிறப்பாக தயார்படுத்துவதே குறிக்கோள்.
இரண்டாவதாக, மருத்துவ ஊழியர்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய மருத்துவ, நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகளை உருவாக்குதல். ஏற்கனவே, உள்ள கல்லூரிகளில் அதிக இடங்களை சேர்த்தல். இது மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதிலும், மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளை புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் இணைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
குறைந்த நிதி பயன்பாடு (Low fund utilisation)
ஒன்றிய அரசு கடந்த மூன்று பட்ஜெட்களில், இந்த முயற்சிகளுக்கு நிதியை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதை சமீபத்திய மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துகாட்டாக, பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM)) இயக்கத்தின், செலவு 29% மட்டுமே, 2022-23ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (‘Revised Estimate’) பட்ஜெட் மதிப்பீட்டில் 50% ஆக இருந்தது. ஆனால், இறுதிச் செலவு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனித வளங்கள் (Human Resources for Health and Medical Education (HRHME)) இயக்கத்தை பொறுத்தவரை, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய இரண்டிலும் பட்ஜெட் நிதியில் சுமார் 25% மட்டுமே பயன்படுத்தப்பட்டது. குறைந்த பயன்பாட்டின் காரணமாக, இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது முழு பட்ஜெட்டில் PM-ABHIM மற்றும் HRHME ஆகிய இரண்டிற்கும் பட்ஜெட் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM)) இயக்கத்திற்கு நிதி ஏன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை பல காரணங்கள் விளக்கக்கூடும். முதலாவதாக, சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் (building health and wellness centres (AB-HWCs)) சுமார் 60% நிதியை 15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மானியங்களிலிருந்து பெற வேண்டும். தேசிய பொது நிதி மற்றும் கொள்கை (National Institute of Public Finance and Policy) நிறுவனம் நடத்திய ஆய்வில், 2021-22 மற்றும் 2023-24-க்கு இடையில் 15-வது நிதி ஆணையத்தின் சுகாதார மானியங்களில் 45% மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.
இந்த மானியங்களின் சிக்கலான கட்டமைப்பு அவற்றைப் பயன்படுத்துவதை கடினமாக்கியது என்று மாநில அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டாவதாக, ஒருங்கிணைந்த மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களைப் (integrated district public health laboratories (IDPHL’s)) பொறுத்தவரை, நகலெடுப்பதைத் தவிர்ப்பதற்காக மாநிலங்கள் வெவ்வேறு திட்டங்களிலிருந்து பொது சுகாதார ஆய்வகங்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. இதற்கு மாநில அளவில் தற்போதுள்ள கட்டமைப்பில் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. மூன்றாவதாக, பகுதி அளவிலான பொது சுகாதார பிரிவுகள் (block-level public health units (BPHUs)) மற்றும் தீவிர பராமரிப்பு மருத்துவமனை பகுதிகள் (critical care hospital blocks (CCHBs)) அனைத்து கூறுகளும் கட்டுமானத்தை உள்ளடக்கியது. கடுமையான நடைமுறைகள் காரணமாக நிதிப் பயன்பாடு பெரும்பாலும் தாமதமாகிறது. மேலும், ஒரே மாதிரியான செயல்பாடுகளுக்கு பல நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பது கூடுதல் சிக்கலை உருவாக்குகிறது.
பேராசிரியர் பற்றாக்குறை (Faculty shortage)
சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனித வளங்கள் (Human Resources for Health and Medical Education (HRHME)) திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு ஒதுக்கீடுகள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டாலும், ஆசிரியர் ஆசிரிய பணியிடங்களை நிரப்புவது இன்னும் சவாலாக உள்ளது. சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் (Centre for Social and Economic Progress (CSEP)) நடத்திய ஆய்வில், புதிதாக நிறுவப்பட்ட 18 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் 11 நிறுவனங்களில் 40% ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலங்களில் மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் நிலைமை இன்னும் மோசமாகவுள்ளது.
உதாரணமாக, 2019 மற்றும் 2021-க்கு இடையில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்ட உத்தரபிரதேசத்தில், 2022-ல் 30% ஆசிரியர் பதவிகள் காலியாக இருந்தன. நிபுணர்களின் பற்றாக்குறை மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக அமைப்பது அல்லது மேம்படுத்துவதற்கான முயற்சிகளை பாதிக்கலாம். இந்த பிரச்சினை பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM)) திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள தீவிர பராமரிப்பு மருத்துவமனை பகுதிகளையும்(critical care hospital blocks (CCHBs)) பாதிக்கிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்களின்படி, நகர்ப்புற கூட்டு சமூக சுகாதார மையங்களில் (Community Health Center (CHCs)) மூன்றில் ஒரு பங்கு சிறப்புப் பணியிடங்களும், கிராமப்புற சுகாதார மையங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் மார்ச் 2022-ல் காலியாக உள்ளன.
மாநிலங்களில் நிதி இடம்
PM-ABHIM மற்றும் HRHME போன்ற திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட உள்கட்டமைப்பை பராமரிப்பதற்கான தற்போதைய செலவுகளை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இதற்கு அதிக நிதி அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு PM-ABHIM திட்டத்தின் கீழ் மனித வளங்களுக்கு 2026 வரை மட்டுமே நிதியளிக்கும். மூலதன செலவினங்கள் உற்பத்தி விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை உறுதிப்படுத்த இந்த காலத்தைத் தாண்டி தொடர்ச்சியான செலவுகளை ஈடுகட்ட மாநிலங்கள் திட்டமிட வேண்டும். மற்ற ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்கள் (Centrally Sponsored Schemes (CSS)) மற்றும் அவர்களின் சொந்த சுகாதாரத் திட்டங்களுக்கு தொடர்ந்து பங்களிக்கும் அதே வேளையில், இந்த முயற்சிகளை ஆதரிப்பதற்கான நிதி ஆதாரங்களையும் மாநிலங்கள் கண்டறிய வேண்டும்.
இறுதியாக, மூலதன செலவினங்களை பயனுள்ள சுகாதார விளைவுகளாக மாற்றுவது பல முக்கிய காரணிகளை சார்ந்துள்ளது. கூடுதல் தொடர்ச்சியான செலவுகளை நிர்வகிப்பதற்கான மாநிலங்களின் திறன், ஊழியர்கள் பற்றாக்குறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்தல், திட்டங்கள் மற்றும் மானியங்களை செயல்படுத்துவதற்கான பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். மூலதனத் திட்டங்களுக்கான (capital expenditures) செலவு பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய இந்தக் காரணிகள் அவசியம்.
மிதா சவுத்ரி, புது தில்லியில் உள்ள தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார்.