அம்பேத்கரின் கொள்கைகள் வழியே உள்-வகைப்பாடு தீர்ப்பு -பி.எஸ்.வாக்மரே, ஷிவம் மோகா

 பட்டியல் சாதிகளுக்குள் (Scheduled Castes) உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஒவ்வொரு 'சாதி'யின் வெவ்வேறு சமூக சூழ்நிலைகளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கணக்கில் எடுத்துக்கொள்கிறது. 


  ஆகஸ்ட் 1, 2024 அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இடஒதுக்கீடுகளின் உள்-வகைப்பாடு தொடர்பாக பஞ்சாப் மாநிலம் மற்றும் பிறர் எதிராக டேவிந்தர் சிங் மற்றும் பிறர் (State of Punjab and Ors. vs Davinder Singh and Ors) வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு இந்திய நீதித்துறையில், குறிப்பாக சமூக நீதித் துறையில் ஒரு முக்கியமான படிநிலையைக் கருதப்படுகிறது. இது சமூக நீதித்துறையை ஆதரிக்க அரசியலமைப்பு முறைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் பல பட்டியல்சாதிகளுக்குள் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவுகளுக்கு சமூக நீதி சென்றடைவதை உறுதி செய்ய அரசியலமைப்பு முறைகளைப் பயன்படுத்துவதை இந்தத் தீர்ப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பட்டியல் சாதியினர் மத்தியில் சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அம்பேத்கரின் கொள்கைகளுடன்  ஒத்துப்போகிறது. இது பட்டியல் சாதியினரிடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்துகிறது. இருப்பினும், தீர்ப்பின் சில பகுதிகள், வர்ண அமைப்பு மற்றும் க்ரீமி லேயர் பற்றிய கருத்துகள் பரவலாக இருந்தன. 

 

சமூக நீதியும் (Social justice) பி.ஆர்.அம்பேத்கரின் போராட்டமும் 


  பி.ஆர்.அம்பேத்கர் மிகவும் ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கு சமூக நீதியைப் பெறுவதற்கு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். தீண்டத்தகாதவர்களுக்கான கலாச்சார உரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இருப்பினும், அவரது முயற்சிகள் பெரும்பாலும் மற்ற சாதி அமைப்புகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

 ஒவ்வொரு சாதிக்கும் (துணைக்குழு) சமூகப் படிநிலையில் ஒரு தனித்துவமான நிலை உள்ளது என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். சாதி அமைப்பினுள் உள்ள சிக்கலான உள் பிளவுகளை அவர் சுட்டிக்காட்டினார்."


ஜனவரி, 31 1944-அன்று கவுன்பூரில் நடைபெற்ற பட்டியல் சாதியினர் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, மூன்று பட்டியல் சாதி அமைப்புகளின் வரவேற்பு உரைகளுக்கு அம்பேத்கரின் பதிலை அப்போதைய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட சாதியினர் தீண்டாமையை அகற்றக் கோரிக்கை விடுக்கும் போது, ​​பட்டியலிடப்பட்ட சாதியினரிடையே உள்ள உள் பிளவுகளைத் குறைப்பதற்கான தங்கள் பொறுப்பை பட்டியலிடப்பட்ட சாதியினர் உணர வேண்டும். சமூக நீதிக்கான அவரது பங்களிப்பு கோட்பாட்டு பயிற்சிக்கு அப்பாற்பட்டது. சாதிய படிநிலையை தகர்க்க அவரது நடைமுறை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.


மகத் சத்தியாகிரகம் (Mahad Satyagraha) மற்றும் காலாராம் கோயில் நுழைவு இயக்கம் (Kalaram temple entry movement) போன்ற இயக்கங்களை வழிநடத்தி, சாதிய பாகுபாட்டிற்கு எதிராக அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இந்த இயக்கங்கள் பட்டியலிடப்பட்ட சாதிகள் எதிர்கொள்ளும் கலாச்சார ரீதியான பாகுபாடுகளை எடுத்துக்காட்டின. குறிப்பிட்ட பிற சக்திகளின் எதிர்ப்பையும் மீறி, ஒரு சமூகத்தில் பின்தங்கிய சமுகத்திற்க்கு நிதி கிடைப்பதற்கு அம்பேத்கர் தொடர்ந்து போராடியது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


மராத்வாடாவில் பட்டியலிடப்பட்ட சாதி உணவு குறித்து ஒரு புத்தகத்தை எழுதிய சாஹு படோல் ஒரு ஊடக நேர்காணலில், வெவ்வேறு சாதிகள்  வெவ்வேறு அளவிலான பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார். கிராமத்திலிருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், " மாங்  மிகவும் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டாலும், அவர்களுக்கு மேலே மகர்கள் இருந்தனர். மாங் மற்றும் மஹர்கள் சாமார்களால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர் கிராமத்தில் மீதமுள்ளவர்கள்  இந்த சமூகங்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தனர். இது தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை இருப்பதை உறுதிப்படுத்துகிறது. அம்பேத்கர் தனது சமூகவியல் ஆய்வுக் கட்டுரையிலும் இதைப் பற்றி வலியுறுத்தினார். 


சமூக நீதிக்கு இன்னும் விரிவான அணுகுமுறை தேவை என்பதை இந்த புள்ளிகள் விவரிக்கின்றன. நீதிமன்றத்தின் துணை வகைப்பாடு தீர்ப்பு இந்த தேவையை, குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது நிவர்த்தி செய்கிறது. இந்த தீர்ப்பை அம்பேத்கரின் சமூக நீதியின் இலட்சியங்கள் (Ambedkar’s social justice ideals) மூலம் பார்க்க முடியும். இது பல்வேறு அனுபவங்களை எடுத்துக்காட்டுகிறது. பல்வேறு சாதியினரிடையே உள்ள பாகுபாடு, இந்த வேறுபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலம், ஒவ்வொரு சாதியினரின் தனித்துவ சமூகவியல் உண்மைகளையும் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பு, பட்டியலிடப்பட்ட சாதிகள் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


 உள்ளிருந்து வரும் விமர்சனம் 


உள்-வகைப்பாடு (sub-classification) முடிவு பல மாநிலங்களில் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், இது சில பட்டியலிடப்பட்ட சமூகங்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. முன்னணி பட்டியலிடப்பட்ட சமூக குழுக்கள் தங்கள் அரசியல் செல்வாக்கு குறைந்துவிடும் என்று கவலைப்படுகின்றன. உள்-வகைப்பாடு தலித் தொகுதிகளைப் பிளவுபடுத்தி பட்டியலிடப்பட்ட சமூக  இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால், இந்தப் பார்வை பட்டியலிடப்பட்ட இயக்கம் என்று ஒன்று இருக்கிறது என்று தவறாகக் கருதுகிறது. பட்டியலிடப்பட்ட சமூக அரசியல் எப்போதுமே வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தது என்பதை பல சமூகவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. 


உதாரணமாக, 30 ஆண்டுகால மடிகா தண்டோரா இயக்கம் (Madiga Dandora movement) அம்பேத்கரிய கொள்கைகளிலிருந்து வேறுபட்டதாக தவறாகப் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில், லோக்ஷாஹிர் அன்னாபாவ் சாத்தே போன்ற பிற தலைவர்களுடன் அம்பேத்கரின் படத்தை மாங் சாதி இயக்கங்கள் இடம்பெறச் செய்கின்றன. ஒவ்வொரு சாதியும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், சமூகநீதி என்ற பரந்த அம்பேத்கரிய சிந்தனையின்கீழ் அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. 


  வட இந்தியாவில் சில பட்டியலிடப்பட்ட சாதி அமைப்புகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் பட்டியலிடப்பட்ட சாதிகளின் கூட்டு அடையாளத்திற்கும் அணிதிரட்டலுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தவறான நடவடிக்கையாகும். இதற்கு நேர்மாறாக, உள்-வகைப்பாடு பற்றிய விவாதத்தை தென்னிந்தியா பெரும்பாலும் தீர்த்து வைத்துள்ளது.  அங்குள்ள பெரும்பாலான பட்டியலிடப்பட்ட சாதி அமைப்புகள் பட்டியலிடப்பட்ட சாதியினர்களை உள்-வகைப்படுத்துவதை ஆதரிக்கின்றது. 


  இந்தத் தீர்ப்பு பிரிவினைகளை உருவாக்கக்கூடும் என்று வாதிடும் வட இந்திய பட்டியலிடப்பட்ட சாதி அமைப்புகளின் விமர்சனங்கள், பட்டியலிடப்பட்ட சாதி சமூகக் கட்டமைப்புகள் குறித்த தவறான புரிதலைப் பிரதிபலிக்கிறது.  துணை வகைப்பாட்டை ஆதரிப்பது சாதிமட்டத்தில் சமூக நீதி அரசியலை மேம்படுத்தலாம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி அடையாளத்தை வலுப்படுத்தலாம். மான்யவர் கன்ஷிராம் போன்ற தலைவர்களால் முன்மொழியப்பட்ட நியாயமான பிரதிநிதித்துவ யோசனைகளுடன் இது பொருந்தும். ஒவ்வொரு குழுவிலும் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.



 நீண்ட போராட்டத்தின் பிரதிபலிப்பு


வட இந்தியாவில் வால்மீகிகள், முசாஹர்கள், தெற்கில் மடிகர்கள் மற்றும் அருந்ததியர்கள் போன்ற விளிம்புநிலை சமூகங்களின் போராட்டங்களை முன்னணி பட்டியலிடப்பட்ட சாதி பிரிவுகளின் விமர்சனங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த தீர்ப்பு பல ஆண்டுகளாக அடிமட்ட செயல்பாட்டையும் துணை வகைப்படுத்தலுக்கான கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. இது மடிகா இட ஒதுக்கீடு போராட்ட சமிதி (Madiga Reservation Porata Samithi (MRPS)), மகாராஷ்டிராவில் மாங் சமூக மாநாடுகள் மற்றும் வட இந்தியாவில் வால்மீகி இயக்கங்கள் போன்ற குழுக்களின் தொடர்ச்சியான நீதி முயற்சிகளின் விளைவாகும். 


தீர்ப்பு எப்படி அமல்படுத்தப்படும் என்ற கவலைகள் உள்ளன. இருப்பினும், 2004-ஆம் ஆண்டில் சின்னையா தீர்ப்புக்கு முன்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் துணை வகைப்பாட்டின் வெற்றி அத்தகைய நடவடிக்கைகள் செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது. 

சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த தீர்ப்பு நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் நீதிக்கான வரலாற்று போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. 

நீதிபதிகளின் உறுதிமொழி முக்கியமானது. ஏனெனில், பட்டியலிடப்பட்ட சாதி வகை ஒரே மாதிரியானது அல்ல. அவை வெவ்வேறு தேவைகளைக் கொண்ட தனித்துவமான  சாதிகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. பட்டியலிடப்பட்ட சமூகத்தை சாதிகள் ஒரே குழுவாக அங்கீகரிப்பது ஒவ்வொரு குழுவின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். பட்டியலிடப்பட்ட சமூகம் என்பது ஒரே மாதிரியானது என்ற கருத்து. பட்டியலிடப்பட்ட சமூகத்திற்குள்ளேயே கூட, கலப்புத் திருமணத்திற்கு தடைகள் உள்ளன என்ற உண்மையை புறக்கணிக்க முடியாது.

 

சவால்கள் இருக்கும்போது, சமூக நீதி மற்றும் அனைத்து பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான தீர்ப்பின் திறனைப் பார்ப்பது முக்கியம். அம்பேத்கர் கற்பனை செய்தபடி, சகோதரத்துவ உணர்வுடன் தீர்ப்பை பார்ப்பது மிகவும் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க முக்கியமானது. இது இடஒதுக்கீடு முறையை சீரிய முறையில் செயற்படுத்த உதவும். அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த லாபங்களுக்காக தீர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை அம்பேத்கரிய இயக்கம் உறுதி செய்ய வேண்டும். 


பாரம்பரிய இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை தாண்டி அனைத்து பிரச்சினைகளிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை தனியார் துறைக்கு விரிவுபடுத்துவது மற்றும் நில மறுவிநியோகத்தைத் தொடர்வது ஆகியவை முக்கிய முயற்சிகளில் அடங்கும். பிரதிநிதித்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்து பட்டியலிடப்பட்ட சமூகங்களுக்கும் பொருளாதார நடவடிக்கைகளை பெறுவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம். 


பேராசிரியர் பி.எஸ்.வாக்மரே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் ஆளுமை ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆவார். 

சிவம் மோகா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆராய்ச்சி அறிஞராக உள்ளார்.



Original article:

Share: