உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இந்தியா ஒரு மாற்று வளர்ச்சிப் பாதையை வழங்குகிறது -சச்சின் சதுர்வேதி

 நிலைத்தன்மை, சுகாதாரப் பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம் போன்ற துறைகளில் கொள்கை வகுப்பதில் அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், மற்ற வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு புதிய திசையை வழங்க முடியும். 


பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் (Voice of Global South Summit (VoGSS)) "டெவலப்மென்ட் காம்பாக்ட்" (Development Compact) என்ற புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார். திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப பகிர்வு, வளர்ச்சிக்கான வர்த்தகம், மானியங்கள் மற்றும் சலுகை நிதி ஆகிய ஐந்து வகையான ஈடுபாடுகளை சமநிலைப்படுத்துவதை இந்த கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தியாவின் வளர்ச்சி ஒப்பந்தம் வெற்றி பெற்றால், உலகளாவிய தெற்கத்திய நாடுகளுடன் ஈடுபடுவதற்கான புதிய தரத்தை அமைக்கும். 


உலகளாவிய தெற்கு பகுதி கடுமையான கடன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) 2023 படி, வளரும் நாடுகளின் பொதுக் கடன் 2023-ஆம் ஆண்டில் $29 டிரில்லியனை எட்டியது.  இந்த கடனுக்கான அவர்களின் நிகர வட்டி 847 பில்லியன் டாலர்.  ஐம்பத்தி நான்கு வளரும் நாடுகள் தங்கள் வருவாயில் 10% க்கும் அதிகமாக  செலவிட்டன.  


கூடுதலாக, வளரும் நாடுகள் 2022-ஆம் ஆண்டில் எதிர்மறையான நிகர வள பரிமாற்றத்தைக் கண்டன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (The Organization for Economic Cooperation and Development (OECD)) நாடுகள் தங்கள் ஐ.நா இலக்கான மொத்த தேசிய உற்பத்தியில் 0.7% அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியாக ((official development assistance) (ODA)) வழங்குவதையும், அவற்றின் $100 பில்லியன் காலநிலை மாற்ற உறுதிப்பாட்டையும் பூர்த்தி செய்யத் தவறியதால் கடன் நெருக்கடி மோசமடைந்துள்ளது. 


உலகளாவிய தெற்கு வளர்ச்சி என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரீகனிசம் மற்றும் தாட்சரிசத்தால் (Reaganism and Thatcherism’s approach) உந்தப்பட்ட உலகக் கொள்கையிலிருந்து மாறியது வளரும் நாடுகளுக்கான கொள்கை இடத்தை பிடித்தது. இது ராவுல் ப்ரெபிஷ் மற்றும் பிறரின் மைய-சுற்றளவு கோட்பாடு (centre-periphery theory) பற்றிய கவலைகளை வலுப்படுத்தியது. உலகளாவிய தெற்கு  பகுதியின் சரிந்த பொருளாதார வளர்ச்சி, சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான மாற்று வளர்ச்சிப் பாதைகள்  புதிய நம்பிக்கையை வழங்குகிறது. 


வளர்ச்சி அனுபவங்களையும், கொள்கை நுண்ணறிவுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் கருப்பொருள், "நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய தெற்கை மேம்படுத்துதல்", அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் தெற்கு முன்னோக்குகளின் அடிப்படையில் புதிய வளர்ச்சி முன்னுதாரணங்களை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது. 


இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சி முயற்சிகள் உலகளாவிய தெற்கிற்கு ஐந்து வாய்ப்புகளை வழங்குகின்றன: 


நிலைத்தன்மை: 


சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (Lifestyle for Environment (LiFE)) வலியுறுத்துதல், நிலையான வளர்ச்சி இலக்குகளை மீண்டும் புதுப்பித்தல் மற்றும் சூரிய பேனல்கள் மற்றும் சூரிய பண்ணைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல். 


சுகாதார பாதுகாப்பு: 


"ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" (“One World One Health”) என்ற கருத்தை ஊக்குவித்தல்.  இந்தியாவின் ஆரோக்கிய மைத்ரி மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் தீவுகளில் மருத்துவமனைகள் மற்றும் மக்கள் மருந்தக மையங்களை உருவாக்குவதற்கான ஆதரவு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 


மனிதாபிமான பதில்: 


பப்புவா நியூ கினியா, கென்யா, காசா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் நெருக்கடி காலங்களில் இந்தியாவின் பங்கு திறமையான வழிமுறைகளை கையாண்டது. 


நிதி உள்ளடக்கம்: 


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் கடைசி மைல் இணைப்பை ஊக்குவித்தல்.  டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த 12 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை செய்துள்ளது. 





கல்வி மற்றும் திறன்கள்: 


கல்வி, திறன்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர இணைப்புகளை வலுப்படுத்துதல். 


இந்தியாவின் வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நிறுவன கட்டமைப்புகள் முக்கியமானதாக இருக்கும். அறிவு மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்புக்கான வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் (Voice of Global South Summit (VoGSS))  பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார். இத்தகைய நிறுவனங்கள் அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கலாம் மற்றும் அணுகல், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள முடியும். 


மற்ற குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் பின்வருமாறு: 


  1. திறன் மேம்பாட்டிற்காக 2.5 மில்லியன் டாலர் சிறப்பு நிதி. 


  1. வர்த்தக கொள்கை வகுப்பதில் பயிற்சிக்கு $1 மில்லியன். 


     3)   $25 மில்லியன் ஆரம்ப பங்களிப்புடன் ஒரு சமூக தாக்க நிதி. 


இந்தியா தற்போது ஆண்டுதோறும் சுமார் 7.5 பில்லியன் டாலரை பல்வேறு உலகளாவிய தெற்கு கூட்டாளர்களுக்கு வழங்குகிறது. 


உலகளாவிய தெற்கு ஒன்றிணைந்து பொதுவான பிரச்சனைகள் நிவர்த்தி செய்ய பிரதமர் மோடியின் அழைப்பு முக்கியமானது.  


அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதிப்புக்கு மத்தியில் இந்த பிரச்சினைகளை விவாதிக்க வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் (Voice of Global South Summit (VoGSS))  ஒரு தளமாக செயல்படுகிறது. 




இடைக்கால அரசாங்க ஆலோசகர் முஹம்மது யூனுஸின் பங்கேற்பு உட்பட வங்கதேச சமீபத்திய நிகழ்வுகள், நிலையற்ற சக்திகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.



Original article:

Share: