தேர்தல் நெருக்கத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது 'வாக்காளர்களுக்கான லஞ்சமாக' கணக்கிடப்படுமா? -குணால் சங்கர்

 நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சரின் மஜ்ஹி லட்கி பஹின் யோஜனாவை செயல்படுத்தியதே அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நேரடி பலன் பரிமாற்றத் திட்டம், தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, ஜூலை 2024-ல் மகாராஷ்டிர அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 


சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியப் பிரதேசத்தைப் போலவே, ஆண்டுக்கு ரூ .2.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட 21 முதல் 65 வயதுக்குட்பட்ட ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இத்தகைய திட்டங்கள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குணால் சங்கர் இது குறித்து விவாதிக்க ரீதிகா கேரா மற்றும் விகாஸ் ராவல் ஆகியோரிடம் கலந்துரையாடுகிறார்.  


விகாஸ் ராவல்: மக்களின் தேவைகளின் அடிப்படையில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், இந்தத் திட்டங்கள், முறையான மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை இல்லாமல், தேர்தலுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டால், அவை வலுவான சமூக நல அமைப்பை உருவாக்காமல், தேர்தல் கருவிகளாக மட்டுமே செயல்பட்டால் அது பல்வேறு வழிகளில் சிக்கலை ஏற்படுத்தும்.


ரீதிகா கேரா: சிறிது காலத்திற்கு முன்பு, தென் மாநிலங்களில், அரசியல் கட்சிகள் கலப்பு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தன, ஊடகங்கள் இந்த வாக்குறுதிகளை இலவசங்கள் என்று அழைத்தன. இந்த வாக்குறுதிகளின் நவீன பதிப்பாகவே பணப் பரிமாற்றங்களை நான் பார்க்கிறேன். முந்தைய வாக்குறுதிகளை இலவசங்கள் என்று அழைப்பது போல், லஞ்சம் என்று முத்திரை குத்துவது தவறானது. சில பணப் பரிமாற்றங்களைப் பற்றி எனக்கு கவலைகள் உள்ளன. ஆனால், முதியோர் ஓய்வூதியம் (old age pensions) மற்றும் மகப்பேறு சலுகைகள் (maternity benefits) போன்றவற்றை நான் ஆதரிக்கிறேன். நீங்கள் சுட்டிக் காட்டுவது என்னவென்றால், இந்த வாக்குறுதிகள் நமது ஜனநாயகத்தில் ஒரு குறைபாட்டைக் காட்டுகின்றன. 


சாதாரண மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தேர்தலின் போது மட்டுமே அரசியில் கட்சிகள் பதிலளிக்கின்றன. மேலும், வாக்குறுதிகள் பண பரிமாற்றம் போன்ற சிறிய, குறுகிய கால ஆதாயங்களாக குறைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பெரும்பாலும் குறிப்பிட்ட சில மக்கள், எதை வழங்கினாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரவர்கத்தால் பெரிதும் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு, அவர்கள் தங்களுக்கு கிடைத்ததை சரியாக எடுத்துக் கொள்வார்களா? இதுபோன்ற வாக்குறுதிகள் - கலப்பு தேர்தல் வாக்குறுதிகள் அல்லது பணப் பரிமாற்றம், உண்மையில் வாக்காளர் நடத்தையை எவ்வளவு பாதிக்கிறது? அதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு வாக்காளராக, இதுபோன்ற திட்டங்கள் மூலம் எனக்கு வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதை எது தடுக்கும்? அதே சமயம், நாட்டிற்கு என்னவொரு அழுத்தமான பிரச்சினை என்பதை சுதந்திரமாகச் சிந்தித்து, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள் ?

 

அப்படியானால், சிறந்த வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் தோல்வி மற்றும் அதற்கு பதிலாக ஒரு முறை பணப் பரிமாற்றத் திட்டங்களுடன் (direct benefit transfer (DBT)) மாற்றப்பட்டதா? 


ரீதிகா கேரா: கேள்வி என்னவென்றால், இந்த பணப் பரிமாற்றங்கள் சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை மாற்றுமா? பணப் பரிமாற்றங்களைப் பெறும் பெண்களின் கண்ணோட்டத்தில், அவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், அவர்கள் அதை வரவேற்றுள்ளனர். ஏனென்றால், அவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். ஆனால், பணப் பரிமாற்றங்கள் எதிலிருந்து வழங்கப்படுகின்றன? நிதி ரீதியாக, இது ஒரு முக்கியமான கேள்வி. பெண்களுக்கு பணப் பரிமாற்றம் செய்வதற்கான நோக்கங்களைப் பார்த்தேன். அவர்கள் எதை அடைய முயற்சிக்கிறார்கள்? மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன: 1. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்; 2. அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்; 3.அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்று கூறுகிறார்கள். 


குறிப்பாக தமிழ்நாட்டில், பணப் பரிமாற்றம் என்பது வீட்டு வேலைக்குச் சம்பளம் கொடுக்காத இழப்பீடாகப் பார்க்கப்படுகிறது. இது கேள்விகளை எழுப்புகிறது. பொருளாதார சுதந்திரத்திற்கு, பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டாமா? ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MNREGA) சட்டத்திற்கான  நிதியை ஏன் குறைக்கிறது? தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தால் பெண்களுக்கு அதிக பணம் கொடுக்க முடியும். உதாரணமாக, தமிழ்நாட்டில், மாநிலத்தின் பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பெண்கள் ஆண்டுக்கு ₹12,000 பெறுகிறார்கள். பெண்கள் 100 நாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (MNREGA) மூலம் வேலைப் பெற்றால், அவர்கள் ஆண்டுக்கு ₹29,000 சம்பாதிப்பார்கள். பணப் பரிமாற்றத்தின் மூலம் அவர்கள் பெறுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். நான் செங்கல்பட்டில் ஒரு பெண்ணிடம் பேசினேன், அந்த பெண் பணப் பரிமாற்றத்தை விட வேலைவாய்ப்பை விரும்புவதாக தெரிவித்தார். 


ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் இரண்டாவது இலக்கை அங்கன்வாடிகளிலும் மதிய உணவுகளிலும் முட்டை வழங்குவதன் மூலம் சிறப்பாக இலக்கை அடைய முடியும். பல வட இந்திய மாநிலங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை.  மூன்றாவது நோக்கம், ஊதியமில்லாத வீட்டு வேலைக்கான இழப்பீடு: பெண்கள் வீட்டு வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்றால், அதற்காக அவர்களுக்கு குறைவான பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? பாலின விதிமுறைகளை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றி சிந்திப்பது நல்லது அல்லவா? இந்த பண வாக்குறுதிகளின் பிரச்சினை அவை "லஞ்சம்" என்பதல்ல. அவர்கள் எதை அடைய வேண்டும் என்பதே அல்ல அவர்களின் நோக்கம் மட்டுமே. நலன்புரி அரசு பற்றிய நமது யோசனைக்கு அவை எவ்வாறு பொருந்துகின்றன?

 

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றிபெற உதவிய பெருமை பெற்றது. 100 நாள் வேலைத் திட்டமும் லஞ்சம் என்று நாம் கூற முடியுமா? அல்லது இது நலன் குறித்த சந்தர்ப்பவாத பார்வையாக பார்க்க  முடியுமா ?


விகாஸ் ராவல்: இந்த பணப் பரிமாற்றங்களை லஞ்சம் என்று சொல்வது சரியல்ல என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன். நீங்கள்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துடன் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளீர்கள். எனவே அதை எதிர்க்கும் அரசாங்கத்தால் கூட அதை தவிர்க்க முடியாது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து திட்டத்தை தொடர வேண்டும். உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்தியாவில் சமூக நலச் செலவுகள் (social welfare spending) மிகக் குறைவு.


ரீதிகா கேரா: பணப் பரிமாற்றங்களை லஞ்சம் அல்லது இலவசங்கள் என்று அழைப்பதை ஊடகங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பணப் பரிமாற்றம் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. ரொக்கப் பரிமாற்றம் மற்ற வகையான நலன்களுக்கான செலவைக் குறைக்கிறதா என்பதுதான் முக்கிய கவலை. எடுத்துக்காட்டாக, கர்நாடகாவின் இந்த ஆண்டுக்கான பணப் பரிமாற்றம் ₹28,000 கோடி ஆகும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைவிட இரு மடங்காகும். நான் குறிப்பிட்டுள்ளபடி, பணப் பரிமாற்றம் மற்ற நலத் திட்டங்களிலிருந்து பணத்தை எடுத்துச் செல்கிறதா என்பதுதான் எனக்கு முக்கியப் பிரச்சினை. 


நான் குறிப்பிட்டுள்ளபடி, சில பணப் பரிமாற்றங்களைப் பற்றி எனக்கு கவலைகள் உள்ளன ஆனால், மற்றவற்றை ஆதரிக்கிறேன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையைக் கொண்டுள்ளது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு ஆகியவை அடங்கும். பொது விநியோக முறையும் (Public Distribution System (PDS)) உள்ளது.


மகப்பேறு நன்மைகள் ஒரு பண பரிமாற்ற திட்டமாகும். பிரதான் மந்திரி மாத்ருபூமி தன யோஜனா (Pradhan Mantri Mathrubhumi Dhana Yojana) மூலம் பெண்கள் ₹6,000 பெறுகிறார்கள். இது நமது நலன்புரி அமைப்பில் உள்ள இடைவெளியை குறைக்க உதவுகிறது. 1961 முதல், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான பெண்கள் அமைப்புசாரா துறையில் (unorganised sector) பணிபுரிகிறார்கள். மேலும், 2013 உணவுப் பாதுகாப்புச் சட்டம் (Food Security Act) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்கபடவில்லை. நான் இந்த பணப் பரிமாற்றத்தை ஆதரிக்கிறேன். ஏனென்றால், பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நேரத்தில் உதவுகிறது.


விகாஸ் ராவல்: 1980களில் இருந்து, நலன்புரி திட்டங்கள் சுயாதீன மதிப்பீட்டிற்கான அமைப்புகளைக் கொண்டிருந்தன. திட்டக் குழு (Planning Commission) ஒரு மதிப்பீட்டுப் பிரிவை கொண்டிருந்தது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு, திட்டங்களை மதிப்பிடுவதற்கு கணக்கெடுப்பு கேள்விகளை உள்ளடக்கியது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) பல்வேறு திட்டங்களின் செயல்திறன் தணிக்கைகளையும் நடத்தினர்.


 இருப்பினும், இந்த அமைப்புகள் இப்போது பலவீனமடைந்துள்ளன. அரசு திட்டங்களின் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது. இது முக்கிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக. பண பரிமாற்றங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்த திட்டங்களில் சில முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில், பொருட்கள், சேவைகள், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பள்ளிக்கல்வி வழங்கும் திட்டங்களில் சில குறைபாடுகள் இருந்தன.


ரீதிகா கேரா: எனக்கு சற்று மாறுபட்ட பார்வை உள்ளது. முந்தைய திட்டங்களில் ஊழல் மற்றும் இலக்கு ஆகியவை பெரிய பிரச்சினைகளாக இருந்தன. பொது விநியோக முறை (Public Distribution System (PDS)) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA))  ஊழல் ஒரு பிரச்சனையாக இருந்தது. மேலும், அது பணப் பரிமாற்றத்துடன் தொடர்கிறது. பணப் பரிமாற்றம் எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பணப் பரிமாற்றங்களில், இடைத்தரகர்கள் தோன்றி, "நேரடி" பலன்கள் என்று அழைக்கப்படுபவை உண்மையில் நேரடியாக இல்லை. பல கிராமப்புறங்களில், முறையான வங்கி அமைப்பு இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வங்கி இடைத்தரகர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. 


இந்த நிருபர்கள் சிமெண்ட், செங்கல், கூலி என்று ஏமாற்றிய பழைய இடைத்தரகர்களைப் போன்றவர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்  சட்டத்தின் இலக்கை பொறுத்தவரை, குறைந்தபட்ச கூலி வேலை கிடைக்காத மக்களை அதிகளவு ஈர்த்தது. ஆனால், இந்தப் பணப் பரிமாற்றங்களில், சரியான நபர்கள் உதவியைப் பெறுவதை உறுதி செய்ய வலுவான அமைப்புகள் எதுவும் இல்லை.


ரீதிகா கெரா, இந்தியாவில் சமூகக் கொள்கை குறித்து பணிபுரியும் ஒரு வளர்ச்சி பொருளாதார நிபுணர் மற்றும் டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர். விகாஸ் ராவல், பேராசிரியர், பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்




Original article:


Share: