பிராந்தியத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய பிரச்சினைகளில் ஒரே எண்ணம் கொண்ட நட்பு நாடுகளுடன் இந்தியா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.
பாங்காக்கில் நடந்த ஆசியான் தலைமையிலான கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி (Indo-Pacific Oceans Initiative (IPOI)) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் பங்கை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் வழிகாட்டும் கட்டமைப்பாக வாக்குறுதியைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. முக்கியமாக, IPOI-ன் அறிவிப்பு இந்தோ-பசிபிக் உடனான இந்தியாவின் நிலையான ஈடுபாட்டில் தொடர்ச்சியான வேகத்தைக் குறித்தது.
முன்னதாக 2018-ஆம் ஆண்டில், பிரதமர் மோடி இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் பார்வையை 'சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய பிராந்தியமாக' வளர்ச்சி மற்றும் செழிப்பைப் பின்தொடர்வதில் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் (external affairs ministry (MEA)) ஏப்ரல் 2019-ஆம் ஆண்டில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, பிராந்தியத்தை நோக்கிய இராஜதந்திர கவனத்தை ஒரு பிரிவாக ஒருங்கிணைத்தது. பின்னர் 2019-ஆம் ஆண்டு நவம்பரில், IPOI-ன் வெளியீடு பிராந்தியத்தை நோக்கிய புது டெல்லியின் கொள்கை கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதில் ஒரு இராஜதந்திர முன்னேற்றமாகத் தோன்றியது.
இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தொடராக கருதப்பட்ட IPOI, ஏழு முக்கிய தூண்களில் வடிவமைக்கப்பட்டது. அவை கீழ்வருவன :
கடல்சார் சூழலியல் (maritime ecology)
கடல்சார் பாதுகாப்பு (maritime security)
கடல்சார் வளங்கள் (maritime resources)
திறன் மேம்பாடு மற்றும் வளப் பகிர்வு (capacity building and resource sharing)
பேரிடர் அபாயக் குறைப்பு மேலாண்மை(disaster risk reduction and management)
அறிவியல், தொழில்நுட்பம் கல்வி ஒத்துழைப்பு (science, technology, and academic cooperation)
வர்த்தகம், இணைப்பு மற்றும் கடல் போக்குவரத்து (trade, connectivity, and maritime transport)
இந்த முன்முயற்சியின் மூலம், இந்த முக்கிய தூண்களில் தனது நட்பு நாடுகளுடன் அவர்களின் பகிரப்பட்ட நலன்களுடன் இணைந்து ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா முயன்றது.
குறிப்பாக, இந்த கட்டமைப்பு ஒரு தன்னார்வ ஏற்பாடாக வடிவமைக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் இந்தோ-பசிபிக் இராஜதந்திர கட்டமைப்பாக கருதப்பட்டாலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தில் இந்தியாவின் சிக்கலான கூட்டாண்மைகளை வடிவமைப்பதில் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி (Indo-Pacific Oceans Initiative (IPOI)) ஓரங்கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் உத்திகளை வடிவமைப்பதில் IPOI ஏன் ஓரளவு மட்டுமே பயனுள்ளதாக இருந்தது என்பதற்கான மறு மதிப்பீட்டிற்கு இது தகுதியானது. ஒரு பெரும்பகுதியாக, இந்தியாவின் இந்தோ-பசிபிகின் இராஜதந்திரம் இருதரப்பு மற்றும் குறைந்த ஒத்துழைப்பு கட்டமைப்புகளால் இயக்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் சூழலில் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் தனது இருதரப்பு கூட்டாண்மைகளின் வரையறைகளை விரிவுபடுத்துவதில் புது தில்லி வெற்றிகரமாக உள்ளது.
இந்தோ-பசிபிக் விளிம்பு நாடுகளை, இந்தோனேசியா மற்றும் தான்சானியா போன்ற "கடல்சார் அண்டை நாடுகள்" (‘maritime neighbours’) என்று புதுதில்லி தொடர்ந்து அழைக்கிறது. பிராந்திய முன்னேற்றத்துடன் பிணைக்கப்பட்ட பகிரப்பட்ட கடல்சார் இடமாக இந்தோ-பசிபிக்கை வலியுறுத்துவதற்கான இந்தியாவில் வளர்ந்து வரும் நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, குவாட் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா ஈடுபடுவதற்கு ஒரு முக்கிய மன்றமாக உள்ளது. 2020-ஆம் ஆண்டில் தலைவர் அளவிலான உச்சிமாநாடுகள் தொடங்கியதிலிருந்து குவாட் கணிசமான சக்தியை வெளிப்படுத்தியுள்ளது. அப்போதிருந்து, குழு சுகாதாரப் பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் (Humanitarian Assistance and Disaster Relief (HADR)) ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி தனது நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்தியுள்ளது.
இந்தோ-பசிபிக்கில் வேகமாக மாறிவரும் இராஜதந்திர கட்டமைப்பு புதிய புவிசார் அரசியல் அணிசேர்க்கைகளுக்கு வழிவகுக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்துள்ளது. இது இந்தோ-பசிபிக்கில் இராஜதந்திர சமன்பாடுகளின் எதிர்காலம் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா ஒரு வலிமையான சக்தியாக உள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்க நலன்களுக்கு முதலில் முன்னுரிமை அளிப்பதில் ட்ரம்ப் வலியுறுத்துவதால், பெரும்பாலும் அதன் இராஜதந்திர கூட்டணிகள் (strategic alliances) மற்றும் கூட்டாண்மைகள் (partnerships) நிச்சயமற்ற தன்மைக்கு பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன. இந்தியா, அதன் பங்கிற்கு, குவாட் அமைப்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. மேலும், வாஷிங்டனுடன் தொடர்ந்து சாதகமான இருதரப்பு உறவுகளை அனுபவித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு அதன் சொந்த லட்சியங்களும் உள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கட்டமைப்பில் புது தில்லி அதன் சொந்த இராஜதந்திர நலன்கள் மற்றும் நிர்பந்தங்களைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்க விரும்புகிறது.
இந்தியப் பெருங்கடலில், பாதுகாப்பு சவால்கள் ஏற்படும் காலங்களில் முதலில் செயல்படும் சக்தியாக இந்தியா ஒரு வலிமையான சக்தியாக திகழ்கிறது. புதுடில்லி இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளுடன் முக்கியமான அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. எவ்வாறாயினும், ஒரு வெற்றிடத்தின் சாத்தியக்கூறுகளிலிருந்து எழும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, பரந்த இந்தோ-பசிபிக்கில் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் ஈடுபட புதுடெல்லிக்கு இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி (Indo-Pacific Oceans Initiative (IPOI)) ஒரு முக்கியமான கருவியாக செயல்படக்கூடும். இதற்காக, IPOI அமைப்பை மீட்டமைப்பது அவசியம். முக்கியமாக, இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி (Indo-Pacific Oceans Initiative (IPOI)) தூண்கள் இந்தோ-பசிபிக் நாடுகளில் உள்ள நாடுகளுக்கு முக்கிய ஆர்வமாக உள்ளன.
நாடுகளில் விரைவான வளர்ச்சியை வழங்குவதற்காக, உடனடி கடல்சார் சுற்றுச்சூழல் நெருக்கடிகள், HADR, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கடல்சார் வர்த்தகம் மற்றும் இணைப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு புதுதில்லி தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். IPOI போன்ற அளவீடு செய்யப்பட்ட கட்டமைப்பின் மூலம் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தோ-பசிபிக் கூட்டாண்மைகளின் விரிவான கட்டமைப்பு இந்தியாவுக்கு உதவுகிறது.
பிராந்தியத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான முக்கிய பிரச்சினைகளில் ஓரே எண்ணம் கொண்ட நட்புகளுடன் இந்தியா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். சுகாதார பாதுகாப்பை வழங்குவதில் புதுடெல்லியின் பங்கு மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது முதல் பதிலளிப்பவராக இருப்பது, IPOI போன்ற ஒரு கட்டமைப்பைத் தொடங்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அதன் திறனுக்கு நம்பகத்தன்மையை சேர்க்க வாய்ப்புள்ளது. இதற்காக, IPOI முதலில் கருதப்பட்டதைப் போல, இந்தியாவின் இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தின் பிரதான நீரோட்டத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, IPOI மீட்டமைப்பதற்கான நேரம் சரியானது.
சயந்தன் ஹல்தார், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனில் கடல்சார் ஆய்வுகள் (Maritime Studies at Observer Research Foundation) நிறுவனத்தின் ஆராய்ச்சி உதவியாளர்.