தொழிலாளர் வளத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது எவ்வாறு ? -ஆகாஷ் தேவ்

 அதிகப்படியான கவனிப்புப் பொறுப்புகள், கூலி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றன. நெகிழ்வான பகுதி நேர வேலை ஒப்பந்தங்கள், நன்கு வடிவமைக்கப்பட்டிருந்தால், பயனுள்ள வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.


ஒரு பெரிய மற்றும் சுறுசுறுப்பான தொழிலாளர் சக்தி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்த முடியும். ஆனால், குறைந்த பங்கேற்பு விகிதத்தை (Low participation rate (LFPR)) தடுக்கலாம். உழைக்கும் வயது மக்கள்தொகை (working-age population) பொதுவாக 15-64 வயதுடையவர்கள், மூன்று வகைகளில் உள்ளனர். 


  • வேலையில் இருப்பவர்கள்

  •  வேலையற்றவர்கள் 

  • தீவிரமாக வேலை தேடுபவர்கள் 


முதல் இரண்டு குழுக்கள் தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன. மீதமுள்ளவை தொழிலாளர் சக்தியிலிருந்து (out of the labour force (OLF)) வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், உழைக்கும் வயது மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், குறிப்பாக பெண்கள், தொழிலாளர் சந்தையில் பங்கேற்கவில்லை என்பது வியக்கத்தக்கது. 


பல பெண்கள் ஏன் தொழிலாளர் சக்திக்கு வெளியே இருக்கிறார்கள் என்பதை நிவர்த்தி செய்வதன் மூலம், ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தலாம் மற்றும் பொருளாதார வாய்ப்பையும் வழங்கலாம்.


வளர்ந்த நாடுகளில், உழைக்கும் வயது மக்களில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தொழிலாளர் சக்திக்கு வெளியே உள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (FLFPR)) குறிப்பாக கவலைக்குரியது. இந்த விகிதம், வெறும் 37 சதவீதமாக உள்ளது. பாரம்பரிய பாலின முறைகளை (traditional gender roles) ஆதரிக்கும் ஆழமான வேரூன்றிய சமூக விதிமுறைகள், ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பெரும் பொறுப்பு, கருவுறுதல் தொடர்பான சவால்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல காரணிகள் இதற்கு பங்களிக்கின்றன.


 கூடுதலாக, பல பெண்கள் வைத்திருக்கும் கல்வி மற்றும் திறன்களுடன் ஒத்துப்போகும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்க வேண்டும். FLFPR-யை மேம்படுத்த, அதிகமான பெண்களை தொழிலாளர் தொகுப்பில் சேர ஊக்குவிப்பதற்கான வழிகளை ஆராய்வது அவசியம்.


காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) சர்வேயின் சமீபத்திய தரவுகள் நேர்மறையான போக்குகளைக் காட்டுகின்றன. ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 23.3 சதவீதத்திலிருந்து 2022-23ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இருப்பினும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வளர்ச்சி சீரற்றதாக உள்ளது. கிராமப்புறங்களில், FLFPR 2017-ஆம் ஆண்டில் 24.6 சதவீதத்திலிருந்து 2023-ஆம் ஆண்டில் 41.5 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில், இது 20.4 சதவீதத்திலிருந்து 24.5 சதவீதமாக சிறிய மாற்றங்களை மட்டுமே கண்டது. 


கிராமப்புறங்களில், இந்த உயர்வு முக்கியமாக விவசாயத்தில் பெண்கள் சுயவேலைவாய்ப்பில் நுழைவதால் ஏற்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் 55.9 சதவீதத்திலிருந்து 2022-23ஆம் ஆண்டில் 70.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், பல கிராமப்புற தொழிலாளர்கள் குறைந்த திறன் வேலைகளில் உள்ளனர். இதனால் பெரும்பாலும் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர். இதில் முக்கிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நகர்ப்புறங்களில் திறமையான பெண்கள் இன்னும் குறைந்த தொழிலாளர் பங்களிப்பைக் கொண்டுள்ளார்கள். நகர்ப்புறங்களில் உள்ள பெண்களை தொழிலாளர் சந்தையிலிருந்து விலக்கி வைப்பது எது?


தொழிலாளர் சந்தையில் பெண்களின் தீவிர பங்கேற்பைத் தடுக்கும் இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.


ஒன்று, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் மீது வீட்டு பராமரிப்பின் விகிதாச்சாரமற்ற பொருளாதாரச் சுமை. சந்தைகள் மற்றும் வீடுகளுக்கு இடையிலான இடைவினையின் விளைவாக பெண்கள் வரலாற்று ரீதியாக தொழிலாளர் சந்தையில் பாலின வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் (கோல்டின், 2023). அவர்கள் வீட்டில் பொருளாதாரம் அல்லாத மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு நடவடிக்கைகளின் அதிகப்படியான சுமையை சுமக்கிறார்கள்.  இது ஒரு தீவிர கவலை, குறிப்பாக  குடும்ப கட்டமைப்புகளைக் கொண்ட நகர்ப்புற அமைப்பில் சந்தை அல்லாத வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை / முதியோர் பராமரிப்பு வேலைகளைச் செய்வதில் பெண்கள் தினமும் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறார்கள். இந்த எண்ணிக்கை பாதிக்கும் குறைவானது. 


ஆண்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மட்டுமே செலவிடுகிறார்கள். அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாக உள்ளது. அங்கு பெண்கள் இதுபோன்ற பணிகளில் மூன்று மடங்கு குறைவான நேரத்தை செலவிடுகிறார்கள். இந்த அதிகப்படியான கவனிப்பு சுமை பெண்களை ஊதிய வேலையில் ஈடுபட குறைந்த மணிநேரங்களை விட்டுவிடுகிறது. இது குறைந்த பங்கேற்பு விகிதத்திற்கு பங்களிக்கிறது மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலையின் பரந்த பொருளாதார தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.


இரண்டு, பகுதிநேர வேலை ஒப்பந்தங்களில் விரிவான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட சட்டம் இல்லாதது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) பகுதிநேர வேலை மாநாடு, 1994 (எண் 175) பகுதிநேர தொழிலாளி என்ற வார்த்தையை ஒரு பணியமர்த்தப்பட்ட நபராக வரையறுக்கிறது. அதன் வழக்கமான வேலை நேரம் ஒப்பிடக்கூடிய முழுநேர தொழிலாளர்களைவிட குறைவாக உள்ளது.  பகுதி நேர வேலைவாய்ப்பு என்பது தரமற்ற வேலைவாய்ப்பின் மிகவும் பொதுவான பாரம்பரிய வடிவமாகும். இது கணிசமான பகுதிநேர வேலை, குறுகிய பகுதி நேர வேலை, விளிம்பு பகுதி நேர வேலை, அழைப்பு வேலை போன்ற பல்வேறு வடிவங்களில் உள்ளது.


 பகுதி நேர வேலையின் சட்ட மற்றும் புள்ளிவிவர வரையறைகள் பெரும்பாலும் வேறுபடுகின்றன. பல நாடுகளில், பகுதிநேர வேலைவாய்ப்பின் சட்ட வரையறை ILO தரங்களுடன் ஒத்துப்போகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், உள்நாட்டு வருவாய் சேவை, கட்டுப்படியாகக்கூடிய பராமரிப்பு சட்டத்தின் (Affordable Care Act (ACA)) கீழ், வாரத்திற்கு 30 மணிநேர வேலை அல்லது மாதத்திற்கு 130 மணிநேர வேலை என்ற வரம்புடன் பகுதிநேர ஒப்பந்தங்களை வரையறுக்கிறது. தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் (Bureau of Labour Statistics (BLS)) குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வாரத்திற்கு 35 மணிநேரம் வரம்பை நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு முதலாளியும் பெரும்பாலும் பகுதிநேர வேலை நேரங்களின் சரியான எண்ணிக்கையை தீர்மானிக்கிறார்கள்.


இந்தியாவில், பகுதி நேர வேலைவாய்ப்பு தொழிலாளர் சட்டங்களில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அவை பொதுவாக முழுநேர வேலை நேரத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை வரையறுக்கின்றன. முழுநேர ஊழியர்களுக்கு வாரத்திற்கு 48 மணிநேரம் என்ற வரம்பை சட்டம் நிர்ணயிக்கிறது. ஆனால், பகுதி நேர ஒப்பந்தங்கள், குறைந்த மணிநேரம் வேலை செய்வதை உள்ளடக்கியது. பெரும்பாலும் முதலாளியின் விருப்பப்படியே இவை விடப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களில் வேலை பாதுகாப்பு, குறைந்தபட்ச மணிநேரங்கள் அல்லது வேலை அட்டவணையில் நியாயம் போன்ற உத்தரவாதங்கள் இல்லை. பகுதிநேர வேலைக்கான ஊதியம் பொதுவாக ஒழுங்குபடுத்தப்படாத நிலை மேலும் 1948-ஆம் ஆண்டுக்கு முந்தைய குறைந்தபட்ச ஊதிய சட்டம் (Minimum Wage Act), பகுதிநேர நிகழ்வுகளை கணக்கில் கொள்ளவில்லை. 


 ஏனெனில், இது முழு வேலை நாட்களின் ஊதிய கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது.  அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைப் போலல்லாமல், நேர விகிதங்கள் நிலையானவை. இந்தியாவின் சட்டம் பகுதிநேர தொழிலாளர்களுக்கு அவர்களின் நேரங்களுக்கு விகிதாசாரமாக ஊதியம் வழங்குவதை கடினமாக்குகிறது. இது பகுதிநேர வேலைவாய்ப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதில் இடைவெளிகளை ஏற்படுத்துகிறது.


வீட்டு வேலைகளின் நேர சுமையைக் கருத்தில் கொண்டு, வேலை நேரங்களில் உள்ளார்ந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக தொழிலாளர் சக்தியில் நுழைவதற்கு பொருத்தமான நுழைவாயிலாக பெண்கள் பகுதிநேர ஒப்பந்தங்களைக் காண்கின்றனர். நெகிழ்வான பகுதிநேர வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களுக்கான நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு, பராமரிப்பு பொருளாதாரத்தில் சிக்கியுள்ள பல பெண்களுக்கு மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.


ஆகாஷ் தேவ் கட்டுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் (National Council of Applied Economic Research).




Original article:

Share: