முக்கியமான கூறுகள் :
மாநில அமைச்சரவை சமீபத்தில், காவல் தலைமை இயக்குநர் (DGP) தேர்வு செய்வதற்காக, உத்தரப் பிரதேச தேர்வு மற்றும் நியமன விதிகள் (Uttar Pradesh Selection and Appointment Rules), 2024-க்கு ஒப்புதல் அளித்தது.
செப்டம்பர் 22, 2006 முதல் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய காவல் சட்டத்தை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எதிர்பார்த்தது. இந்தப் புதிய சட்டம், காவல் துறையை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து விடுபடவும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் உதவும்.
டி.ஜி.பி.யை தேர்வு செய்து நியமிக்கும் குழுவுக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமை தாங்குவார். இதில், மாநில தலைமைச் செயலாளரும், யுபிஎஸ்சியில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒருவரும், உத்தரப் பிரதேச பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் அல்லது பரிந்துரைக்கப்பட்டவரும் இதில் இடம்பெறுவர். கூடுதலாக, கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது உள்துறை முதன்மைச் செயலாளர் உறுப்பினராக இருப்பார். இந்த குழுவில், ஓய்வு பெற்ற டிஜிபி அதிகாரியும் இருப்பார்.
புதிய விதிகளின்படி, அதிகாரிகளின் தகுதியின் அடிப்படையில் நியமனக் குழு அமைக்கப்படும். இந்த அதிகாரிகள், டிஜிபி பணியிடத்தில் காலியிடம் உருவாக்கப்பட்ட தேதியில் இருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி டிஜிபியின் குறைந்தபட்ச பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, காவல் தலைமை இயக்குநர் நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டவுடன் குறைந்தது இரண்டு வருடங்கள் பதவியில் இருக்க வேண்டும்.
டிஜிபியை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான விதிகளில், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளன.
தகவல்களின் அடிப்படையில் :
1. பிரகாஷ் சிங் vs இந்திய ஒன்றியம் (Prakash Singh vs Union of India) வழக்கில் 17 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், டிஜிபி அதிகாரிகளின் நியமனம் நடைபெறுகிறது. காவல்துறைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் படி, மூன்று மூத்த அதிகாரிகளில் பரிந்துரையின் அடிப்படையில் டிஜிபி அதிகாரியை மாநில அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. யுபிஎஸ்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்ட டிஜிபி அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான பட்டியலில் இந்த அதிகாரிகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த அதிகாரிகளின் பதவிக்காலம், சிறந்த செயல்திறன் அனுபவம் மற்றும் காவல்துறையை வழிநடத்துவதில் பரந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஓய்வு பெறும் தேதியைப் பொருட்படுத்தாமல், டிஜிபி பதவியில் இரண்டு ஆண்டுகள் நிலையான பதவிக் காலம் இருக்க வேண்டும். விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே டிஜிபியை நீக்க முடியும்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதற்கு UPSC தனது சொந்த வழிகாட்டுதல்களை 2009-ம் ஆண்டில் வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களின்படி, குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் பணிபுரியும் தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநிலங்கள் உருவாக்க வேண்டும். இந்த பட்டியலில் அதிகாரிகளின் சேவைப் பதிவு, செயல்திறன் மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக்கான அனுமதி ஆகியவையும் இருக்க வேண்டும். மேலும், இந்த பட்டியல் யுபிஎஸ்சிக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த அதிகாரிகள் மாநிலத்திற்கு குறிப்பிட்டபடி காவல் கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police (ADGP))) பதவி அல்லது காவல்துறைத் தலைவர் பதவி (அல்லது அதற்குக் கீழே ஒரு பதவி) இருக்க வேண்டும். தற்போதைய டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன், யுபிஎஸ்சியிடம் சேர்க்கைக்கான பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
UPSC தலைவர் தலைமையில் ஒரு பட்டியலிடும் குழு (empanelment committee) உள்ளது. இதில் மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமை செயலாளர், மாநில டிஜிபி மற்றும் ஒன்றிய காவல் அமைப்பின் தலைவர் ஆகியோர் அடங்குவர். தகுதியின் அடிப்படையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு உண்டு. ஒரே ஒரு டிஜிபி பதவியை மட்டுமே வைத்திருக்கக்கூடிய சிறிய மாநிலங்களுக்கு, இந்தக் குழு இரண்டு அதிகாரிகளின் பெயர்களை அனுப்ப வேண்டும்.
புதிய விதிகளின்படி, அவரது பதவிக்கு அதிகாரியின் ஒப்புதல் தேவையில்லை. மாநிலத்தில் பணியமர்த்துவதற்காக ஒரு அதிகாரியை விடுவிக்க மறுக்கும் அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு உள்ளது.
இமாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, உத்தரகண்ட், திரிபுரா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள 30 ஆண்டுகால விதியை 25 ஆண்டுகளாக தளர்த்தப்படலாம் என்றும் UPSC கூறியுள்ளது. இந்த மாநிலங்களில் உணமையான வயதுக்கான அளவுகோலைப் பூர்த்தி செய்யும் போதுமான அதிகாரிகள் இல்லை. இருப்பினும், தளர்வு ஒன்றியத்தின் ஒப்புதலுடன் மட்டுமே நடக்கும்.
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகளில் UPSC, பணி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், எந்த அதிகாரியையும் குழுவில் சேர்க்கக் கூடாது.