1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 110 ஆனது "பண மசோதாக்கள்" (Money Bills) என்பதற்கான வரையறையை வழங்குகிறது.
2. ஒரு மசோதா, பின்வரும் விதிமுறைகள் அனைத்தையும் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மட்டுமே கையாளும் அரசியலமைப்பு விதிகளை மட்டுமே கொண்டிருப்பின், அது ஒரு பண மசோதாவாகக் கருதப்படும்.
(a) எந்தவொரு வரியையும் விதித்தல், ஒழித்தல், நீக்குதல், மாற்றம் செய்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.
(b) இந்திய அரசாங்கத்தால் கடன் வாங்குவதை அல்லது உத்தரவாதங்களை அளிப்பதை ஒழுங்குபடுத்துதல் அல்லது இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்படவுள்ள நிதிக் கடமைகள் பற்றிய சட்டங்களைத் திருத்துவதும் இதில் அடங்கும்.
(c) ஒருங்கிணைந்த நிதி (Consolidated Fund) அல்லது இந்தியாவின் தற்செயல் நிதியின் (Contingency Fund of India) பாதுகாப்பு ஆகியவையை உள்ளடக்கியது. இந்த நிதிகளுக்கு பணம் செலுத்துதல் அல்லது அவற்றிலிருந்து பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவை இதில் அடங்கும்.
(d) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணத்தை ஒதுக்குதல்.
(e) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் விதிக்கப்பட்ட செலவினங்களை அறிவிப்பது அல்லது அத்தகைய செலவின் அளவை அதிகரிப்பது.
(f) இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி அல்லது இந்தியாவின் பொதுக் கணக்கிற்கான (public account of India) பணத்தைப் பெறுதல். ஒன்றியம் அல்லது மாநிலத்தின் கணக்குகளின் பாதுகாப்பு, வெளியீடு அல்லது தணிக்கை ஆகியவையும் இதில் அடங்கும்.
(g) (a) முதல் (f) வரையிலான உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விதிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட எந்தவொரு அம்சங்களும் பணமசோதாவாக கருதப்படும்.