வழிபாட்டுத் தலங்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் விசாரணை

 உச்சநீதிமன்ற விசாரணை இந்தியாவின் மதச்சார்பற்ற எதிர்காலத்தை தீர்மானிக்கும்.


தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு டிசம்பர் 12-ம் தேதி மனுக்களை விசாரிக்கவுள்ளது. இந்த மனுக்கள் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991-ஐ சவால் செய்கின்றன. இந்தச் சட்டம் இந்தியாவின் சுதந்திர தினத்தில் இருந்த வழிபாட்டுத் தலங்களின் நிலையை முடக்கி, அந்த நிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட வழக்குகளைத் தடுக்கிறது. இந்த மனுக்கள் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள். 


இந்த மனுக்களின் மீதான தீர்ப்பு வகுப்புவாத உறவுகளின் போக்கையும், நாட்டின் மதச்சார்பற்ற சிந்தனையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடும். 1991ஆம் ஆண்டு சட்டத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அவை, பாபர் மசூதி-ராம ஜென்மபூமி வழக்குக்கு 1991 சட்டம் பொருந்தாது. இது குறித்தான சர்ச்சை பின்னர் தீர்க்கப்பட்டது. இறுதி தீர்ப்பு ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமாக அமைந்தது. இந்தச் சட்டம் நினைவுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தலங்கள் 1958-ன் கீழ் பாதுகாக்கப்படுவதற்குப் பொருந்தாது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இறுதியாக தீர்க்கப்பட்ட அல்லது அகற்றப்பட்ட வழக்குகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. 1991 ஆம் ஆண்டு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் தீர்வு காணப்பட்ட வழக்குககள் அல்லது அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் மாற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது.


 வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி மற்றும் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி போன்ற மசூதிகளை குறிவைக்க சில இந்து குழுக்கள் மற்றும் பக்தர்களின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சவால் வந்துள்ளது. நீதிமன்றம் 1991 சட்டத்தை பலவீனப்படுத்தினால் அல்லது ரத்து செய்தால், அது இந்த வழக்குகளை எதிர்மறையாக பாதிக்கலாம்.


கடந்த காலங்களில் படையெடுப்பாளர்கள் கோவில்களை அழித்ததாகவும், அவற்றின் இடிபாடுகளில் மசூதிகளை கட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இந்த நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குகிறது என்று மனுக்கள் கூறுகின்றன. சட்ட நடவடிக்கை மூலம் இந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்களை மீட்கும் உரிமையை இந்தச் சட்டம் மீறுகிறது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்தச் சட்டம் மதத்தைப் பின்பற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமையை மீறுவதாகவும் மனுக்கள் வாதிடுகின்றன. இந்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று அவர்கள் கூறுகின்றனர், இந்தத் தலங்களை மீட்டெடுப்பதற்கான அவர்களின் முயற்சிகள் வெற்றியடைந்தால் அது பாதிக்கப்படலாம். இருப்பினும், சட்டத்தை ஆதரிக்கும் வலுவான கொள்கைகள் உள்ளன. அயோத்தி தீர்ப்பில், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த சட்டம் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த உதவுகிறது என்று கூறியது. நீதிமன்றம் இந்த சட்டத்தை மதச்சார்பற்ற மதிப்புகளைப் பாதுகாக்கும் "சட்டமன்ற தலையீடு" (legislative intervention) என்று அழைத்தது. தற்போதைக்கு, கடந்த கால தவறுகளை சரிசெய்ய நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான அரசியலமைப்பின் மதச்சார்பற்ற பார்வை அல்லது நாடாளுமன்ற விதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை.




Original article:

Share: