மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சீரமைத்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியத்தை மாற்றியமைக்க அரசுக் குழு பரிந்துரை -அபிஷேக் அங்கத்

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) முழுமையாக மாற்றியமைக்க அரசாங்கக் குழு பரிந்துரைத்துள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான பின்தங்கிய குடும்பங்கள் உள்ள பகுதிகளில் அதிக வேலைகளை ஒதுக்குவதும் அடங்கும். 


அக்டோபர் 2022-ஆம் ஆண்டில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் ( ministry of rural development (MoRD) ) MGNREGS திட்டத்தின் கீழ் மாநிலங்களின் செயல்திறன் மற்றும் நிர்வாகத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, அதிக வேலை வாய்ப்புகள் உள்ள இடங்களில் ஒரு தனி கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக வாதிட்டது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் MGNREGS ஊதியத்தை சரிசெய்தல், கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை MGNREGS பணிகளுடன் ஒருங்கிணைத்தல், மற்றும் வேலை நாட்களை ஆண்டுக்கு 150-200 நாட்களாக உயர்த்துதல் போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 


முன்னாள் கிராமப்புற மேம்பாட்டு செயலாளர் அமர்ஜீத் சின்ஹா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு, நிதி ஆயோக் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திலிருந்து தலா ஒரு பிரதிநிதியை உள்ளடக்கியது.  மார்ச் 2023-ஆம் ஆண்டில் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.  இன்னும் இந்த அறிக்கையை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. 


மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஜனவரி மாதம் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஒரு விளக்கத்தைப் பெற உள்ளார் என்று இந்த விஷயத்தை அறிந்தவர்கள் தெரிவித்தனர். 


கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களுக்கு வழங்கிய விளக்கக்காட்சியில், சீர்திருத்தக் குழு பின்வருவனவற்றை குறிப்பிட்டது. "MGNREGS வடிவம் முழு நாட்டிற்கும் பொருந்துமா?, அதிக எண்ணிக்கையிலான பின்தங்கிய குடும்பங்களைக் கொண்ட தொகுதிகள் / மாவட்டங்களுக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டுமா?  அப்படியெனில், பற்றாக்குறை உள்ள தொகுதிகள் / மாவட்டங்கள் / மாநிலங்களை நாம் அடையாளம் காண வேண்டும்... இதற்கு தரவு உந்துதல் அணுகுமுறை தேவை. நம்பகமான தரவுகளின் அடிப்படையில் நிகழ்நேர தரவு பகுப்பாய்வை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 


சீர்திருத்தக் குழுவின் அறிக்கை மற்றும் விளக்கக்காட்சி


வேலை நாட்களின் எண்ணிக்கையை 150-200 நாட்களாக உயர்த்த குழு வலியுறுத்தியது. குறிப்பாக, பின்தங்கிய பிராந்தியங்களில், அதிக சதவீத பின்தங்கிய குடும்பங்கள் மற்றும் ஊதிய வருவாயை நம்பியுள்ள குடும்பங்கள் உள்ளன. "MGNREGS நோக்கம் ஊதியத்தை உருவாக்குவதில் இருந்து நிலையான கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும் மாற வேண்டும்." 


2005-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு மூலம் வாழ்வாதார பாதுகாப்பை வழங்குவதற்காக தேவை அடிப்படையிலான கிராமப்புற சொத்து உருவாக்கும் திட்டமாக திட்டமிடப்பட்டது.  இது வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பங்கேற்பு மேம்பாட்டுத் திட்டம் என்று விவரிக்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு ஆய்வுகள், திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் ஏற்பட்ட தோல்விகளை சுட்டிக்காட்டியுள்ளன. 


பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் 2014-ஆம் ஆண்டின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பின்பு, MGNREGS ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. பிப்ரவரி 2015-ஆம் ஆண்டில், பிரதமர் மோடி இத்திட்டத்தை 60 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விகளின் 'வாழும் அடையாளச்சின்னம்' என்று விவரித்தார்.  மேலும், அடுத்த ஆண்டு வேலைவாய்ப்பு திட்டத்தை 'தேசத்தின் பெருமை' என்று குறிப்பிட்டார். 


2013-14-ஆம் ஆண்டுக்கான நிதி மதிப்பீடுகளில் ரூ.33,000 கோடியாக இருந்த வேலை உத்தரவாதத் திட்டத்திற்கான நிதி மதிப்பீடு நடப்பு நிதியாண்டில் ரூ.86,000 கோடியாக உயர்ந்துள்ளது. 


அமர்ஜீத் சின்ஹா ​​கமிட்டி அவர்களின் கள ஆய்வுக்குப் பிறகு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதில் பல முக்கிய சிக்கல்களைக் கண்டறிந்தது. உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை பாதிக்கும் குறைந்த ஊதியங்கள், தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்புக்கு (NMMS), பணம் செலுத்துவதில் தாமதம் மற்றும் MGNREGS திட்டத்தை நிர்வகிப்பதில் மோசமான ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.


இந்த நோக்கத்திற்காக, நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை (கிராமப்புற தொழிலாளர்கள்) அளவுகோல்களில் ஒன்றாக பயன்படுத்தி "முறையான" ஊதிய விகித திருத்தத்திற்கு அது அழைப்பு விடுத்தது. 


ஊதியங்கள் சந்தை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது வேறு ஏதாவது அடிப்படையிலானதா? என்று குழு கேட்டது. NREGS ஊதியம் குறைந்தபட்ச ஊதியமாக செயல்படுகிறது என்று ஒரு மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார். அதாவது ஊதியம் இந்த நிலைக்குக் குறைவாக இருந்தால் முதலாளிகள் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க போராடுவார்கள். எனவே, NREGS ஊதியத்தை உயர்த்துவது சந்தை ஊதியத்தையும் உயர்த்தும். எனவே, உள்ளூர் ஊதியத்துடன் நேரடியாக இணைக்கப்படாத, ஆனால் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் முறையைப் பயன்படுத்தி ஊதியத்தை நிர்ணயிப்பது அவசியமாக இருக்கலாம். புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு இதற்கு ஒரு பயனுள்ள குறிப்பாக இருக்கலாம்.


NMMS உடனான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, நம்மிடம் மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே உள்ளன என்று குழு கூறியது. MoRD அதிகாரிகளால் இந்தப் பிரச்சனைகளில் பெரும்பாலானவற்றைத் தீர்க்க முடியும் என்றாலும், தகவல் இல்லாதது பெரும் சிக்கலாக உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆதார் அடிப்படையிலான கொடுப்பனவுகள் தொடர்பாக, காலப்போக்கில் குறைபாடுகள் கணிசமாகக் குறைந்தாலும், பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அவற்றைக் கண்காணிக்க இயலாமை ஆகியவை திட்டத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும் என்று குழு குறிப்பிட்டது.


பஞ்சாயத்துகளின் திறனை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்படும் மாநிலங்களில்கூட, பஞ்சாயத்து ராஜ் நிர்வாகத்திற்கும் MGNREGS நிர்வாகத்திற்கும் இடையே 'ஒரு தெளிவான ஒருங்கிணைப்பு இல்லாததாகத் தெரிகிறது' என்று குழு கூறியது. 


குழு இரண்டு தேசிய மாதிரி ஆய்வுகளை கவனித்தது: ஜூலை 2009-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2010-ஆம் ஆண்டு  வரை நடத்தப்பட்ட 66வது சுற்று மற்றும் ஜனவரி முதல் டிசம்பர் 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 77வது சுற்று  ஆய்வுகள் குடும்பங்கள் மூலம் MGNREGS வேலை கிடைக்கும் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தன. கிராமப்புற இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற MGNREGS பயன்பாடு குறைவாக உள்ள மாநிலங்கள் இந்த திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. இந்த மாநிலங்களில் குறைந்த கிராமப்புறச் வளம் மட்டுமே உள்ளது.


MGNREGS க்கு மாற்று வழிகளை ஆராய்வதற்கான சிறப்புக் கொள்கைகளை உருவாக்க குழு பரிந்துரைத்தது. நடுத்தர முதல் உயர் செல்வக் குறியீடு உள்ள மாநிலங்களில், இந்தத் திட்டம் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை அடங்கும்.


கடந்த 19 ஆண்டுகளில் இத்திட்டத்தின் சாதனைகளையும் குழு பாராட்டியது. கடினமான காலங்களில் இத்திட்டம் மிகவும் முக்கியமானது என்றும் ஏழைகளுக்கு வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளது என்றும் ஒப்புக்கொண்டது. திறமையற்ற வேலை மற்றும் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவது ஒரு முக்கிய நேர்மறையாக எடுத்துக்காட்டப்பட்டது.


அமைச்சரின் விளக்கத்திற்குப் பிறகு அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முன்னேற்றங்களை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர். சில நிர்வாக மாற்றங்கள், அங்கீகரிக்கப்பட்டால், அவை  விரைவாக செயல்படுத்தப்படலாம். ஆனால், நிதி விவகாரங்கள் குறித்த முடிவுகளுக்கு நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை தேவைப்படும்.




Original article:

Share: