இந்த சொல் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இவை சிறிய துகள்களாக நீண்ட காலமாக உள்ளன. அவை உப்பு மற்றும் சர்க்கரையில் உள்ளதா? வெளிப்பாட்டைக் குறைக்க முடியுமா?
சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் உள்ளன (ஒவ்வொரு இந்திய தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கண்டறியப்பட்ட ஒரு ஆய்வு).
அவை மேகங்களில், நிற்கும் பயிர்களில், காற்றில், நீரில், மண்ணிலும் உள்ளன.
மனித இரத்தம், நுரையீரல், விந்து மற்றும் குழந்தையை பாதுகாக்கும் நஞ்சுக்கொடியிலும் சிறிய துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது தொழில்நுட்ப ரீதியாக 5 மிமீ நீளம் அல்லது விட்டம் குறைவான பிளாஸ்டிக் குப்பை ஆகும் (இது சர்க்கரையின் இரு மடங்கு அளவு).
20 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உயிரியலாளர் ரிச்சர்ட் தாம்சன் என்பவரால் அவை முதன்முதலில் மாசுபடுத்தும் பொருளாக வகைப்படுத்தப்பட்டன. அவர் தொலைதூர ஐல் ஆஃப் மேனின் கரையோரங்களில் இடிபாடுகளில் இதுபோன்ற துண்டுகள் கரை ஒதுங்குவதைக் கவனித்தார்.
"பார்க்க முடியாத அளவுக்கு சிறிய துண்டுகளாக இருந்தன. ஆனால், பெரிய துண்டுகள் சிறிய துண்டுகளாக மாறி பின்னர் அதைவிட சிறிய துண்டுகளாக மாறுவது மிகவும் தெளிவாக இருந்தது" என்று பிளைமவுத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கடல் குப்பை ஆராய்ச்சி பிரிவின் (University of Plymouth’s International Marine Litter Research Unit) தலைவரான தாம்சன் கூறுகிறார்.
அவர் இந்த வார்த்தையை உருவாக்கி, இந்த மாசுபடுத்திகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வாறு அழிவை ஏற்படுத்தலாம் மற்றும் உணவுச் சங்கிலியில் எப்படி முடிவடையும் என்பதைப் பற்றி பேசத் தொடங்கினார்.
அவர் சொன்னது சரிதான். இந்தியாவில் சமீபத்தில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் (Toxics Link) நடத்திய ஆய்வில், ஒரு கிலோ உப்பு மற்றும் சர்க்கரையில் நார்ச்சத்து, துகள்கள், படலங்கள் மற்றும் துண்டுகள் வடிவில் 6 முதல் 89 துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. (மற்ற நாடுகளில் மற்ற ஆய்வுகள் இதேபோன்ற விகிதங்களுடன் வந்துள்ளன.)
அப்படியானால் அவை எப்படி எல்லா இடங்களுக்கும் வந்தன?
தாம்சனின் ஆராய்ச்சிக்கு முன்பு, பிளாஸ்டிக் சிதைவதில்லை என்று அறியப்பட்டாலும், அவை சிதைவடையும்போது அவை எவ்வாறு "சிதறுகின்றன" என்பதில் எந்த ஆராய்ச்சியும் கவனம் செலுத்தவில்லை.
உராய்வு, புற ஊதா ஒளி, வெப்பம் அல்லது அழுத்தம் ஆகியவற்றின் வெளிப்பாடு நுண்ணிய துண்டுகளை உடைத்து விலகிச் செல்லச் செய்யும்.
செயற்கை இழைகளால் வலுவூட்டப்பட்ட ரப்பர் டயர்கள் சிறிய துகள்களாக உதிர்கின்றன. இந்த துகள்கள் அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக்ஸை காற்றில் சேர்த்து நமது நுரையீரலுக்குள் நுழைகின்றன. செயற்கை புல்லும் இதே போன்ற இழைகளை வெளியிடுகிறது. செயற்கை ஆடைகள், பேக்கேஜிங், மினுமினுப்பு மற்றும் தட்டுகள், கோப்பைகள் மற்றும் கரண்டிகள் போன்ற பொருட்களும் சிறிய துகள்களை உதிர்க்கின்றன.
மீன்பிடி கயிறுகள் மற்றும் வலைகள் நேரடியாக நீர்நிலைகளில் துகள்கள்களை விடுவிக்கின்றன.
பல ஆண்டுகளாக, மைக்ரோபீட்கள் அவற்றின் செயல்திறனை மேம்படுத்த அழகுசாதனப் பொருட்கள், சவர்க்காரம் மற்றும் பிற இரசாயனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டன. இவை நேரடியாக ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் அடித்துச் செல்லப்பட்டன. 2015-ஆம் ஆண்டில் நாடுகள் அவற்றைத் தடைசெய்யத் தொடங்கின.
நீங்கள் கவனம் செலுத்தத் தொடங்கும் போது, எல்லா இடங்களிலும் துகள்கள் சூழ்ந்து இருக்கும்.
இந்த சொல் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டாலும், மைக்ரோபிளாஸ்டிக் ஒரு நூற்றாண்டாக இங்கு சுற்றி வருகிறது.
அமெரிக்காவில், இந்த துகள்கள் 1940-ஆம் ஆண்டு முதல் ஏரி வண்டலில் காணப்பட்டன. 1950-ஆம் ஆண்டுகளில் பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரித்ததால் அவற்றின் அளவு அதிகரித்தது. இந்த துகள்கள் கொண்ட டயர் தூசி 1960-ஆம் ஆண்டுகளில் இருந்து பனிக்கட்டிகளில் காணப்பட்டது.
பெல்ஜிய வேதியியலாளர் லியோ பேக்லேண்ட் 1907-ஆம் ஆண்டில் முதல் முழு செயற்கை பிளாஸ்டிக்கான பேக்கலைட்டை (Bakelite) உருவாக்கிய பின்னர் பிளாஸ்டிக் குவிந்து வருகிறது என்று நாம் கருதலாம்.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பீனால் மற்றும் ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றைக் கலந்து, கடினமான மற்றும் வடிவமைக்கக்கூடிய பொருளை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பு உற்பத்தியை மாற்றியது.
1933-ஆம் ஆண்டில் பாலிஎதிலீன் பொதுவாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. பாலிஸ்டிரீன் 1937-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
நைலான் 1938-ஆம் ஆண்டில் பல் துலக்கிகளில் (toothbrushes) பயன்படுத்தத் தொடங்கியது. அதற்கு முன், டூத் பிரஷ் முட்கள் (toothbrush bristles) பொதுவாக விலங்குகளின் முடியிலிருந்து தயாரிக்கப்பட்டன.
1940-ஆம் ஆண்டுகளில், விமானங்கள், தனிப்பட்ட பாகங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் போன்ற பல உற்பத்தி பொருள்களில் நைலான் பயன்படுத்தப்பட்டது. இது அணுகுண்டின் சில பகுதிகளில் கூட பயன்படுத்தப்பட்டது.
தாம்சன் கூறுவது போல், மக்கள் நைலான் பற்றி உற்சாகமடைந்தனர். ஏனெனில், அது நீண்டகால தயாரிப்புகளை உருவாக்கியது. ஆனால், அது மலிவானதாக மாறியதும், அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஒற்றைப் பயனுடையவை (disposable) என்று கருதத் தொடங்கின.
பிளாஸ்டிக் போன்ற மக்காத எதையும் இதற்கு முன்பு நாங்கள் உருவாக்குவதில்லை. எனவே, அதைப் பயன்படுத்திய பிறகு என்ன நடக்கும் என்று நாங்கள் திட்டமிடவில்லை.
பிளாஸ்டிக்கை நாம் காகிதம் போலக் கருதினோம். ஆனால், அதை நச்சு இரசாயனங்கள் அல்லது தொழிற்சாலைக் கழிவுகள் போலக் கருதியிருக்க வேண்டும்.
"இதை எங்கே பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது?" போன்ற கேள்விகளை நாம் கேட்டிருக்க வேண்டும். மற்றும் "அதில் நமக்கு உண்மையில் எவ்வளவு தேவை?" அதற்கு பதிலாக, பிளாஸ்டிக் எவ்வளவு வசதியானது என்பதை பற்றி மகிழ்ச்சி அடைந்தோம். அதன் மூலம் நாங்கள் இன்னும் பலவற்றைச் செய்துகொண்டோம்.
1950-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2 மில்லியன் டன்னாக இருந்த பிளாஸ்டிக் உற்பத்தி இன்று ஆண்டுக்கு 450 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் பாதிக்கும் மேற்பட்டவை 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டவை.
ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமான விக்டோரியாவின் தலைமை சுற்றுச்சூழல் விஞ்ஞானி மார்க் பேட்ரிக் டெய்லர் கூறுகையில், "நாம் தப்பிக்க முடியாத பிளாஸ்டிக் துண்டுகளால் சூழப்பட்டுள்ளோம். மேலும், அவை நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
பிளாஸ்டிக்கின் அளவை அளவிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அது எளிதான காரியம் அல்ல.
நானோ பிளாஸ்டிக்ஸ் என்பது மிகச்சிறிய வகை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகும். நுண்ணோக்கியைப் பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும். அவை மிகவும் சிறியவை. 1 முதல் 1,000 நானோமீட்டர் அகலம் கொண்டவை (ஒப்பிடுகையில், ஒரு மனித முடி சுமார் 80,000 நானோமீட்டர் அகலம் கொண்டது). அவற்றின் சிறிய அளவு காரணமாக, அவை திசுக்களில் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் மற்றும் அதிக ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான சுரேஷ் வலியவிட்டில் பாலிமர்களைப் படிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். அவர், "மைக்ரோபிளாஸ்டிக்ஸ் வெவ்வேறு கலவைகளில் வருவதால், அவற்றைச் சோதிக்க நிலையான வழி இல்லை என்று குறிப்பிடுகிறார்.
"பெரும்பாலான கண்டறிதல் முறைகள் எலக்ட்ரான் அடர்த்தி அல்லது ஒளி உறிஞ்சுதலை நம்பியுள்ளன. இருப்பினும், பிளாஸ்டிக்குகள் பொதுவாக குறைந்த எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் பலவீனமான உறிஞ்சுதலைக் கொண்டுள்ளன. இதன் பொருள் தற்போதைய முறைகளுக்கு மாற்றங்கள் தேவை. மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட மாதிரிக்கும் புதிய கண்டறிதல் நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மனித உடலில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் புற்றுநோய்கள், வளர்சிதை மாற்ற பிரச்சனைகள், ஆண்டிபயாடிக் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. தீங்கு விளைவிக்கும் கிருமிகள் சுற்றிச் செல்லவும், உடலில் எளிதாகப் பரவவும் அவை உதவக்கூடும்.
பேராசிரியரான சுரேஷ் வலியவீட்டில், "இது ஒரு பயங்கரமான சூழ்நிலை. "ஆனால் மக்கள் அதை தீவிரமாகக் கையாளவில்லை. ஏனெனில், போதுமான ஆதாரம் இன்னும் மனித உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருள் தேவை குறையும் என்று எதிர்பார்க்கும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் அதிக பிளாஸ்டிக்கை உருவாக்குகின்றன.
உடல்நல பாதிப்புகளுக்கு தெளிவான ஆதாரங்கள் இருந்தால் மக்கள் அதிக அவசரத்தை உணருவார்கள் என்று தாம்சன் நம்புகிறார். இப்போதைக்கு, "சிக்கலை நிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்" என்கிறார்.