2024 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் ஹார்ன்பில் திருவிழாவை ஏற்பாடு செய்ய நாகாலாந்து அரசு தயாராக உள்ளது. பெரும்பாலும் "திருவிழாக்களின் திருவிழா" என்று குறிப்பிடப்படும் ஹார்ன்பில் திருவிழா நாகாலாந்தின் மிகவும் பிரபலமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இது நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிசாமா பாரம்பரிய கிராமத்தில் நடைபெறும்.
1. ஹார்ன்பில் பறவையின் பெயரிடப்பட்ட இந்த திருவிழா நாகா பழங்குடியினரின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு மற்றும் பழக்கவழக்கங்களை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரியங்களை வண்ணமயமான நடன நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுகிறார்கள்.
2. ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி மாநிலத்திலுள்ள 17 பழங்குடியினரையும் ஒன்றிணைக்கிறது. இது அவர்களின் கலாச்சாரத்தை உலகின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்த உதவுகிறது.
3. திருவிழா நாள் முழுவதும் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். போர்வீரர்கள், முழு பாரம்பரிய உடைகளை அணிந்து, பாரம்பரிய நடனங்கள் மற்றும் போர் முழக்கங்களை நிகழ்த்துவர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அறுவடைகள், அவர்களின் வெற்றி மற்றும் பழங்குடி புராணங்களின் கதையை பற்றிச் சொல்கிறது. போர்வீரர்கள் தனித்துவமான தலைக்கவசத்தை அணிவார்கள். தலைக்கவசம் ஹார்ன்பில் இறகுகள், பன்றி தந்தங்கள் மற்றும் வண்ணமயமான நெய்த புடவைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மறக்க முடியாத காட்சியை உருவாக்குகிறது.
கிரேட் ஹார்ன்பில்
1. கிரேட் ஹார்ன்பில் முதன்மை பசுமையான மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இது முதன்மையாக உயரமான மரங்களின் விதானத்தில் (canopy) வாழ்கிறது.
2. 1972 ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act) அட்டவணை 1-ன் கீழ் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தால் (International Union for Conservation of Nature (IUCN)) இது பாதிக்கப்படக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
3. இந்தியாவில், கிரேட்டர் ஹார்ன்பில் பறவைகள் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன. இது அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவின் மாநில பறவையாகும்.
4. இந்தியாவில் ஒன்பது ஹார்ன்பில் இனங்கள் உள்ளன. வடகிழக்கு பகுதியில் ஹார்ன்பில் இனங்கள் நாட்டிலேயே அதிக பன்முகத்தன்மை உள்ளது.
1. நாகாலாந்து டிசம்பர் 1, 1963 அன்று மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய ஒன்றியத்தின் 16வது மாநிலமாக மாறியது. நாகாலாந்துக்கு மேற்கே அஸ்ஸாம், கிழக்கே மியான்மர் (பர்மா), வடக்கே அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமின் ஒரு பகுதியும், தெற்கே மணிப்பூரும் எல்லைகளாக உள்ளன.
2. நாகாலாந்தின் மாநிலப் பறவை பிளைத்தின் டிராகோபன் (Blyth’s tragopan) ஆகும். மிதுன் (Mithun) நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மாநில விலங்காகும்.
3. நாகாலாந்து 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியது. இது 17 முக்கிய பழங்குடியினரின் தாயகமாகும். மேலும், பல துணை பழங்குடியினரும் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடியினருக்கும் அதன் தனித்துவமான பழக்கவழக்கங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரிய உடைகள் உள்ளன. அவை ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன.
4. நாகாலாந்தின் GI-குறியிடப்பட்ட தயாரிப்புகளில் சில நாகா மரம் தக்காளி, நாகா வெள்ளரி மற்றும் நாகா மிர்ச்சா ஆகும் .
5. நாகாலாந்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள்: இந்தாங்கி தேசிய பூங்கா, ஃபகிம் வனவிலங்கு சரணாலயம், சிங்பான் வனவிலங்கு சரணாலயம், புலி பேட்ஸ் வனவிலங்கு சரணாலயம்.
6. நாகாலாந்து அதன் வளமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருவிழாக்களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு பழங்குடியினரும் அதன் சொந்த தனித்துவமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, நாகாலாந்தில் 85%-க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நேரடியாக நம்பியுள்ளனர். இந்த விழாக்களில் பெரும்பாலானவை நாகா சமுதாயத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை மையமாகக் கொண்டுள்ளன.