முக்கிய அம்சங்கள் :
1. மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (State Level Bankers Committee (SLBC)) தரவு 2022 முதல் தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும், 2022-ம் ஆண்டில், இதற்கான பட்டியலை குறிப்பிட்டுக் காட்டவும், இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்களை நீக்கவும் ஒன்றிய அரசு மாநில அரசிற்கு உத்தரவிட்டது. இது, பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. இந்த வார தொடக்கத்தில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (SLBC) கூட்டத்தில் வழங்கப்பட்ட தரவுகளின்படி, கேரளாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியில் (PM Kisan Samman Nidhi) 60,687 தகுதியற்ற பயனாளிகள் உள்ளனர். அவர்களிடமிருந்து திருப்பித் தரப்பட வேண்டிய தொகை ரூ.36.40 கோடி ஆகும். ஆனால், தகுதியில்லாத 22,661 பேரிடம் இருந்து இதுவரை ரூ.13.59 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டது.
3. தகுதியற்ற பயனாளிகளைக் கண்டறியும் பணி மாநில வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத நபர்களிடம் இருந்து தொகையை வசூலிக்க நிலையான செயல்பாட்டு நடைமுறையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4. 2019-ம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களை உள்ளடக்குவதே இதன் முக்கிய இலக்காக இருந்தது.
உங்களுக்குத் தெரியுமா?:
1. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-Kisan Yojana) என்பது ஒரு ஒன்றியத் திட்டமாகும். இது, விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பொருந்தும்.
2. இத்திட்டம் ஒரு குடும்பத்தில் உள்ளடக்கிய கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் என வரையறுக்கிறது. இது டிசம்பர் 1, 2018 அன்று தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயி குடும்பங்கள் மூன்று தவணைகளில் ரூ.2,000 பெறுகின்றன. இந்த தவணை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
3. இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். இதில், குடும்பங்களை அடையாளம் காணும் பொறுப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு உள்ளது.
4. இந்த திட்டத்தில் சேர, விவசாயிகள் மாநில அரசால் நியமிக்கப்பட்ட உள்ளூர் வருவாய் அதிகாரி அல்லது PM-KISAN நோடல் அதிகாரியை அணுக வேண்டும். நோடல் அதிகாரி மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயிகள் PM-Kisan வலைத்தளமான pmkisan.gov.in-ல் உள்ள உழவர் கார்னர் (Farmers Corner) மூலமாகவும் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
5. அரசு பொது சேவை மையங்களை (Common Service Centres (CSCs)) அமைத்துள்ளது. இந்த மையங்கள் விவசாயிகளின் பதிவுக்கு உதவுகின்றன.
6. PM-கிசானின் அரசாங்க வலைத்தளத்தின்படி, செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் விலக்கு அளவுகோல்களின் கீழ் உள்ள விவசாயிகள் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.