இந்த கனிமவள நடவடிக்கைகள் இந்தியாவின் இராஜதந்திர ரீதியில் பாதிப்பைக் குறைப்பதாகும். இருப்பினும், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன.
இந்தியா தனது உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப திறனை விரிவுபடுத்த முயலும்போது, இந்த இலக்கை நிறைவேற்ற முக்கியமான கனிமங்கள் இன்றியமையாதவையாக மாறும். இருப்பினும், ஒரு முக்கியமான கனிம இறக்குமதியாளரான இந்தியா, அதன் கனிமவள பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளை, குறிப்பாக சீனாவை இன்னும் சார்ந்துள்ளது. இது இராஜதந்திர ரீதியில் இந்தியாவின் பாதிப்பில் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சிந்தனையாளர் கூட்டத்தில் (defence think tank meeting) நாட்டின் கவலைகளை எடுத்துரைத்தார். "பொருளாதார காரணங்களுக்காக நாட்டின் வளங்களுக்கான போட்டி நீண்ட காலமாக இருந்து வந்தாலும், இராஜதந்திர ரீதியில் நாட்டின் நோக்கங்களுக்காக அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் புதியது" என்று அவர் கூறினார். இது சீனாவின் செயல்களை குறிப்பதாக இருந்தது. இந்தியாவின் கனிமவளப் பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள, அதன் இராஜதந்திர ரீதியில் நாட்டின் பாதிப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவானது கனிமவள இராஜதந்திரத்தில் ஈடுபடுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது.
கூட்டு முயற்சிகளை நிறுவுதல்
இந்த முயற்சி பின்வரும் முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது : கனிமவள உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சர்வதேச உறவுகளை வளர்த்தல் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான நிறுவனங்களுடன் இராஜதந்திர ரீதியில் கூட்டாண்மைகளை நிறுவுவதில் கவனம் செலுத்துகிறது. இதில், முதல் அம்சமாக லித்தியம் மற்றும் கோபால்ட் விநியோகத்தைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் போன்ற வளம் நிறைந்த நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நிலையை எளிதாக்க, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Ltd. (KABIL)) ஐ நிறுவியது. இது "இந்திய உள்நாட்டு சந்தைக்கு முக்கியமான மற்றும் நாட்டின் இராஜதந்திர ரீதியில் தாதுக்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக" ஒரு ஆணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். கனிமவள பாதுகாப்பை அடைய, KABIL நிறுவனமானது பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் செயல்படுகிறது. இவை அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு (government-to-government), அரசாங்கத்திலிருந்து வணிகத்திற்கு (government-to-business) மற்றும் வணிக-வர்த்தகம் (business-to-business) ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
மார்ச் 2022-ம் ஆண்டில், KABIL நிறுவனம் ஆஸ்திரேலியாவுடன் ஒரு முக்கியமான கனிமவள முதலீட்டுக்கான கூட்டாண்மை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, இரண்டு லித்தியம் மற்றும் மூன்று கோபால்ட் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. மேலும், அர்ஜென்டினா, சிலி மற்றும் பொலிவியாவை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்காவின் லித்தியம் முக்கோணமும் (Lithium Triangle) இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனவரி 2024-ம் ஆண்டில், அர்ஜென்டினா அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் 24 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ஐந்து லித்தியம் உப்புத் தொகுதிகளில் (lithium brine blocks) லித்தியத்தை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது. பொலிவியா மற்றும் சிலியில் இருந்து வளங்களைப் பெறுவதற்கு உதவுவதன் மூலம் கனிம விநியோகங்களைப் பாதுகாக்க KABIL நிறுவனமானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசு மட்டுமின்றி, இந்தியாவின் தனியார் துறையும் பயனடைந்துள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள் விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க பொலிவியாவின் தேசிய நிறுவனமான YLB நிறுவனத்துடன் ஆல்ட்மின் பிரைவேட் லிமிடெட் (Altmin Private Limited) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மத்திய ஆசியாவும் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில், இந்தியாவும் கஜகஸ்தானும் இந்தியாவில் டைட்டானியம் கசடு தயாரிக்க IREUK Titanium Limited என்ற கூட்டு முயற்சியை உருவாக்கின. மத்திய ஆசிய குடியரசுகளுடனான இந்தியாவின் முதல் கூட்டு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நாட்டின் வளமான வளங்களை மேம்படுத்துவதற்காக இந்தியா-மத்திய ஆசியா அரிய பூமி மன்றத்தை (India-Central Asia Rare Earths Forum) நிறுவுவதற்கான இந்தியாவின் முன்மொழிவுடன் இந்த முயற்சி இணைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு ஈடுபாடுகள்
நாட்டின் கனிமவள இராஜதந்திரத்தின் இரண்டாவது அம்சம் சர்வதேச ஈடுபாடு ஆகும். இது குவாட் (ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா), இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF)), கனிம பாதுகாப்பு கூட்டாண்மை (Mineral Security Partnership (MSP)) மற்றும் முக்கியமான கனிமவள விநியோக சங்கிலியில் ஒத்துழைப்புக்காக G-7 போன்ற கனிம பாதுகாப்பு தொடர்பான சிறிய மற்றும் பலதரப்பு முன்முயற்சிகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்கி வலுப்படுத்துகிறது. இந்த கூட்டுறவுக்கான ஈடுபாடுகள் இந்தியாவை அதன் மூன்று பிரிவுகளான மேல்நிலை (upstream), நடுநிலை (midstream) மற்றும் கீழ்நிலை (downstream) ஆகியவற்றில் முக்கியமான கனிமத் துறையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கூடுதலாக, அவை அறிவுக்கான பகிர்வு மற்றும் திறன் வளர்ப்பையும் எளிதாக்குகின்றன. இது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைக்க முக்கியமானது.
மேற்கத்திய கூட்டணி நாடுகளுடனான இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க, இந்தியாவின் சுரங்க அமைச்சகம் சர்வதேச எரிசக்தி நிறுவனத்துடன் முக்கியமான கனிமங்கள் மீதான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், "முக்கியமான கனிமத் துறையில் அதன் கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் முதலீட்டு உத்திகளை நெறிப்படுத்தவும், அவற்றை உலகளாவிய தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் சீரமைக்கவும்" உதவுகிறது.
காணாமல் போன பொருட்கள் (missing pieces)
கனிமவள இராஜதந்திரத்திற்கான இந்தியாவின் முயற்சி பல சாதகமான விளைவுகளுக்கு வழிவகுத்தது. ஆனால், அதன் சர்வதேச இராஜதந்திர ஈடுபாட்டிற்கு தேவையான மூன்று அத்தியாவசிய கூறுகள் இன்னும் இல்லை. அவை, தனியார் துறை பங்களிப்பு இல்லாமை, பலவீனமான இராஜதந்திர திறன் மற்றும் போதுமான நிலையான கூட்டாண்மை போன்றவை ஆகும். மேலும், இந்தியாவின் தனியார் துறை பெரும்பாலும் சமன்பாட்டில் இருந்து விடுபட்டுள்ளது.
ஒரு முக்கியமான கனிம விநியோக சங்கிலிக்கான நாட்டின் இராஜதந்திரம் இல்லாதது மற்றும் தனியார் துறைக்கான தெளிவான சாலை வரைபடம் ஆகியவை கொள்கை தெளிவின்மைக்கு பொறுப்பான இரண்டு முதன்மை மாறிகள் இல்லாததற்கு அவை வழிவகுக்கிறது. இவற்றை நிவர்த்தி செய்ய, விநியோகச் சங்கிலியில் தனியார் துறையின் பங்கைக் கருத்தில் கொண்டு, ஆபத்தைக் குறைப்பதற்கான விரிவான அணுகுமுறையை இந்தியா வகுக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளின் அடிப்படையில் விநியோகச் சங்கிலிக்கான உத்தியை மேற்கொள்வது ஒரு முக்கியமான படியாக இருக்கும்.
இரண்டாவதாக, இந்தியா தனது கனிமவள இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டும். புதிய மற்றும் வளர்ந்து வரும் உத்தியின் தொழில்நுட்பங்கள் (New and Emerging Strategic Technologies (NEST)) பிரிவைப் போன்ற, வெளிவிவகார அமைச்சின் கீழ் ஒரு பிரத்யேக கனிமவள இராஜதந்திர பிரிவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜதந்திர தூதரகங்களில் கனிமவள இராஜதந்திரத்திற்கான ஒரு சிறப்பு பதவியை கொண்டிருப்பது முதல் படியாக இருக்கும்.
மூன்றாவதாக, கனிமவள பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் இலக்கு, இருதரப்பு கூட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இந்தியாவின் உத்தி, நிலையான மற்றும் நம்பகமான கூட்டாண்மைகளை உருவாக்குவதை அவசியமாக்குகிறது. அதன் அனைத்து கூட்டணி நாடுகளிடையே, ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா மற்றும் பிற குவாட் உறுப்பினர்களுடன் பணிபுரிவது இந்தியாவின் உள்நாட்டு திறன்கள், நாடுகளின் இராஜதந்திர வலையமைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவு காரணமாக இந்தியாவின் கனிமவள பாதுகாப்புக்கு முக்கியமானது. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், கனிமவள இராஜதந்திரத்திற்கான இந்தியாவின் முயற்சிகள் வலிமையைப் பெறும். மேலும், தற்போது மெதுவான வேகத்தில் நகர்ந்து வரும் இந்தியாவின் உள்நாட்டு முக்கியமான கனிம முயற்சிகளை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும்.
அபிஷேக் சர்மா, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உத்திக்கான ஆய்வுகள் திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளராக உள்ளார்.