ஏன் சில PLI திட்டங்கள் மெதுவான பாதையில் செல்கிறது? இதில் அரசின் பங்கு என்ன? -சௌமிரேந்திர பாரிக்

 உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டம் (PLI (Production-Linked Incentive scheme)) 14 துறைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு துறையிலிருந்தும் முன்னேற்றம் மற்றும் கற்றல் முறைகளை மேம்படுத்துதல், மற்றவற்றைப் புதுப்பித்தல் மற்றும் சில திட்டங்களுக்கு நிதியை அதிகரிக்க சில திட்டங்களை மாற்றுதல் போன்ற விவாதங்களுக்கு வழிவகுத்தது.


வேலைவாய்ப்பை உருவாக்குவதே இலக்கு என்றால், 14 PLI திட்டங்களில் ஆறு திட்டங்கள் மெதுவாக முன்னேறி வருகின்றன. ஜவுளி, சோலார் திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப வன்பொருள், ஆட்டோமொபைல்கள், மேம்பட்ட இரசாயன செல்கள் (advanced chemical cells (ACC)) மற்றும் சிறப்பு தன்மை வாய்ந்த எஃகு ஆகியவை இதில் அடங்கும்.  இருப்பினும், உணவு பதப்படுத்துதல் மற்றும் மொபைல் போன் உற்பத்தி போன்ற துறைகள் முன்னேற்றமான  பாதையில் உள்ளன.


14 துறைகளை உள்ளடக்கிய PLI  திட்டத்தின் முன்னேற்றம், சிறந்த முடிவுகளைப் பெற சில திட்டங்களை மேம்படுத்துதல், மற்றவற்றை புதுப்பித்தல் மற்றும் சில துறைகளுக்கான நிதியை அதிகரிப்பது பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்தது. அரசாங்கம் இரண்டு காரணங்களுக்காக PLI திட்டங்களை முக்கியமானதாகப் பார்க்கிறது. முதலில், இந்தியாவின் உற்பத்தித் தொழிலை வளர்க்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் அதன் பங்கை அதிகரிக்கவும் பொதுப் பணத்தைப் பயன்படுத்தவும் மற்றும் மில்லியன் கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.


இரண்டு அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தது,  விநியோக சங்கிலி அமைக்கப்பட்டதும் அதன் பலன்கள் சிறிய இறக்குமதியாளர்களை சென்றடைந்தால் தான்  PLI திட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு வளர்ச்சியின் முழு திறனை அடைய முடியும். மொபைல் தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பலன்கள் தெரிய ஆரம்பித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு திட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய பிறகு வேலைவாய்ப்பு விளைவுகளை அளவிட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.


பிப்ரவரி 2024 இல் Crisil இன் அறிக்கையின்படி, இந்தத் திட்டம் அதன் காலப்பகுதியில் 3-3.5 லட்சம் கோடி ரூபாய் தொழில்துறை மூலதனச் செலவை உண்டாக்கும் என்று கணித்துள்ளது. இது அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் முக்கிய தொழில்களில் மொத்த மூலதனச் செலவில் 8-10% ஆக இருக்கும்.


இருப்பினும், இந்தத் திட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து தொழில்துறையில் இருந்து சில புகார்கள் வந்துள்ளன. கடுமையான தகுதித் தேவைகள், சீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான அணுகல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் இறக்குமதி கட்டணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.


PLI  திட்டங்கள் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்தியா இந்தத் துறைகளில் வலுவான இருப்பைக் கொண்டிருக்காததால், புதிதாக உள்நாட்டு உற்பத்தித் தொழிலை உருவாக்க வேண்டும். இது முதலில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மெதுவாக்கும். ஏனெனில், நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்க நேரம் தேவை. எடுத்துக்காட்டாக, சோலார் மற்றும் மேம்பட்ட இரசாயன செல்கள் போன்ற துறைகளில் உள்ள PLI திட்ட செயல்பாடுகளை அமைப்பதற்கு ஒன்றரை ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை அனுமதிக்கிறது.


இருப்பினும், சில திட்டங்கள் ஆரம்ப வெற்றியைக் காட்டியுள்ளன. இதற்கு ஒரு உதாரணம் மொபைல் போன் உற்பத்தி ஆகும். PLI திட்டத்திற்கு முன்பு, இந்தியா தனது பெரும்பாலான  மொபைல் போன்களை இறக்குமதி செய்தது. இந்தத் திட்டத்திற்குப் பிறகு, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை அதிகரித்தன. இப்போது, ​​நாட்டில் விற்பனை செய்ப்பபடும் அனைத்து மொபைல் போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உண்மையில், இந்தியா 2023-24ஆண்டில் $15 பில்லியன் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது.


பல PLI திட்டங்களில், பெரிய நிறுவனங்களே ஊக்கத்தொகையிலிருந்து முதலில் பயனடைகின்றன. மொபைல் போன் தயாரிப்பில், ஆப்பிள் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இருப்பினும், இந்த பெரிய நிறுவனங்களுக்கான ஆதரவு இறுதியில் முழு விநியோகச் சங்கிலிக்கும் பயனளிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.  இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தியாவில் செயல்பாடுகளை அமைக்க சிறு வணிகங்களை ஊக்குவிக்கும். இது வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.


எடுத்துக்காட்டாக, 2023-ஆம் ஆண்டில், ஆப்பிளின் நிறுவனத்தின் விநியோகஸ்தர் பட்டியலில் 14 இந்திய நிறுவனங்கள் உள்ளன. இது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை இணைக்கத் தொடங்குவதற்கு முன்பு முன்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது.


PLI  திட்டங்களுக்குப் பின்னால் உள்ள யோசனை மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்குத் துறைகளுக்கு ஆதரவளிப்பதாகும்.  PLI திட்டங்களின் குறிக்கோள், ஊக்கத்தொகைகள் முடிவடைந்த பின்னரும் போட்டித்தன்மையுடன் இருக்கும் அளவுக்கு ஒரு துறையை வளர உதவுவதாகும். எவ்வாறாயினும், இந்த திட்டங்கள் மானியங்கள் போன்றவை என்றும், ஊக்கத்தொகைகள் முடிந்தவுடன் துறைகளை போட்டித்தன்மையுடன் உருவாக்க முடியாது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


14 துறைகளில் PLI திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது. குறிப்பாக ஜவுளி, மேம்பட்ட வேதியியல் பேட்டரி செல்கள், சோலார் அமைப்பு மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த துறைகளில் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. சமீபத்தில், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் சார்ந்த PLI திட்டத்திற்கு அதிக நிதி கிடைத்தது. ஆளில்லா விமானங்களுக்கான (drones) திட்டம் போன்ற பிற திட்டங்களையும் புதுப்பிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஜவுளித்துறை  போன்ற துறைகளுக்கான தகுதி அளவுகோல்களை மாற்றுவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.



Original article:

Share: