திறன் வகுப்பறைகள் (smart classrooms) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் 19 நகரங்களில் மாணவர் சேர்க்கை 22% அதிகரித்துள்ளது.

 இந்த முயற்சி மாணவர்களின் கற்றல் அனுபவங்களையும் வருகையையும் மேம்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஆசிரியர்களின் மேம்பட்ட வசதி மற்றும் திறன் வகுப்பறை (smart classroom)  வசதிகளுக்கான அவர்களின் விருப்பம் ஆகியவை மேம்பட்டுள்ளன என்று IIM-பெங்களூர் ஆய்வு தெரிவிக்கிறது. 


பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கழகம் (Indian Institute of Management) நடத்திய ஆய்வில், சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் (Smart Cities Mission (SCM)) கீழ் திறன் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 22% அதிகரித்துள்ளது. இந்தத் தரவு 2015-16 ஆண்டு முதல் 2023-24 ஆண்டு வரை 19 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

71 நகரங்களில் 2,398 அரசு பள்ளிகளில் 9,433 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான திறன் வகுப்பறை திட்டங்கள் கர்நாடகாவில் 80, ராஜஸ்தானில் 53 உள்ளன. தமிழகத்தில் 23, டெல்லியில் 12, மேற்குவங்கம் 2 இடங்களுடன் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். 


அறிக்கையின்படி, திறன் வகுப்பறை முயற்சி கற்றல் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட  சீர்மிகு நகரங்களில் மாணவர் வருகையை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

 

41 நகரங்களில் மொத்தம் 7,809 இருக்கைகள் கொண்ட டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் கர்நாடகாவின் துமகுரு போன்ற நகரங்களில் டிஜிட்டல் நூலகங்களின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த நூலகங்கள் அத்தியாவசிய கல்வி ஆதாரங்களை வழங்குவதோடு, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக உதவுகின்றன.

 

சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) ஜூன் 2015-ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் முக்கிய உட்கட்டமைப்பு கொண்ட நகரங்களை மேம்படுத்துவதாகும். தூய்மையான மற்றும் நிலையான சூழலை உள்ளடக்கிய குடிமக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணியானது 'திறன் முறைகளை' (smart solutions) பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. 


நவம்பர் 2024 ஆண்டு நிலவரப்படி, சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் 91% திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


  2022-ஆம் ஆண்டில், சீர்மிகு நகரங்கள் திட்டம் “ சீர்மிகு நகரங்கள் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சியை நோக்கி” ((Smart Cities and Academia towards Action and Research (SAAR)) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளம் கல்வியாளர்களையும் அரசாங்கத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய நகர்ப்புற முயற்சிகளை ஆவணப்படுத்துவதும் மற்றும் ஆராய்ச்சி செய்வதும் இதன் நோக்கம். 


SAAR முன்முயற்சியின் கீழ், சீர்மிகு நகரங்கள் இயக்கம் "சமீக்ஷா தொடர்" (Sameeksha Series) என்ற பெயரில் 50 மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆறு இந்திய மேலாண்மை நிறுவனங்கள், எட்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், மூன்று திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள் மற்றும் 12 சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.




Original article:

Share: