8-வது ஊதியக் குழு -குஷ்பு குமாரி

 8-வது ஊதியக் குழுவை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். ஊதியக் குழு என்றால் என்ன? 


ஜனவரி 16-ம் தேதி அன்று, ஒன்றிய அரசு 8-வது ஊதியக் குழுவை அமைப்பதாக அறிவித்தது. இந்தக் குழு கிட்டத்தட்ட 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும். இது 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான பணம் வழங்கலைப் புதுப்பிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஓன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தக் குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய அம்சங்கள்


1. இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஊதியக் குழு, ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் இழப்பீட்டை தீர்மானிக்கிறது. இது ஓய்வூதியதாரர்களுக்கான பணம் வழங்கலையும் தீர்மானிக்கிறது. 8-வது ஊதியக் குழு சம்பளம் மற்றும் ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்களை பரிந்துரைக்கும். இது ஊதியம் மற்றும் பணம் வழங்கலில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.


2. ஊதியக் குழுக்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கட்டமைப்புகள், சலுகைகள் மற்றும் பணம் வழங்களை பரிந்துரைப்பதற்கு முன்பு அவர்கள் மற்ற பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்கின்றனர். அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் பெரும்பாலும் அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்கின்றன.


3. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நுகர்வுக்கான அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும், ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க ஒரு ஊதியக் குழு செயல்படுகிறது.


4. ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை ஊதிய நிவாரணத்தை திருத்துவதற்கான செயல்முறையை ஆணையம் பரிந்துரைக்கிறது. இது பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை பரிந்துரைகள் மட்டுமே, ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை.


அகவிலைப்படி (Dearness allowance (DA)) 


அகவிலைப்படி (DA) என்பது சம்பளத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இது வாழ்க்கைச் செலவை சரிசெய்ய உதவுகிறது மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index for Industrial Workers (CPI-IW)) பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீடு தொழிலாளர் பணியகத்தால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது


5. 1947-ம் ஆண்டு முதல், 7-வது ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2014-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு ஜனவரி 1, 2016 அன்று செயல்படுத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழு 2016-17 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி செலவின அதிகரிப்பை ஏற்படுத்தியது. நீதிபதி அசோக் குமார் மாத்தூர் 7-வது ஊதியக் குழுவின் தலைவராக உள்ளார்.


6. ஊதிய உயர்வால் பயனடையும் 49 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்களும் கிட்டத்தட்ட 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டில் முடிவடைகிறது. இந்த செயல்முறையைத் தொடங்குவது, பதவிக்காலம் முடிவதற்கு முன்பு பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் போதுமான நேரத்தை அளிக்கிறது என்று வைஷ்ணவ் கூறினார். 2025-ம் ஆண்டில் புதிய ஊதியக் குழுவை அமைப்பது, 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு அதன் பரிந்துரைகள் பெறப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


1. பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொதுவான விலை நிலை காலப்போக்கில் அதிகரிக்கும் விகிதமாகும். இது பணத்தின் வாங்கும் சக்தி அல்லது உண்மையான வருமானத்தில் குறைவை ஏற்படுத்துகிறது. அதாவது, பணவீக்கம் உயரும்போது, ​​ஒவ்வொரு நாணய அலகும் முன்பைவிட குறைவான பொருட்களையும் சேவைகளையும் வாங்க முடியும்.


2. உயரும் பணவீக்கம் குடும்பங்களின் நிதி நலனைப் பாதிக்கிறது. குறிப்பாக, குறைந்த வருமானம் அல்லது நிலையான வருமானம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் போது, அது அதே பெயரளவு வருமானத்துடன் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவைக் குறைக்கிறது. இதனால், குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படுகிறது. 


3. அதிக பணவீக்கம் ஒருவரின் பணத்தை வங்கி அல்லது அது போன்ற சேமிப்புகளில் வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் உண்மையான வட்டியை குறைக்கிறது. எடுத்துக்காட்டாக, சேமிப்பு வைப்புத்தொகையிலிருந்து 6% பெயரளவு வட்டியைப் பெறுவது என்பது பணவீக்கமும் 6%ஆக இருந்தால் உண்மையான வட்டியைப் பெறுவதில்லை என்பதாகும். மறுபுறம், கடன் வாங்குபவர்கள் பணவீக்கம் உயரும்போது பயனடைகிறார்கள். ஏனெனில், அவர்கள் குறைந்த "உண்மையான" வட்டி விகிதத்தை செலுத்துகின்றனர்.


4. பணவீக்கத்தை அளவிடுவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. இவற்றில் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)), மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)), மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்கம் (GDP deflator), உற்பத்தியாளர் விலைக் குறியீடு (Producer Price Index (PPI)) மற்றும் ஊதிய பணவீக்கம் (wage inflation) ஆகியவை அடங்கும். ஒவ்வொரு முறையும் விலை மாற்றங்களின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்துகிறது.




Original article:

Share: