வரவு செலவுத் திட்டமானது ஏன் வளங்களில் மட்டுமன்றி, ஊக்கத்தொகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்? -ஆஷிமா கோயல்

 வரி குறைப்புகளுக்குப் பிறகும் பெருநிறுவன முதலீடு பெரிதாக அதிகரிக்கவில்லை. இது வளங்கள் மட்டும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்பதைக் காட்டுகிறது.


வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவில் பேரியல் பொருளாதாரக் கொள்கை குறித்த சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது வளர்ச்சியின் கட்டாயத்தைக் கருத்தில் கொண்டு புரிந்துகொள்ளத்தக்கது. தொற்றுநோய்க்குப் பிறகு, பேரியல் பொருளாதாரக் கொள்கை (macroeconomic policy) வலுவான மீட்சியை இயக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. இது வெளிப்புற அதிர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க உதவியது. இந்த சுழற்சி வளர்ச்சியையும் பாதிக்கிறது.


தேர்தல் மாதங்களில் அரசாங்க செலவினங்களைக் குறைப்பது பொருளாதார மந்தநிலைக்கு ஒரு காரணமாக அமையும். நவம்பர் மாத இறுதிக்குள், ஒன்றிய அரசு அதன் மூலதனச் செலவின இலக்கில் 46.2% மட்டுமே செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் 58.5% உடன் ஒப்பிடப்படுகிறது. இருப்பினும், அதன் வருவாய்ச் செலவு சுமார் 1% அதிகமாகும். மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.5 டிரில்லியனில் ரூ.0.88 டிரில்லியனை மட்டுமே மாநிலங்கள் செலவிட்டுள்ளன. எனவே, எதிர் சுழற்சி நிதிக் கொள்கை (countercyclical fiscal policy) அரசாங்கம் அதிகமாகச் செலவிட வேண்டுமா அல்லது வரிகளைக் குறைக்க வேண்டுமா? என்பதுடன் அரசாங்கம் அதன் செலவுக்கான இலக்குகளை அடைய நிர்ணயம் செய்ய வேண்டும். 


இருப்பினும், தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பும் முக்கியமானது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7%-க்கும் அதிகமாக உள்ளது. இது உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். வட்டி செலுத்துதல்கள் ஒன்றிய அரசின் செலவினங்களில் 19% ஆகும். கடன் மற்றும் பற்றாக்குறை விகிதங்களைக் குறைப்பது நிதி நெகிழ்வுத்தன்மை, குறைந்த ஆபத்து ஊக்கத் தொகை (risk premium) மற்றும் குறுகிய வட்டி விகிதப் பரவல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு அவசியம்.


வருவாய் செலவினம் (revenue expenditure) சீராக இருந்தபோதிலும், பொது முதலீடு குறைந்ததைத் தொடர்ந்து மந்தநிலை ஏற்பட்டது. சிறந்த செலவினத் தரம் ஒரு தூண்டுதலை வழங்குகிறது என்பதை இது காட்டுகிறது. எனவே, அதிகரித்து வரும் பொது முதலீடு தொடர வேண்டும். செலவினங்களில் செயல்திறன் இதற்கான வளங்களை விடுவிக்கும். இருப்பினும், முதலீட்டை அதிகரிக்க வளங்களை விட ஊக்கத்தொகைகள் அதிகம் தேவை. எடுத்துக்காட்டாக, மாநிலங்களின் மூலதனச் செலவினத்தை அதிகரிக்க உதவிகரமான நிபந்தனைகள் தொடர வேண்டும்.


வரி குறைப்புகளுக்குப் பிறகும் பெருநிறுவன முதலீடு பெரிதாக உயரவில்லை. இதனால், வளங்கள் மட்டும் போதாது என்பதை இது காட்டுகிறது. அதிக வளர்ச்சி மற்றும் இலாபங்கள் தனியார் நிறுவன சேமிப்பில் அதிகரிப்புக்கு வழிவகுத்தன. 1990 களுக்கு முன்பு, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதமாக இருந்தது. 2005-06-க்குப் பிறகு, இது சராசரியாக 10.7 சதவீதமாக இருந்தது. இருப்பினும், தனியார் துறை நிலையான மூலதன உருவாக்கம் 2007-08-ல் 27.5 சதவீதமாக உயர்ந்தது. 


அப்போதிருந்து, இது 2015-21 முதல் சராசரியாக 21.5 சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளது. இதன் விளைவாக, பெருநிறுவன அல்லாத வணிக வருமானத்தின் பங்கு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. வரவு செலவு திட்டத்தின் மூலம் வணிகம் அல்லாத வருமானத்தின் மீது வரி விதிக்கப்படலாம். இதை முதலீட்டு வரி வரவு மூலம் ஈடுசெய்யலாம். கூடுதலாக, வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கான தூண்டுதல்கள் இருக்கலாம்.


உள்நாட்டு சேமிப்புகள் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வெளிநாட்டு சேமிப்புகளும் இதேபோல் செயல்படுகிறது. பொருளாதாரத்திற்கான வரவுகள் பொதுவாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைவிட அதிகமாகும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) என்பது முதலீட்டிற்கும் சேமிப்புக்கும் இடையிலான வித்தியாசமாகும். வெளிநாட்டு சேமிப்பு இடைவெளியை நிதியளிக்கிறது. எனவே, அரசாங்கம் கவனிக்க வேண்டியது வளங்கள் அல்ல, முதலீடுதான். தேவைக் கட்டுப்பாட்டாக கே-வடிவ மீட்பு (K-shaped recovery) மற்றும் நுகர்வு (consumption) என்ற கருத்தை மிகைப்படுத்தலாம். சமீபத்திய சுதந்திரமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆய்வுகள், நல்ல ஒட்டுமொத்த நுகர்வு வளர்ச்சியைக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு நுகர்வு 8-9 சதவீதம் வளர்ந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு 7.3 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. குறைந்த வருமானக் குழுக்களிலும் மீட்சி ஏற்பட்டுள்ளது.


இந்திய நடுத்தர வர்க்கம் பரவலாக வரையறுக்கப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதன் எண்ணிக்கை கீழ்நிலையில் உள்ளது. 2021-ம் ஆண்டில், 31 சதவீதம் (432 மில்லியன்) மக்கள் ஆண்டுக்கு ரூ.5-31 லட்சம் வருமான வரம்பில் இருந்தனர். வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களுக்கான (Fast-moving consumer goods (FMCG)) சந்தையின் அளவைக் குறிக்கிறது. இருப்பினும், 2023-ம் ஆண்டில், 5 சதவீதம், அதாவது 60 மில்லியன் மக்கள் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தனர். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதால், பிகெட்டியின் ஆய்வுகளைப் போலவே வருமான வரித் தரவைப் பயன்படுத்தும் ஆய்வுகள், நடுத்தர வர்க்கத்தின் நம்பத்தகாத சிறிய மதிப்பீடுகளை வழங்குகின்றன.


ஆனால், பெருநிறுவன பிரீமியமயமாக்கல் உத்திகள் (Corporate premiumisation strategies) மேல் முனையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, தேவையின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. வறுமை 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்திய நடுத்தர வர்க்கங்களின் முக்கிய அம்சம் அவர்களின் இயக்கம், குறிப்பாக கீழ் நிலையில் உள்ளவர்களை குறிக்கும். விலைவாசியை அதிகம் பாதிக்கும் இந்த குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் சிறப்பாக செயல்படும்.


 குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி குறைப்புக்கள் அவர்களின் செலவினங்களை அதிகரிக்கக்கூடும். இது அரசாங்கத்தின் செலவினங்களைவிட வேகமாக நடக்கும். பணவீக்கம் உண்மையான வரிகளை உயர்த்தி உண்மையான வருமானத்தைக் குறைப்பதால் வரி குறைப்புகளும் நியாயமானவை. இருப்பினும், வரி சீர்திருத்தத்தின் முக்கிய கவனம் இன்னும் எளிமைப்படுத்துதல், தவறுகளை சரிசெய்தல் மற்றும் வரி தளத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இருக்க வேண்டும்.


சமீபத்திய கணக்கெடுப்புகள், நுகர்வில் உணவுப் பங்கு 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. இதில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து, பால் பொருட்கள் உள்ளன. தானியங்களின் பங்கு காய்கறிகளை விடக் குறைந்துள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு அதிக வளங்களை மாற்றும் அரசாங்கத் திட்டங்களால் இது நிகழ்கிறது. காய்கறிகளின் விநியோகம் சரியான முறையில் மிகவும் ஒழுங்கமைக்கப்படவில்லை. சமீபத்திய மாதங்களில், பொருளாதாரம் விலை ஏற்றங்களுடன் போராடியதில் ஆச்சரியமில்லை.


ஆனால், வேளாண் சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்கள் மாநில அளவில் முன்னேறி வருகின்றன. 26 மாநிலங்கள் தனியார் சந்தைகளை ஏற்றுக்கொண்டு நேரடி பண்ணை விற்பனையை அனுமதித்துள்ளன. இருப்பினும், 14 மாநிலங்கள் மட்டுமே இதற்கான ஒழுங்குமுறை விதிகளை அறிவித்துள்ளன. வேளாண் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவதற்கும் பிற நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை விற்பனையை நம்பியிருந்தவர்களைவிட, உற்பத்தியைப் பன்முகப்படுத்திய உழவர்கள் அதிக லாபம் ஈட்டியதாக ஆராய்ச்சி காட்டுகிறது. பல்வேறு விளைபொருட்களின் விற்பனையை எளிதாக்குவதுதான் மாநிலங்கள் தங்கள் உழவர்களுக்கு உதவ சிறந்த வழியாகும்.


கடந்த ஆண்டு, வரவு செலவுத் திட்டத்தில் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புக்கான ஒரு கட்டமைப்பை முன்மொழிந்தது. இதில், ஒரு முக்கிய பகுதி உணவு விநியோகமாக இருக்க வேண்டும். இதன் மற்றொரு கவனம் விதிமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகும். ஆயிரக்கணக்கான பழமையான சட்டங்களை நீக்கிவிட்டதாக ஒன்றியம் கூறுகிறது. 


இருப்பினும், வணிகங்கள் இதை எளிதாகக் காணவில்லை. எளிமைப்படுத்தல் அரசாங்கத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்குகளை அடைய வேண்டும். இது நிறுவனங்களுடன் பணிபுரியும் உள்ளூர் அதிகாரிகளையும் சென்றடைய வேண்டும். உலகளாவிய செயல்திறன் மையங்களுக்கு (Global Capability Centre (GCC)) போட்டியிடுவதால் மாநிலங்கள் சீர்திருத்தங்களுக்கு அதிகளவில் திறந்திருக்கும்.


செலவு-மிகுதி பணவீக்கம் குறைவதால், வட்டி விகிதங்களும் குறையலாம். குறைந்த உண்மையான வட்டி விகிதங்கள் தேவையை ஊக்குவிக்கின்றன, குறிப்பாக இந்தியாவில் பல இளைஞர்கள் வீடுகளை வாங்கி தளவாடங்களால் நிறைக்கிறார்கள். வளங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், அவற்றின் செலவு மற்றும் வாய்ப்புச் செலவு முக்கியம். 


டிரம்பின் கொள்கைகள் அல்லது புவி-பொருளாதார அபாயங்கள் போன்ற வெளிப்புற சவால்களால் பழமைவாத பேரியல் பொருளாதாரக் கொள்கை நமக்குத் தேவை என்ற எண்ணம் காலாவதியான சிந்தனையை பிரதிபலிக்கிறது. தொற்றுநோய்களின் போது, ​​நமது அளவு, பொருளாதார பன்முகத்தன்மை மற்றும் இராஜதந்திரக் கொள்கை நடவடிக்கைகள் ஆகியவை வெளிப்புற அதிர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க உதவும் என்பதை நாங்கள் காட்டினோம்.


வரவு செலவுத் திட்ட முன்னுரிமைகள் பொருளாதாரத்தின் தேவைகளுடன் ஒத்துப்போக வேண்டும். அவை உற்பத்தி நிலைமைகளை மேம்படுத்த உதவ வேண்டும். இது அதிக பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்க அனுமதிக்கும். வெறுமனே வளங்கள் இருப்பது தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. நன்கு வடிவமைக்கப்பட்ட சலுகைகள் வெற்றிக்கு மிக முக்கியமானவை.


எழுத்தாளர் முன்னாள் நாணயக் கொள்கை குழு உறுப்பினர் மற்றும் IGIDR-ல் தகைசால் பேராசிரியர் ஆவார்.




Original article:


Share: