வரவு செலவு அறிக்கை 2025-26: ஒரு நம்பிக்கைக்குரிய முதல் படி, ஆனால் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் -ஷிஷிர் குப்தா, ரிஷிதா சச்தேவா

 2000 முதல் 2020 வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புற பங்கு 52-55%-க்கு இடையில் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மக்கள்தொகையின் நகர்ப்புற பங்கு தொடர்ந்து அதிகரித்ததால் இந்த காலகட்டத்தில் தனிநபர் நகர்ப்புற வருமானம் கிராமப்புறங்களை விட மெதுவாக வளர்ந்ததை இது சுட்டிக்காட்டுகிறது.


உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டுப் பொருளாதாரம் இருந்த காலகட்டத்தில், பிப்ரவரி 1, 2025 அன்று ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 6.4% ஆகவும், 2025-26 நிதியாண்டில் 6.3-6.8% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் 8% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை விட மிகக்  குறைவான வளர்ச்சியாகும். வருமான வரி குறைப்பு மூலம் தேவை ஊக்குவிப்புக்கு (demand stimulus) அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், முன்மொழியப்பட்ட நகர்ப்புற சீர்திருத்தங்கள், உத்தேச சீர்திருத்தங்கள் பற்றி போதுமானதாக இல்லை. இந்திய நகரங்கள் மற்றும் பெரு நிறுவனங்களை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுவதே இந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும். இவை நகர்ப்புறங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% பங்களிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தேசிய உற்பத்தியில் 40% மற்றும் ஏற்றுமதியில் 55% உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் பெரிய வணிகங்களில் நடப்பதால், இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.


"நகர்ப்புற வளர்ச்சி" என்பது முக்கிய வளர்ச்சித் தூண்களில் ஒன்றாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. உலகம் முழுவதும், நகரமயமாக்கலும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாகச் செல்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், நகரங்களுக்கு முன்னுரிமை அளிப்பது இப்போது முன்னெப்போதையும் விட தற்போது முக்கியமானது. 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புற பங்கு 52-55%-க்கு இடையில் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில், இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தது.  தனிநபர் நகர்ப்புற வருமானம் (per capita urban income) கிராமப்புற வருமானத்தை விடமெதுவாக வளர்ந்தது. 


இருப்பினும் நகரங்கள் கிராமப்புறங்களை விட மூன்று மடங்கு அதிக உற்பத்தித்திறன் கொண்டவை.  நகர உற்பத்தித்திறன் குறைந்தால், அது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். நகர்ப்புற வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் நகரங்களில் குறைந்த வாழ்க்கைத் தரம் ஆகும்.  எடுத்துக்காட்டாக, நகராட்சி கழிவுகளில் 95% சேகரிக்கப்பட்டாலும், அதில் 50% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. பெரிய நகரங்களில் (litre per capita per day (lpcd)) 135-150 ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு லிட்டர் என்ற அளவுகோலுடன் ஒப்பிடும்போது நீர் கிடைக்கும் தன்மை சுமார் 115 lpcd ஆகும். மேலும், விலை-வருமான விகிதம் (price-to-income ratio (PTI)) கொண்ட  சராசரி வருமானம் ஈட்டும் குடும்பத்தினரால் 950 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கான விலை நமது நகரங்களில் 11 ஆக உள்ளது.  இது 5 மலிவு விலை அளவுகோலுக்கு மாறாக உள்ளது.


போதுமான சேவை வழங்கல்  இல்லை


துணை-உகந்த சேவை (Sub-optimal service) வழங்கல் பல காரணிகளால் ஏற்படுகிறது.  நிதி பற்றாக்குறை அதில் ஒரு முக்கிய காரணியாகும். இந்திய நகரங்கள் நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு செலவழிக்க வேண்டிய தொகையில் கால் பகுதியை செலவிடுகின்றன. நகர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல திட்டமாக, ₹1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை (Urban Challenge Fund) உருவாக்குவது என்ற மைய அரசின் யோசனை உள்ளது. இந்த நிதி, பணத்தை திறமையாகப் பயன்படுத்துதல், தெளிவாகத் திட்டமிடுதல் மற்றும் சேவைகளை மேம்படுத்த நிலையான நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


திடக்கழிவு மேலாண்மை (solid waste management (SWM)) தொடர்பான 27 பெரிய நகராட்சிகளின் செலவுகள் மற்றும் விளைவுகளைப் பற்றிய எங்கள் பகுப்பாய்வில், 19 நகராட்சிகள் வழக்கத்தை விட அதிக செலவுகளை செய்துள்ளன. ஆனால், தூய்மை இந்தியா திட்டத்தின் தரவரிசையின் கீழ் இதில் உள்ள நகராட்சி எதுவும் சரியான  தரநிலை பெறவில்லை. தூய்மை சேவைகளில் ஏற்பட்ட மறுபாடுகளுக்கு 23% செலவினங்கள் காரணமாகும். மீதமுள்ளவை நிலையான தலைமை, குடிமக்களின் ஈடுபாடு போன்ற பணவியல் சாராத பரிமாணங்களால் ஏற்படுகின்றன. இதனால், அதிக வளங்களுடன், சிறந்த செலவினத் திறனுக்கான தேவையும் உள்ளது.


குடிமை சேவைகளின் போதுமான விநியோகம் இல்லாதது மட்டுமல்லாமல், இந்திய நகரங்கள் அதிக வீட்டு விலைகளால் பாதிக்கப்படுகின்றன. உலகளவில், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையின் அளவோடு இணைந்து நகர்கிறது. இந்தியா தற்போது, “அரை-வெளிப்படையான” (semi transparent) நாடுகளின் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் அதன் 11 விலை-வருமான விகிதம் (PTI) இந்த வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துப்போகிறது. அரை-வெளிப்படையான சந்தைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நம்பகமான மற்றும் கடுமையான நில பயன்பாட்டு திட்டமிடல் இல்லாததும், அதன் மோசமான செயல்படுத்தலும் ஆகும். 


வீட்டுவசதியை மிகவும் மலிவு விலையில் வழங்க, இந்தியா மேம்படுத்தக்கூடிய நிலத்தை வெளிப்படையான முறையில் தெரிவிக்க வேண்டும். இது புதிய ரியல் எஸ்டேட் உருவாக்குபவர்களுக்கு சந்தையில் நுழைய அனுமதிப்பதன் மூலம் போட்டியை அதிகரிக்கும். அதிக போட்டி விலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் வீடுகள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இது அடுத்த கேள்வியை எழுப்புகிறது, இந்த சீர்திருத்தங்களை யார் செயல்படுத்துவார்கள்? மேற்கூறிய அனைத்தும் மூன்றாம் அடுக்கின் (Third tier) கீழ் வருவதால், தெளிவான பதில் மாநகராட்சிகள் இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும். 


இருப்பினும், உண்மையில், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.  இந்தியாவில் ஒரு நகராட்சி ஆணையரின் சராசரி பதவிக்காலம் வெறும் 10 மாதங்கள் மட்டுமே என்பதால், இவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. மேயர்கள் மற்றும் ஆணையர்களுக்கான நிலையான அமைப்பிலிருந்து தொடங்கி, நிர்வாக சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை உள்ளது.


ஒருங்கிணைப்பு விளைவு பகுதியை அதிகப்படுத்துதல்


சவால் நிதி (Challenge Fund), ஒரு முக்கிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். 8,000 நகரங்கள் மற்றும் மாநகரங்களில், நகர்ப்புற புதுப்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை எவை? மாநில தலைநகரங்களுடன் இணைந்து மில்லியன் கணக்கான நகரங்களின் ஒருங்கிணைப்பு விளைவை அதிகப்படுத்துவது ஒரு நல்ல தேர்வாகும். இந்த நகரங்கள் ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியை அதிகரின்றன மற்றும் ஒருங்கிணைப்பு விளைவை அதிகரிக்க முடியும். இந்த நகரங்களின் குழு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% ஆகும் அவை பெரும்பாலான மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களாக உள்ளன. மேலும், அவை வெவ்வேறு பகுதிகளில் பரவியுள்ளன. 


முற்றிலும் புதிய நகரங்களை உருவாக்குவது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.  அதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள அதிக திறன் கொண்ட நகரங்களை மேம்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறையாகும். குருகிராம் ஒரு பெரிய பொருளாதார மையமாக மாற 20 ஆண்டுகள் 1991-2011 வரை எடுத்தது. இந்தக் காலகட்டத்தில், அதன் மக்கள் தொகை 2,00,000-லிருந்து 1-மில்லியனாக வளர்ந்தது. 


நிலம், அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியில் இருந்து திறமையான தொழிலாளர்களை அணுகுவது போன்ற சிறந்த சூழ்நிலைகள் இருந்தபோதிலும் இது நடந்தது. புதிய நகரங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பொருளாதார ஆற்றலுடன் ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துவது நகர்ப்புற வளர்ச்சியை அதிகரிக்க விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.


நகர்ப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு, இறக்குமதிகள் மீதான அடிப்படை சுங்க வரியையும் (Basic Customs Duty BCD)) ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை குறைத்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் போட்டியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரசாயனங்கள், மருந்துகள், லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான அடிப்படை சுங்க வரியைக் குறைப்பதன் மூலம், சராசரி கட்டண விகிதம் 13% இருந்து 10.5% ஆகக் குறைந்துள்ளது. அதிக கட்டணங்கள் செலவுகளை உயர்த்துகின்றன. 


இதனால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், இது உள்நாட்டு நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான விலையை அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இணைவது கடினம். உதாரணமாக, இந்தியாவில் ஆப்பிள் போன்களின் இறக்குமதிக்கு இதே அளவிலான வரி விதிக்கப்படுவதால், அதன் விலை 20% அதிகமாக உள்ளது. இருப்பினும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு தொடர்புடைய கட்டணங்கள் 1-3% வரை இருக்கும். 


பல தயாரிப்புகள் மீது விதிக்கப்படும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியை (Agriculture Infrastructure Development Cess (AIDC)) நீக்குவதும் முக்கியமான படியாகும். இது முன்பு இருந்தது போலவே பயனுள்ள பாதுகாப்பு விகிதத்தை பராமரிக்க உதவும். இறுதியாக, 2014 முதல் 2019 ஆம் ஆண்டு தொழில் செய்வதை எளிதாக்கும் தரவரிசையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. 


இருப்பினும், முன்னேற்றத்திற்கு நிறைய வாய்ப்புகள் இன்னும் உள்ளன. ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழுவை முன்மொழிந்துள்ளது. இருப்பினும், உண்மையான  தாக்கத்தை ஏற்படுத்த, இதை ஒரு நிலையான காலக்கெடுவிற்குள்  செயல்படுத்தப்பட வேண்டும்


இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் முக்கிய பகுதிகளை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதற்கு இந்த வரவு செலவு அறிக்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஆனால், செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. 

ஷிஷிர் குப்தா ஒரு மூத்த ஆய்வாளராகவும், ரிஷிதா சச்தேவா சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில்  (Centre for Social and Economic Progress) ஒரு கூட்டு ஆராய்ச்சி யாளராக உள்ளார்.




Original article:

Share: