இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court(ICC)) பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கை நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தடைகள் அமெரிக்க குடிமக்கள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (International Criminal Court(ICC)) விசாரணைகளில் ஈடுபட்டுள்ளவர்களை குறிவைக்கின்றன. அவை, இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளை விசாரிப்பவர்களுக்கும் பொருந்தும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இந்த முடிவைக் கண்டித்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஐ.சி.சியின் கைது வாரண்டிற்கு இந்த நடவடிக்கை ஒரு பிரதிபலிப்பாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court(ICC)) பற்றிய சில தகவல்கள் :
இந்த நீதிமன்றம் 2002-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றங்கள் ஆகியவற்றை விசாரிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், இதில் உள்ள உறுப்பு நாடுகள் இந்தக் குற்றங்களைத் தாங்களாகவே விசாரிக்க விரும்பாதபோது அல்லது முடியாமல் இருக்கும்போது இந்த நீதிமன்றம் தானாக விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இதில், உறுப்பு நாடுகளின் குடிமக்கள் அல்லது உறுப்பு நாடுகளின் பிரதேசத்தில் மற்றவர்களால் செய்யப்படும் குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்க முடியும். இந்த அமைப்பில், 125 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில், 2025-ம் ஆண்டிற்கான நீதிமன்றத்தின் பட்ஜெட் சுமார் 195 மில்லியன் யூரோக்கள் ($202 மில்லியன்) ஆகும்.
பல பிராந்தியங்களில் உள்ள வழக்குகளை ஐ.சி.சி விசாரித்து வருகிறது. இவற்றில் பாலஸ்தீன பிரதேசங்கள், உக்ரைன் மற்றும் உகாண்டா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் அடங்கும். லத்தீன் அமெரிக்காவில் வெனிசுலாவிலும், ஆசியாவில் மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸிலும் உள்ள வழக்குகளை ஐ.சி.சி விசாரித்து வருகிறது.
இதன் அடிப்படையின்படி, ஐ.சி.சி 32 வழக்குகளை கையாண்டுள்ளது. சில வழக்குகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நபர்கள் உள்ளனர் என்றும் கூறுகிறது. ஐ.சி.சி நீதிபதிகள் குறைந்தது 60 கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளனர்.
ஐசிசி நீதிபதிகள் 11 தண்டனைகள் மற்றும் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஹேக் (Hague) நகரில் உள்ள ஐசிசி தடுப்பு மையத்தில் (ICC detention center) 21 பேர் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 31 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களின் இறப்புகள் காரணமாக 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.
11 தண்டனைகளில், 6 வழக்கு நீதிமன்றத்தின் முக்கிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்டன. அவற்றில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். மீதமுள்ள தண்டனைகள் சாட்சிகளை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக விதிக்கப்பட்டன. தண்டனை பெற்ற ஆறு பேரும் காங்கோ ஜனநாயகக் குடியரசு, மாலி மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க போராளித் தலைவர்கள் (African militia leaders) ஆவார்.
சிறைத்தண்டனைகள் ஒன்பது முதல் 30 ஆண்டுகள் வரை இருந்தன. இதன் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை ஆகும்.
ஐ.சி.சி நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மோதலில் கொலை, துன்புறுத்தல் மற்றும் பட்டினியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களுக்கு அவர் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர் யோவ் கல்லண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் என்றும் அழைக்கப்படும் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கும் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. மாஸ்ரிக்கான வாரண்டில், அக்டோபர் 7, 2023 அன்று காசா போரைத் தூண்டிய இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் போது கொலை, கற்பழிப்பு மற்றும் பணயக்கைதிகள் பிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.
இஸ்ரேலியத் தலைவர் இந்த முடிவை யூத-விரோதமானது என்று கூறி நிராகரித்தார். குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் தவறானவை என்று அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த பட்டியலில் உள்ளார். உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக அவர் மீது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் 2023-ல், நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு, கிரெம்ளின் அதை அர்த்தமற்றது என்று கூறியது. உக்ரைன் படையெடுப்பின்போது அதன் படைகள் கடுமையாக தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மாஸ்கோ பலமுறை மறுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில், ஐசிசி வழக்கறிஞர் மூத்த ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் தலைவர்களுக்கும் கைது வாரண்ட்களை கோரியிருந்தார். இருப்பினும், அந்தக் கோரிக்கைகள் நீதிபதிகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த நீதிமன்றம் பல ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற சில நாடுகள் உறுப்பினர்களாக இல்லை. அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட எந்தவொரு வழக்குகளுக்கு ICC பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
மியான்மர் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், சில எல்லை தாண்டிய குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்தக் குற்றங்கள் ஓரளவு ஐ.சி.சி உறுப்பினரான வங்கதேசத்தில் நடந்தன. நாடுகடத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை குற்றங்களில் அடங்கும். இதன் விளைவாக, வழக்கறிஞர்கள் முறையான விசாரணையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்ரேலும் நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை. அதன், அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், பாலஸ்தீன பிரதேசங்கள் 2015-ம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராகின. இதன் காரணமாகவும் நீதிபதிகளின் தீர்ப்பின் காரணமாகவும், நீதிமன்றம் சாத்தியமான போர்க்குற்றங்களை விசாரிக்க முடியும். இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகளின் நடவடிக்கைகளும் காசா பகுதியில் இஸ்ரேலியர்களின் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.