முக்கிய அம்சங்கள் :
1. சிங் சனிக்கிழமை மாலை இம்பாலில் இருந்து டெல்லிக்குச் சென்றார். இந்த வாரம் தேசிய தலைநகருக்கு இது அவரது இரண்டாவது பயணமாகும். அவர் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் தனியாக இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
2. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு சந்திப்பை நடத்தினார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் அங்கு இருந்தார். சிங் ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டும் இம்பாலுக்கு, பாஜகவின் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் சம்பித் பத்ராவுடன் அவர் விமானத்தில் திரும்பினார்.
3. ஞாயிற்றுக்கிழமை மாலை, சிங், பத்ரா மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த பிற மூத்த பாஜக தலைவர்கள் ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்தனர். அந்தக் அமைச்சரவைக் குழுவில் அமைச்சர்கள் பிஸ்வஜித் சிங், சபம் ரஞ்சன் சிங், கோவிந்தாஸ் கோந்தோஜம் மற்றும் பசந்தா சிங் ஆகியோர் அடங்குவர். இந்தக் கூட்டத்தின் போது, சிங் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
4. திங்கட்கிழமை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, மணிப்பூரில் புதுப்பிக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளின் போது அவரது ராஜினாமா வந்துள்ளது.
5. மணிப்பூரைச் சேர்ந்த பல பாஜக எம்எல்ஏக்கள் பைரனின் தலைமையின் மீது அதிருப்தி அடைந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மணிப்பூர் நெருக்கடியை கட்சி தலைமையிலான ஒன்றியம் கையாண்ட விதத்திலும் அவர்கள் வருத்தமடைந்தனர். இதனால், இந்த எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.
6. தனது ராஜினாமா கடிதத்தில், ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையாக ஐந்து முக்கிய விஷயங்களை சிங் எடுத்துரைத்தார். இதில், மாநிலத்தின் ”பிராந்திய ஒருமைப்பாடு” (territorial integrity) பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ”சட்டவிரோத குடியேறிகள்” (illegal immigrants) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான ”போராட்டம்” தொடர வேண்டும் என்றும் அவர் விரும்பினார். கூடுதலாக, திருத்தப்பட்ட ”சுதந்திர இயக்க ஆட்சியை” (Free Movement Regime) பயோமெட்ரிக் சோதனைகளுடன் வைத்திருக்கவும் ”இந்தோ-மியான்மர் எல்லை கட்டுமானத்தை” (Indo-Myanmar border construction) தொடரவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பிரச்சினைகள் இவைகளாகும்.
உங்களுக்குத் தெரியுமா? :
1. சிங் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தபோது, சட்டமன்றத்தை இடைநிறுத்தி வைக்க அவர் பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இது சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தனது மாற்றீட்டில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு நேரம் கொடுக்கும். இருப்பினும், எந்தவொரு தலைவருக்கும் பெரும்பான்மையான கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியிருக்கலாம்.
2. அரசியலமைப்பின் பிரிவு 356, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது நடக்கவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும்.
3. குகி-சோ குழுக்களும் அவர்களது சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்களும் மாநிலத்தில் இன மோதலுக்கு சிங்கைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த எம்எல்ஏக்களில் பாஜகவைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குவர். இதில், இருவர் அமைச்சர்களாகப் பணியாற்றுகின்றனர். இதற்கான மோதல் மே 3, 2023 அன்று தொடங்கியது.
4. திங்கட்கிழமை தொடங்கவிருந்த மணிப்பூர் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருடன் திருப்புமுனை ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமை மாற்றத்தைக் கேட்டிருந்தனர். ஆனால், அவர்களின் முறையீடுகள் புறக்கணிக்கப்பட்டன. சட்டமன்ற அமர்வின்போது "முன்னோடியில்லாத மற்றும் கடுமையான நடவடிக்கையை" எடுக்க அவர்கள் தயாரானார்கள். காங்கிரஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை (no-confidence motion) ஆதரிக்க அவர்கள் திட்டமிட்டனர்.
5. மே 3, 2023 அன்று, மணிப்பூரில் இன வன்முறை வெடித்தது. இது இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மையான குழுவான மெய்டெய் (Meitei) மற்றும் சுற்றியுள்ள மலைகளைச் சேர்ந்த குகி-சோ பழங்குடி சமூகத்திற்கு (Kuki-Zo tribal community) இடையில் இருந்தது.