உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தியா -பூஜா ராமமூர்த்தி

 மற்ற நாடுகளின் கருத்துகளையும் கேட்க கற்றுக்கொண்டால் உலகளாவிய தெற்கின் 'குரலாக' இருப்பதற்கான இந்தியாவின் விருப்பம் நிறைவேறும். 


ஜனவரி 2025-ல், ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, அவர் இன்றைய இந்தியா தனது கருத்துக்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்கிறது என்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுவாக எழுப்புவதாக பிரதமர் கூறினார். ஆகஸ்ட் 2024-ல், 3-வது உலகளாவிய தெற்கு குரல் உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களை வழிநடத்த விரும்புவதாகக் கூறினார். இந்த சீர்திருத்தங்கள் வளரும் நாடுகள் ஒரு நியாயமான உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க உதவும் என்று ​​பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


வளரும் நாடுகளின் நலனுக்காகப் போராடுவதில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை எது பாதித்துள்ளது? மேலும், ஒரு பயனுள்ள உலகளாவிய வளர்ச்சி கூட்டாளியாக மாறுவதற்கு மாற்றத்தை நாடு எவ்வாறு பாதிக்க முடியும்?


இந்தியாவின் அணுகுமுறை அணிசேரா இயக்கத்திலிருந்து (Non-Alignment Movement (NAM)) வேறுபட்டது. இது காலனித்துவ நீக்கம் அல்லது மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. உலகளாவிய தெற்கில் தனது பங்கை விரிவுபடுத்தும் அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பாரம்பரிய நட்புநாடுகளுடனும் இந்தியாவின் உறவை வலுப்படுத்துகிறது. முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஜனவரியில் இந்தியாவுக்கு பயணம்செய்தார். இது வளர்ந்துவரும் உறவுகளைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2024-ல், பிரதமர் நரேந்திர மோடி போலந்துக்கு பயணம், புதிய கூட்டணிகளை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் வாதம்


சீனாவின் பதில், வளர்ந்துவரும் உலகளாவிய சக்தியை இந்தியா எதிர்கொள்ள முயற்சிப்பதாக சிலர் நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவில் அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியைக் காட்டுகின்றன. சீனா ஏற்கனவே வலுவான இருப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலீடு செய்கிறது. சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த தொழில்மயமான நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகின்றன. ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட்  (India, Japan, Australia, and the United States (Quad)) கூட்டாண்மை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி கதையின் ஒரு பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது முழுமையாக எதுவும் வெளியிடப்படவில்லை. 


இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாக தனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பல உலகளாவிய தெற்கு நாடுகள் தற்போதைய பொருளாதார காரணிகளால் அதிருப்தி அடைந்துள்ளன. இந்த நாடுகள் கடன் மற்றும் கடுமையான நிபந்தனைகளுடன் போராடுகின்றன. அவர்கள் மற்றொரு சீனாவையோ அல்லது ஒரு புதிய மேற்கத்திய நிறுவனத்தையோ விரும்பவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்தியா உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு பலமாக செயல்பட முடியும். இருப்பினும், இதில் வெற்றிபெற வலுவான செயல்கள் மற்றும் திட்டங்களுடன் இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.


இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்


முதலாவதாக, இந்தியா ஒரு புதிய வளர்ச்சி ஒத்துழைப்பு முறையை வலியுறுத்த வேண்டும். இந்த அணுகுமுறையை உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடாது. வளரும் நாடுகளுடன் சமமான கூட்டாண்மைகளை இந்தியா ஊக்குவிக்கிறது. பாரம்பரிய உலக சக்திகளிடமிருந்து வேறுபட்டு இருக்க விரும்புகிறது. இருப்பினும், அதன் நடவடிக்கைகள் சில நேரங்களில் வேறுபட்ட அணுகுமுறையைக் காட்டுகின்றன. இந்தியா பெரும்பாலும் "முதலில் இந்தியா" என்ற உத்தி மூலம் தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.


உலகளாவிய தெற்குப் பகுதியில் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இந்தியா சமீபத்தில் “உலகளாவிய மேம்பாட்டு ஒப்பந்தத்தை” (Global Development Compact) அறிவித்தது. இந்தத் திட்டம் இந்தியாவின் சொந்த அனுபவங்கள் மற்றும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் தனித்துவமான நாடாகவும் உள்ளது. இந்தியா தனது அறிவைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், உலகின் பிற தென் நாடுகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியா தனது நாட்டிற்குள் எதிர்கொண்டு வரும் சவால்களைத் தீர்க்க உதவும். நாடுகள் தங்களை சமமாக நடத்தும் நட்புநாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. இந்தியா இதைச் செய்யத் தவறினால், அது உண்மையான நாடாகக் கருதப்படுவதற்குப் பதிலாக ஒரு மேலாதிக்க சக்தியாகக் கருதப்படலாம்.


இரண்டாவதாக, வளர்ச்சி சவால்களைத் தீர்ப்பதில் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் இந்தியா கவனம் செலுத்துகிறது. சர்வதேச நிகழ்வுகளில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle For Environment)  மூலம் நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சி மக்கள் குறைந்த நுகர்வு வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது.  இது முக்கியமானது என்றாலும், இந்தியா தனது அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும். மனித வளங்கள் மற்றும் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது எதிர்கால நிலைத்தன்மை சவால்களை மிகவும் திறம்பட சமாளிக்க உதவும். திறன் இந்தியா (Skill India) மற்றும் பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டங்கள்,  போன்ற இந்தியாவின் முன்முயற்சிகள் உலகளாவிய தென் நாடுகளுக்கு பயனளிக்கும். இந்த நாடுகளும் தங்கள் உள்நாட்டு தொழில்களை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியாவின் திறன் மேம்பாட்டு முயற்சிகள் முக்கியமாக இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (Indian Technical and Economic Cooperation (ITEC)) திட்டத்தில் கவனம் செலுத்துகின்றன. இந்த திட்டம் குறுகிய கால, துறை சார்ந்த பயிற்சி  நடத்துகிறது. இருப்பினும், நீண்ட கால தாக்கத்திற்கு, நாடுகள் தங்கள் சொந்த நிறுவனங்களை உருவாக்க இந்தியா உதவ வேண்டும். இது ஒரு வலுவான பணியாளர்களை உருவாக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடனான (micro, small and medium enterprises (MSMEs)) அனுபவத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் அறிவைப் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தலாம். டிஜிட்டல் உட்கட்டமைப்பு, காலநிலை மற்றும் எரிசக்தி தீர்வுகள் மற்றும் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஒத்துழைப்பிற்கான முக்கிய பகுதிகளாகும்.


முன்னால் உள்ள இலக்கு


இறுதியாக, இந்தியா மேலும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 2023-ல், G-20 தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்த போது, ஆப்பிரிக்க ஒன்றியம் G-20-ல் நுழைவதை ஆதரித்தது. இது உலகளாவிய நிறுவனங்களை அதிக பிரதிநிதித்துவப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டியது. முதலில், இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்புக்காக தற்போதுள்ள நிறுவன வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற அனுபவமிக்க நாடுகளும் அடங்கும். இருப்பினும், நீண்ட காலத்திற்கு, சர்வதேச ஒத்துழைப்புக்காக இந்தியா அதன் சொந்த வலுவான உள்நாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். முத்தரப்பு கூட்டாண்மைகள் மற்றும் புதிய உலகளாவிய ஈடுபாடுகள் ஆகியவை செயல்படுத்துவதன் மூலம் கற்றல் செயல்முறையாக பார்க்கப்பட வேண்டும். இந்த ஒத்துழைப்புகளிலிருந்து இந்தியா அனுபவத்தைப் பெற வேண்டும். மேலும், இந்தியா தலைமையிலான உலகளாவிய முயற்சிகளை விரிவுபடுத்த அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்.


இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க விரும்புகிறது. அது நிறைவேற பிற நாடுகளின் கருத்துக்களையும் கேட்க  வேண்டும். கடந்த காலத்தில், இந்தியா அணிசேரா இயக்கத்தை (Non-Aligned Movement (NAM)) வழிநடத்தியபோது, ​​வளரும் நாடுகளுக்கு ஒரு புதிய, மூன்றாவது வழி இருப்பதை உலகிற்குக் காட்டியது. அது போன்ற ஒரு வாய்ப்பை இந்தியா இப்போது தவறவிடக்கூடாது.


பூஜா ராமமூர்த்தி புதுதில்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் (Centre for Social and Economic Progress (CSEP)) ஒரு இணை உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share: