பள்ளிக் கல்வியில் இந்தியா தனது முதலீட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
₹500 கோடி ஒதுக்கீட்டில் கல்விக்கான AI சிறப்பு மையம், பள்ளிகளுக்கான அகன்ற அலைவரிசை வலையமைப்பு இணைப்பு (broadband connectivity), ஐந்து மூன்றாம் தலைமுறை IIT-களின் விரிவாக்கம் மற்றும் இந்திய அறிவு அமைப்புகளுக்கான நிதி அதிகரிப்பு போன்ற சில உயர்மட்ட அறிவிப்புகளைத் தவிர, கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது கல்விக்கு அதிக ஒதுக்கீடுகளை 2025 பட்ஜெட் உறுதியளித்துள்ளது.
உயர்கல்விக்கு 7% அதிகரிப்பு இருந்தது, இருப்பினும் 2023-24 நிதியாண்டுக்கான உண்மையான செலவு 2025-26 ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளைவிட 10% அதிகமாகும். உயர்கல்வியில் ஒரு முக்கிய சவால் என்னவென்றால், முன்னேறிய நாடுகளைப் போலவே UGC சீர்திருத்தங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி தேவைப்படுகிறது. உதாரணமாக, நான்கு ஆண்டு பட்டப்படிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துதல், மாணவர்கள் பல கல்வி நிறுவனங்களில் படிப்புகளை எடுக்க அனுமதித்தல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேர்க்கைகளை செயல்படுத்துதல் மற்றும் பிற கட்டமைப்பு மாற்றங்கள் கணிசமான நிதியைக் கோருகின்றன.
இது தவிர்க்க முடியாமல் மாநில அரசாங்கங்களின் மீது விழும். இருப்பினும், 2025 பட்ஜெட் இந்த நிதி கவலைகளை போதுமான அளவு நிவர்த்தி செய்வதாகத் தெரியவில்லை. ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அதே வாரத்தில் ASER 2024 அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையில், குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் (foundational literacy and numeracy (FLN)) உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டியது. COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கற்றல் இழப்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில், FLN அளவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டினாலும், NIPUN பாரத் திட்டத்தின் கீழ் 2026-27 இலக்கான முழுமையான FLN-ஐ அடைவதற்கு இந்தியா இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டியுள்ளது.
2024-25 திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் (revised estimates (RE)) ஒப்பிடும்போது, பள்ளிக் கல்விக்கு கூடுதலாக ₹11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 16% அதிகரிப்பு ஆகும். இருப்பினும், மொத்த பட்ஜெட்டில் ஒரு சதவீதமாக, இந்த அதிகரிப்பு 0.12 சதவீத புள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளது. இது ஒதுக்கீட்டை 1.55% ஆகக் கொண்டுவருகிறது. உயர்கல்வியில், பட்ஜெட் பகுதி 0.99%-ல் மாறாமல் உள்ளது. கேந்திரிய வித்யாலயா சங்கதன் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க நிதியைப் பெற்றாலும், இந்த அதிகரிப்பு பள்ளிக் கல்வித் திட்டங்களை முதன்மையாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு அதிக நிதி வரவை பிரதிபலிக்கிறது.
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy (NEP)) முழுமையாக செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இதில் 5+3+3+4 முறையும் மற்றும் 3ஆம் வகுப்பு வரை ஐந்து ஆண்டுகள் ஆரம்பக் கல்வி அடங்கும். முழு FLN-ஐ அடைவதற்கான திறவுகோலாக ஆரம்பக் கல்வி முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், இதில் ஒரு முக்கியமான இடைவெளி உள்ளது. 1ஆம் வகுப்புக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் குறைந்த ஊதியம் பெறும் அங்கன்வாடி ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் ஏற்கனவே அதிக சுமையுடன் உள்ளனர் மற்றும் பெரும்பாலும் FLN இலக்குகளை அடைய போதுமான பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். முழுமையான FLN-ஐ அடைவதற்கு கவனம் செலுத்தும் FLN இயக்கம் முக்கியமானது.
இது மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கும் இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்துவதற்கும் ஒரு முன்நிபந்தனையாகும். அடுத்த சில ஆண்டுகளில், ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பொறுத்து, இந்தியா அதன் முழு FLN இலக்கை அடைவதை உறுதிசெய்ய அரசாங்கம் பள்ளிக் கல்வி முதலீடுகளை மேலும் வலுப்படுத்த இது மிக முக்கியமான நேரமாகும்.