இந்த கணக்கெடுப்பு என்பது முடிவடையும் நிதியாண்டிற்கான இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கையாகும். இது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையால் தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை தயாரிப்பதற்கு தலைமை பொருளாதார ஆலோசகர் (Chief Economic Advisor (CEA)) வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படுகிறது.
2024-25ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த ஆய்வறிக்கை நிறைவடையவுள்ள நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கையாகும். இது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் (CEA) வழிகாட்டுதலின்கீழ் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையால் தயாரிக்கப்படுகிறது. கணக்கெடுப்பானது இரண்டு முக்கிய பொருளாதார அறிகையை எடுத்துக்காட்டுகிறது.
கணக்கெடுப்பை அறிமுகப்படுத்திய தலைமைப் பொருளாதார ஆலோசர் (CEA) V.அனந்த நாகேஸ்வரன், உலகளாவிய பொருளாதார சூழல் சாதகமற்றதாகவும், சவாலானதாகவும் மாறிவிட்டது என்று கூறினார். மேலும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய ஆண்டுகளில், உலகளாவிய வர்த்தகத்தின் இயக்கமானது கணிசமாக மாறிவிட்டது. உலகமயமாக்கலில் (globalization) இருந்து வர்த்தகம் அதிகரித்து வரும் வர்த்தக பாதுகாப்புவாதத்திற்கு (trade protectionism) மாறியுள்ளது. இந்த மாற்றம் அதிகரித்த நிச்சயமற்ற தன்மையையும் கொண்டு வந்துள்ளது.
உலகளாவிய கட்டமைப்பு சக்திகளில் இந்த மாற்றத்தின் தாக்கம் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. மேலும், உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால தேக்கநிலைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன.
இரண்டாவது பெரிய சவால், உலகின் உற்பத்தி வல்லரசு நாடான சீனாவின் ஆதிக்கத்தைப் பற்றியது. இது, உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் நிகழ்கிறது. மேலும், அடுத்த 10 நாடுகளைவிட அதிக உலகளாவிய உற்பத்தியை இந்த நாடு மட்டுமே உற்பத்தி செய்கிறது.
இருப்பினும், உலகளாவிய பொருளாதாரம் பிளவு மற்றும் எழுச்சி காரணமாக, சீனாவிற்கு வெளிமுனையம் மூலம் உற்பத்தி செய்யும் அணுகுமுறை (outsourcing manufacturing) மாறி வருகிறது. கணக்கெடுப்பின்படி, உலகமயமாக்கல் காலத்தில் பரவலாகிவிட்ட இந்த நடைமுறை இப்போது மீட்டமைக்கப்பட உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் நிலை
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் உள்நாட்டுப் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (REAL GDP) : நடப்பு நிதியாண்டில் (FY25) பொருளாதாரத்தின் தேவையைப் (demand) பொறுத்து பொருளாதார நடவடிக்கைகளை வரைபடமாக்கும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் (FY26), இது 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று கணக்கெடுப்பு எதிர்பார்க்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் பங்கு, அதாவது இந்தியர்கள் தனித்தனியாக செலவிடும் பணம் (நுகர்வோர் தேவை), நிதியாண்டு 24ஆம் ஆண்டில் 60.3%-லிருந்து நிதியாண்டு 25ஆம் ஆண்டில் 61.8% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டு 2003-க்குப் பிறகு இந்தப் பங்கு மிக உயர்ந்தது என்று கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
மொத்த மதிப்பு கூட்டல் (GVA) : மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) மூலம் அளவிடப்படும் விநியோகமானது, இந்தியாவின் வளர்ச்சி பத்தாண்டுகால சராசரிக்கு அருகில் உள்ளது. மொத்தமொத்த மதிப்பு கூட்டல் (GVA), FY25-ன் முதல் காலாண்டில் அதன் தொற்றுநோய்க்கு முந்தைய போக்கைவிட அதிகமாக உள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, இது இப்போது அமைந்துள்ள போக்கைவிட அதிகமாக உள்ளது.
பணவீக்கம் (INFLATION) : "முக்கிய பணவீக்கம்", (Headline inflation) குறைந்து வருவதால், முக்கிய பணவீக்கம் மிதமானதாக இருப்பதாக தலைமைப் பொருளாதார ஆலோசர் (CEA) தெரிவித்துள்ளார். முக்கிய பணவீக்கம் என்பது உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வைக் குறிக்கிறது.
இருப்பினும், FY24ஆம் ஆண்டில் 7.5%ஆக இருந்த உணவுப் பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 8.4% ஆக அதிகரித்துள்ளது. விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் வானிலை நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணிகளால் இந்த அதிகரிப்பு உந்தப்பட்டது.
கூடுதல் பொருளாதார ஆலோசகரான ஆண்டனி சிரியாக் வெள்ளிக்கிழமை தலைமைப் பொருளாதார ஆலோசரின் (CEA) செய்தியாளர் கூட்டத்தில் பேசியதாவது, உணவுப் பணவீக்கம் 8%-ல் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற 4-5 பொருட்களை நாம் விலக்கினால், பணவீக்க விகிதம் 4% என்ற இலக்கை நெருங்குகிறது என்று அவர் வாதிட்டார்.
வேலைவாய்ப்பு : "சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர் சந்தை வளர்ச்சியானது தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது" என்று ஆய்வு கூறுகிறது. இது 2023-24 ஆண்டு கால தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) அறிக்கையை மேற்கோள் காட்டுகிறது. இது வேலையின்மை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் (worker-to-population ratio (WPR)) போன்ற அனைத்து முக்கிய வேலைவாய்ப்பு தொடர்பான அளவீடுகளும் மேம்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
ஆய்வின் பரிந்துரைகள்
தலைமைப் பொருளாதார ஆலோசரின் (CEA) பல பரிந்துரைகளில், பொருளாதார வளர்ச்சியை விலக்கிவிடக்கூடிய வகையில் இந்தியப் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் மிக முக்கியமானது.
நுகர்வோர் தேவையை அதிகரிக்க அரசாங்கத்திற்கு அவர் என்ன பரிந்துரை செய்துள்ளார் என்று கேட்டதற்கு, CEA கூறியதாவது, “இந்தப் பரிந்துரை மத்திய அரசுக்கு மட்டுமல்ல, நாட்டின் அனைத்து அரசாங்கங்களுக்கும் பொருந்தும். இது வேலைவாய்ப்பு, வருமான உருவாக்கம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான பரிந்துரை இதில் கவனம் செலுத்துகிறது. விதிமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலமும், சிறு வணிகங்களைப் பாதிக்கும் முக்கிய விதிகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், அவர்களின் வணிகச் செலவைக் குறைக்கிறோம். இது அவர்கள் அதிக மக்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. மேலும் இது, வருமான வளர்ச்சி மற்றும் அதிக நுகர்வுக்கு வழிவகுக்கிறது."
வணிக சீர்திருத்த செயல் திட்டம் (Business Reform Action Plan (BRAP)), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) உருவாக்கப்பட்டது. வணிக சீர்திருத்தங்களுக்கும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பு இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இது, ஆர்வமுள்ள மற்றும் வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு வணிகங்களை ஆதரிக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்துதல் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது.
ஆய்வு மனநிலையில் மாற்றம்
தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார மீட்சி குறித்து இந்த ஆய்வு நம்பிக்கையுடன் உள்ளது. இருப்பினும், இது சில கவலைகளையும் எழுப்புகிறது. "வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்குத் தேவையான அளவு மற்றும் தரத்தில் முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்வதில் இந்தியா வரம்புகளை எதிர்கொள்கிறது" என்று ஆய்வின் முன்னுரை கூறுகிறது.
அரசாங்கங்கள் "வழியிலிருந்து விலகுவதன்" (getting out of the way) மூலம் உதவ முடியும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) பரிந்துரைக்கிறார். இது வணிகங்கள் தங்கள் முக்கிய இலக்குகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும். இது புதுமைகளை வளர்க்கவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும், முடியும். தற்போதைய அணுகுமுறையைத் தொடர்வது பொருளாதார தேக்கநிலை (economic stagnation) அல்லது மெதுவான வளர்ச்சிக்கு (slow growth) வழிவகுக்கும் என்று CEA எச்சரிக்கிறது.
இதன் பொருள் 2023-ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) வெளிப்படுத்திய நம்பிக்கையுடன் வேறுபடுகின்றன. அதாவது இந்த ஆய்வில், அவர் குறிப்பிடுவதாவது, "2014-2022 என்பது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் ஆகும். பொருளாதாரம் பல கட்டமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு உட்பட்டது. இந்த சீர்திருத்தங்கள் அதன் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தின. இந்த நிலைமை 1998-2002 காலகட்டத்தைப் போன்றது. அந்த நேரத்தில், மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், பொருளாதாரத்தில் ஏற்பட்ட தற்காலிக அதிர்ச்சிகள் காரணமாக வளர்ச்சிக்கான வருமானத்தில் பின்தங்கியது. இந்த அதிர்ச்சிகள் குறைந்தவுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் 2003 முதல் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கத் தொடங்கின."
தற்போதைய காலகட்டத்தில், வலுவான நடுத்தர கால வளர்ச்சி (medium-term growth) காரணிகள் நமக்கு சாதகமானதையும், நம்பிக்கையையும் தருகின்றன. தொற்றுநோயின் உலகளாவிய பாதிப்புகளால் 2022-ம் ஆண்டில் பொருட்களின் விலை அதிகரிப்பும் குறைந்தவுடன், இந்தியப் பொருளாதாரம் வரும் காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சியைக் காண நல்ல நிலையில் உள்ளது.