தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் என்னென்ன விஷயங்களை பரிசீலிக்கும்? -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 2023-ஆம் ஆண்டு முதல்,  தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, ​​கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், இது போன்ற தாமதங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தன. மற்ற அனைத்து வழக்குகளுக்கும் தமிழ்நாடு வழக்கு ஒரு முன்மாதிரியாக (precedent)  அமையும்.


சட்டப்பேரவைச் செயல்பாட்டில் ஆளுநரின் அதிகார வரம்பு குறித்த கேள்விகளை எழுப்பி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்தது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நீண்டகால தாமதம் "நாட்டின் ஜனநாயக அமைப்பை தோல்வியடைய செய்யும்" (system of democracy will fail in this country) சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.


மாநில மசோதாக்களை அங்கீகரிப்பதில் ஆளுநரின் பங்கை வரையறுக்கும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின் மீது இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது. ஆளுநர் மசோதாவை அங்கீகரிக்க வேண்டும் (assents to the Bill),  நிராகரிக்க வேண்டும் அல்லது மறுஆய்வுக்காக  குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் மசோதாவைப் பெற்ற பிறகு இந்த முடிவு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்றும்  அரசியலமைப்பின் 200-வது பிரிவு கூறுகிறது.


சட்டமியற்றுவதில் ஆளுநரின் பங்கு


அரசியலமைப்புச் சட்டம் ஆளுநரின் பதவியை அரசியல் சார்பற்றதாகக் கருதுகிறது. பல ஆண்டுகளாக, ஆளுநரின் அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக, ஆளுநர் மாநில அமைச்சரவை குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, ஆளுநர் பிரிவு 356-ன் கீழ்  குடியரசுத்தலைவர் ஆட்சியை (President’s rule) பரிந்துரைக்கலாம் மற்றும் பிரிவு 200-ன் கீழ் மசோதாக்களை அங்கீகரிப்பது குறித்து முடிவு செய்யலாம்.


மாநில சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அது ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது. பிரிவு 200 ஆளுநருக்கு மூன்று விருப்பங்களை வழங்குகிறது:


மசோதாவை அங்கீகரித்து, அதை ஒரு மாநில சட்டமாக மாற்றுவது.


மசோதாவை நிராகரித்து, மறுபரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கு  மீண்டும் அனுப்பலாம்.


மசோதாவை  குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம்.


ஆளுநர் ஒரு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பினால், மாநில சட்டமன்றம் அதை மாற்றலாம் அல்லது மாற்றங்கள் இல்லாமல் மீண்டும் (shall not withhold assent therefrom) நிறைவேற்றலாம். மசோதா மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ​​அவர் "அதற்கான ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்த கூடாது", ஆளுநர் மசோதாவை அங்கீகரிக்க வேண்டும். இருப்பினும், ஆளுநர் மசோதா உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாகக் கருதினால் (derogate from the powers of the High Court) அவர் அதை அங்கீகரிக்க முடியாது. இது போன்ற சூழல்களில், அந்த மசோதா இறுதி முடிவுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும்.

தமிழ்நாடு சர்ச்சை


2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைப்பது மற்றும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்வது குறித்து பலமுறை கவலைகளை எழுப்பி வருகிறது. ஜனவரி 2023 முதல் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பல மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்ட காரணத்தினால் நவம்பர் 2023-ல், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 


நவம்பர் 6, 2023 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர்கள் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிட முடியாது" என்று கூறியது. மேலும், "கட்சிகள் ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன் ஆளுநர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நிலுவையில் உள்ள மசோதாக்களை  தமிழ்நாடு சட்டசபை மீண்டும் நிறைவேற்றியது. இருப்பினும், ஆளுநர் இந்த மசோதாக்களில் இரண்டை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார். மீதமுள்ள மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்கவில்லை.


உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும் பிரச்சினைகள்


நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் சில சிக்கல்கள்:


மாநில சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பிறகு, ஆளுநர் இரண்டாவது முறை மசோதாவை அங்கீகரிக்க மறுத்தால், குறிப்பாக மசோதா முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளுநர் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை என்றால் இது முக்கியமானது.


எந்தவொரு மசோதாவையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது இந்த அதிகாரம் குறிப்பிட்ட வகை மசோதாக்களுக்கு மட்டுமே உள்ளதா என்பது 


ஒரு மசோதாவை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ஆளுநரின் முடிவைப் பாதிக்கும் காரணிகள்.


ஆளுநர் காலவரையின்றி ஒப்புதல் அளிக்கும்போது - பாக்கெட் மறுப்பு அதிகாரம் (pocket veto)  என்ற கருத்தை ஆராய்தல் மற்றும் அதற்கு இந்தியாவில் ஏதேனும் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை உள்ளதா என்பதை ஆய்வு செய்தல்.


சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க ஒரு காலக்கெடு இருந்தால்.


ஒப்புதலுக்கான காலக்கெடு  குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து


ஆளுநர் ஒரு மசோதாவை "முடிந்தவரை விரைவில்" (as soon as possible) முடிவு செய்ய வேண்டும் என்று சட்டப்பிரிவு 200 கூறுகிறது. இருப்பினும், அது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கடந்த கால வழக்குகளில் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்துள்ளது. ஆனால், ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.


2016-ஆம் ஆண்டு நபம் ரெபியா மற்றும் பமாங் பெலிக்ஸ் VS துணை சபாநாயகர் வழக்கில், இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி மதன் லோகூர் ஒரு தனி கருத்தை தெரிவித்தார். ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதலை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் ஆளுநர் மசோதாவை ஒரு செய்தியுடன் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் இருக்கலாம் என்று அவர் கூறினார்.


நவம்பர் 2023-ல், பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அரசாங்கம் குற்றம் சாட்டியது. பிரிவு 200-ல் உள்ள "முடிந்தவரை விரைவில்" (as soon as possible) என்ற  சொல், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு மசோதாவை காலவரையின்றி தாமதப்படுத்த முடியாது என்பதைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.




Original article:

Share: