கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தெளிவான திட்டம் இந்தியாவிடம் இல்லை. இதனால் அது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது கடினமாகிறது.
இந்தியாவில், 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில் கல்வியை மேம்படுத்த பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) பள்ளிகளில் அதிகமான குழந்தைகள் சேர்வதாகவும், உட்கட்டமைப்பு மேம்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியது. இருப்பினும், கற்றல் நிலைகள் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தன. அதே நேரத்தில், கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தன. கல்வியில் டிஜிட்டல் தீர்வுகளுக்கு பல நம்பிக்கைகள் இருந்தன. ஆனால், கிராமப்புற இந்தியாவில் உண்மையான மாற்றம் COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகுதான் வந்தது. ASER தரவு இந்த டிஜிட்டல் மாற்றத்தை தெளிவாகக் சுட்டிக்காட்டுகிறது.
திறன்பேசி (Smartphone) பயன்பாடும் கிராமப்புற வீடுகளும்
2018ஆம் ஆண்டில், கிராமப்புற வீடுகளில் 90% பேர் சாதாரண அலைபேசிகளை (mobile phones) வைத்திருந்தனர். மேலும், 36% பேர் திறன்பேசிகளைக் கொண்டிருந்தனர். 2022-ஆம் ஆண்டில், திறன்பேசி வைத்திருப்பவர்கள் 74% அதிகரித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின்படி இந்த எண்ணிக்கை இப்போது 84% எட்டியுள்ளது. வீட்டில் திறன்பேசிகளை வைத்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளது. மேலும், திறன்பேசி வைத்திருக்கும் 14 முதல் 16 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 19%-லிருந்து 31% ஆக அதிகரித்துள்ளது.
வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) தரவு, சிறு குழந்தைகளின் தாய்மார்களுக்கு சொந்தமாக தொலைபேசிகள் உள்ளதா என்பதை தெளிவாகக் காட்டவில்லை. எத்தனை தாய்மார்கள் தனிப்பட்ட முறையில் திறன்பேசி வைத்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
கல்வி கற்பதற்கு திறன்பேசி வைத்திருப்பது முக்கியம். இது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
முக்கியமாக, தொற்றுநோய் காலத்தில், பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக உரைகள், பணித்தாள்கள் மற்றும் காணொளிகளைப் பகிர திறன்பேசிகள் பயன்படுத்தப்பட்டன. மெய்நிகர் பயிற்சி அமர்வுகளும் (virtual training sessions) பொதுவானதாகிவிட்டன. தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தாங்கள் கற்றுக்கொண்ட டிஜிட்டல் திறன்களைத் தொடர்ந்து பயன்படுத்தினர். இருப்பினும், சில டிஜிட்டல் நடைமுறைகளின் முக்கியத்துவம் குறைந்தது. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence (AI)) மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது.
டிஜிட்டல் புரட்சி, திறந்தவெளி மற்றும் தொடர் கல்வி மூலம் பின்தங்கியவர்களுக்கு உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கல்விக்கான தேவை அதிகமாக உள்ளது. அதை மேம்படுத்த பல வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது பள்ளி மாணவர்களின் தாய்மார்களில் 40%-க்கும் மேற்பட்டோர் பள்ளிப்படிப்பை குறைவாகவோ அல்லது தேவையான பள்ளிப்படிப்பை பெறவில்லை. சிலர் சிறுவயது முதல் பள்ளிக்குச் சென்றதில்லை, வெகு சிலர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். தாய்மார்களுக்கு கல்வி கற்பிப்பதில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும். இது அவர்களின் குழந்தைகளின் கற்றலை ஆதரிக்கவும், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும் உதவும்.
கடந்த 30 ஆண்டுகளில், கணினிகள், இணையம் மற்றும் அலைபேசிகள் உலகை மாற்றுவதை நாம் பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து நாம் இப்போது, செயற்கை நுண்ணறிவு காலத்தில் நுழைகிறோம். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் கல்வியை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையைத் தருகிறது. கற்றலை மேம்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால், தொழில்நுட்பம் மலிவு விலையில் கிடைக்கும் நேரத்தில், சலுகை பெற்றவர்களுக்கு ஒரு புதிய மற்றும் மேம்பட்ட பதிப்பு தோன்றும். தொழில்நுட்பம் வாக்குறுதியளித்தபடி கல்வியில் பின்தங்கியவர்களுக்கு இன்னும் உதவவில்லை. ஒரு பெரிய பிரச்சனை சாதனங்களின் பற்றாக்குறையாகும். பல மாணவர்களிடம் கணினிகள் அல்லது தேவையான திறன்பேசிகள் இல்லாததால் அவர்கள் கல்வி கற்பது கடினமாகிறது.
இருப்பினும், 2024-ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை தரவுகளின்படி, எதிர்காலத்தில் தனிப்பட்ட திறன்பேசிகள் இல்லாதது குறைவான பிரச்சனையாக இருக்கும். பெரும்பாலான கிராமப்புற வீடுகள் ஏற்கனவே திறன்பேசி வைத்திருக்கின்றன. வரும் ஆண்டுகளில், பல குடும்பங்கள் இரண்டாவது அலைபேசி வாங்குவதை எளிதாகக் காணலாம். கற்றலுக்கு திறன்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது.
எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், சாதனங்கள் எளிதில் கிடைக்கிறது. இதற்கு, மொழி ஒரு பெரிய தடையாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. மக்கள் இப்போது தங்கள் உள்ளூர் மொழிகளில் எழுதவோ பேசவோ முடியும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதும் தற்போது எளிதான செயல்முறையாகும். அனைத்து கற்றல் கருவிகளும் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் எங்கு கண்டுபிடிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் கற்பனை செய்து பாருங்கள், ஒரு கிராமத்தில் ஓர் இடத்தில் - பள்ளி என்று வைத்துக் கொள்வோம் - ஒரு அறிவார்ந்த சாதனம் என்ன, எங்கே, எப்படி என்பது பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடியதாக இருந்தால்?
அனைவருக்கும் பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், பல குழந்தைகளின் பள்ளி வருகை இன்னும் பிரச்சனையாகவே உள்ளது. ஒரு கிராமத்தில் அல்லது சமூகத்தில், குழந்தைகள் கல்விக்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். சிலர் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மற்றவர்கள் தனியார் வகுப்புகளை எடுக்கிறார்கள். சிலர் பள்ளிக்குச் செல்வதில்லை. இது கிராமம் மற்றும் சமூக மட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, பள்ளிகளில் கற்றல் தரம் பாதிக்கப்படுகிறது.
தொற்றுநோய் காலத்தில், மகாராஷ்டிராவில் உள்ள பல கிராமங்கள் கற்றல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஒரு வசதியான இடத்தைப் (vantage point) பயன்படுத்தின. கிராமங்களில் கல்வியை மேம்படுத்த இந்த முறையைப் பயன்படுத்தலாம். சரியான பாடத்திட்டம் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை குழு கற்றலை ஒழுங்கமைக்க உதவும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி புதிய பள்ளிகளை அமைக்கலாம். ஆனால் முதலில், அதிக மாணவர்கள் சேராமல் போகலாம்.
கடந்த 5,000 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாகரிகமும் அதன் சொந்த பள்ளிக்கல்வி முறையை உருவாக்கியுள்ளது. ஒரு அமைப்பிலிருந்து வரும் ஆசிரியர்களும் கற்பித்தல் முறைகளும் எப்போதும் மற்றொரு நாட்டில் வேலை செய்யவில்லை. ஒரு நாட்டிலிருந்து வரும் பாடத்திட்டங்கள் எப்போதும் மற்றொரு நாட்டிற்கு ஏற்றதாக இல்லை. நாகரிகங்கள் காலம், தூரம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தால் பிரிக்கப்பட்டதால் இது நடந்தது. பின்னர், பேரரசு மற்றும் காலனித்துவ காலங்கள் வெவ்வேறு நாகரிகங்களை இணைக்கத் தொடங்கின. இன்று, நாடுகளுக்கு எல்லைகள் இருந்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அவற்றை ஒன்றிணைக்கின்றன. அவற்றை ஒன்றிணைப்பதில் கல்வியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதனால் பெறப்படும் பலனும் ஒரு முக்கிய காரணியாகும். பெரும்பாலான புதிய தொழில்நுட்பங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான சந்தைத் தேவைப்படுகிறது. பொது பயன்பாட்டிற்காக கொடையாளர்களால் நிதியளிக்கப்படும் தொழில்நுட்பங்களைத் தவிர, ஒரு தொழில்நுட்பம் லாபம் ஈட்ட முடியாவிட்டால் அது பயன்படுத்தப்படுவதில்லை.
வன்பொருள் மற்றும் சாதனங்கள் குறைவான விலையில் கிடைக்க தொடங்கிவிட்டன. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளால், மேம்பட்ட மற்றும் சக்திவாய்ந்த வன்பொருளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கல்வியில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதுமைகளை உலகளவில் மாற்றுவதற்கு சமுதாயநல முதலீடுகள் (philanthropic investments) போதுமானதாக இருக்குமா? ஒரு நாடாக, தொழில்நுட்பத்தின் வாக்குறுதியை மிகவும் தேவைப்படுபவர்களின் நலனுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு வரைபடத்தை இந்தியா உருவாக்க வேண்டும்.
மாதவ் சவான் பிரதம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்