வளர்ந்த இந்தியா (Viksit Bharat) இலக்கிற்குத் தேவையான வேலைவாய்ப்புகள் -சௌபாக்யா ரைசாடா

 நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்கள் காலநிலை மீள்தன்மைத் திறன் (climate-resilient), செயற்கை நுண்ணறிவு மீள்தன்மை திறன் (AI-resilient) மற்றும் ஆர்வத்தை மையமாகக் கொண்ட வேலைகளை உருவாக்க வேண்டும்.


ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை (Budget) தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவுக்குத் தேவையான மூன்று முக்கிய வகையான வேலைகளைப் பற்றி விவாதிக்க இதுவே சரியான நேரமாகும். நகரங்களில் தனியார் செலவினங்களை அதிகரிப்பதைத் தவிர, நீண்டகால வேலைகளை உருவாக்குவதிலும், நாடு முழுவதும் ஊதியத்தை அதிகரிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


2024ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில்  பிரதமரின் ஐந்து திட்ட முயற்சியின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (Employment Linked Incentives (ELI)) அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஐந்து ஆண்டுகளில் ₹2 லட்சம் கோடி நிதியுதவியுடன் நான்கு கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமரின் பயிற்சித் திட்டம் 2024ஆம் ஆண்டு அதிகமாக பேசப்பட்டது.  1.27 லட்சம் பதவிகளுக்கு 6.21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மற்ற நான்கு திட்டங்களுக்கு, ELI குறித்த வரைவு அமைச்சரவைக் குறிப்பு மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)), தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) இடையேயான சந்திப்புகளைத் தவிர, மற்ற நான்கு திட்டங்களின் முடிவுகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், வளர்ந்த இந்தியாவை உருவாக்க விரும்பும் நாம் வேலைவாய்ப்பு குறித்து அதிக  ஆலோசனைகளை நடத்த  வேண்டும்.




காலநிலை மாற்றத்தின் தாக்கம் (Impact of climate change) 


முதலாவதாக, காலநிலை-மீள்தன்மை:  2019ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் இருந்தது. 2021-ல், காலநிலை தொடர்பான பிரச்சினைகளால் இந்தியா $159 பில்லியன் வருமானத்தை இழந்தது. ரிசர்வ் வங்கி 2030-ஆம் ஆண்டில், தகவமைப்பு  செலவுகள் (adaptation costs) $1 டிரில்லியனை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றம் விவசாயம், தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதிக்கிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க, கிராமப்புற மற்றும் நகர்ப்புற தகவமைப்பை மேம்படுத்தவும் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைக்கவும் (rejuvenation) இந்தியாவிற்கு அதிக நிதி தேவைப்படுகிறது.


2070ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை அடைய, அரசாங்கம் காலநிலையை மீள்தன்மை திறன் வேலைகளை உருவாக்க வேண்டும். இந்த வேலைகள் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) பரிந்துரைத்தபடி அதிகபட்ச நன்மைகளை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். 6,00,000 கிராமங்களில் மூன்று முதல் நான்கு அரசு மானிய விலையில் மின்-ரிக்‌ஷாக்களை வழங்குவது ஒரு யோசனையாகும். இது சுமார் 2 மில்லியன் வேலைகளை உருவாக்கலாம். குறிப்பாக, இது பெண் ஓட்டுநர்களுக்கு, கடைசி மைல் இயக்கத்தை மேம்படுத்தலாம் அல்லது சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆலைகளில் (compressed biogas plants)  தனியார் முதலீட்டை ஊக்குவிக்க புதிய வழிகள் இருக்கலாம். இதுவரை அமைக்கப்பட்டுள்ள 82 ஆலைகளுக்கும் 2018-ல் நிர்ணயிக்கப்பட்ட 2023-2024 நிதியாண்டிற்கான 5,000 ஆலைகள் என்ற இலக்குக்கும் இடையிலான இடைவெளியை இது குறைக்க உதவும். மற்றொரு அணுகுமுறை, 500GW புதைபடிவமற்ற ஆற்றல் திறன் இலக்கை அடைவதை விரைவுபடுத்தி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்க முடியும். பரவலாக்கப்பட்ட மற்றும் கூரை சூரிய சக்திக்கு அதிக ஆதரவு தேவைப்படும். இதற்கு 7 மடங்கு அதிக உழைப்பு தேவைப்படும் என்று எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் குழு (Council on Energy, Environment and Water (CEEW)) தெரிவித்துள்ளது.



செயற்கை நுண்ணறிவு மீள்தன்மை திறன் (AI-resilient) குறித்து


இரண்டாவதாக, செயற்கை நுண்ணறிவு (AI) - மீள்தன்மை. ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் (generative artificial intelligence) வளர்ச்சியுடன், ஏராளமான வேலைகள் இப்போது 50%-க்கும் மேற்பட்ட ஆட்டோமேஷன் திறனைக் கொண்டுள்ளன. மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் கருத்துப் படி, இந்தியாவில் 50% எந்திரமயமாக்கல் ஏற்பு (automation adoption) அடுத்த 10 ஆண்டுகளில் நிகழக்கூடும் என்பதைக் கணித்துள்ளது. பொருளாதார ஆய்வு 2021, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகள் ஏற்றுமதியில் 70%-க்கும் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தொழில்கள் மில்லியன் கணக்கான திறமை ஏற்றுமதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் அவற்றின் வேலை வளர்ச்சி குறைவாக இருக்கலாம். ஏனெனில், மூலதனத்தை ஒப்பிடும்போது உழைப்பு மிகவும் விலை அதிகமாகி வருகிறது. metaGPT மென்பொருள் நிறுவனங்களை உருவகப்படுத்துதல், கூகிளின் குறியீட்டில் 25% எழுதுதல், இந்தியாவில் கூட chatbot-கள் காரணமாக பணிநீக்கங்கள் தொடங்கப்பட்டதன் மூலம், புதிய வேலைகள் உடல் ஈடுபாடு  மற்றும் மனித படைப்பாற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதைத்தான் எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு மீள்தன்மை என்று அழைக்கிறார். மாநிலங்கள் முழுவதும் மில்லியன் கணக்கான சுகாதார நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிரப்ப கல்வி மற்றும் சுகாதார வரவு செலவு அறிக்கைகளை அதிகரித்தல். உள்ளூர் தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களின் அறிவை உலகளாவிய மற்றும் நகர்ப்புற சந்தைகளுடன் இணைக்க உதவும் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி ஒதுக்குதல் போன்ற வடிவங்களை எடுக்கலாம்.


இலட்சியத்தை மையமாகக் கொண்ட பணிகளை மேற்கொள்ளுதல்


லட்சியத்தை மையமாகக் கொண்ட பணிகளை மேற்கொள்ளுதல்: தொடக்கநிலை கலாச்சாரத்தில் ஆர்வம் அதிகரித்து வந்த போதிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. இது மோசமான அடிப்படைக் கல்வி (ஆங்கிலம் உட்பட) மற்றும் வளம் இல்லாத  சூழல்களில் வளர்வதால் ஏற்படுகிறது. இது நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற அரசு வேலைகள் மற்றும் பயிற்சி ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்க வழிவகுக்கும். அவர்களின் சமூக-பொருளாதார பின்னணி, டிஜிட்டல் மீடியா மற்றும் சமாஜ், சர்கார் மற்றும் பஜார் ஆகியவற்றின் தொடர்புகளால் அவர்களின் தேவைகள் வடிவமைக்கப்படுவதால், பண்ணை அல்லாத வேலைகளின்மெதுவான வளர்ச்சி, இந்த மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக பண்ணைக்கு வெளியே வேலைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.


70,000 ஒருங்கிணைந்த தொகுப்பு வீடுகளை உருவாக்குதல், 95%-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு இடைவெளியை நிரப்புதல், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற விரைவான உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வடிவத்தை எடுக்கலாம் அல்லது அதிக இறக்குமதி/ஏற்றுமதி-பங்கு பொருட்களுக்கான உற்பத்தித்திறன் மற்றும் மதிப்பு கூட்டலை அதிகரித்தல் மற்றும் வேளாண் உள்ளீடுகளின் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கலாம். தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் கிராமப்புறங்களை மறுபெயரிடுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது பண்ணைக்கு வெளியே உள்ள வேலைகளை இந்திய இளைஞர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும். தேசிய சமையல் எண்ணெய்கள் - எண்ணெய் வித்துக்கள் திட்டத்தை விரைவுபடுத்துவதே ஒரு தெளிவான தீர்வாகும். சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற பூர்வீக எண்ணெய் வித்துக்களை பதப்படுத்துவதன் மூலம் இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதியை 57% சார்ந்திருப்பதை குறைக்கும். இவை சமையல் எண்ணெய் இறக்குமதியில் 40% மேல் பங்களிக்கின்றன. இது பிரபலமடைந்து வரும் குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களின் விற்பனையையும் அதிகரிக்கும். தனியார்-பொது கூட்டாண்மை மற்றும் முதலீடுகள் மூலம் பெரிய அளவிலான வணிகங்களை உருவாக்குவது, தேர்வு கசிவுகள் மற்றும் குறைந்த ஆட்சேர்ப்பு காலியிடங்கள் ஆகியவற்றால் இளைஞர்களின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.


வரி நிவாரணம் நகர்ப்புற நுகர்வோர் தேவையை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும். இருப்பினும், வளர்ந்து வரும் வீட்டுக் கடன் மற்றும் குறைந்த தனியார் முதலீட்டு போக்குகள் போன்ற சிக்கல்கள் உள்ளன. நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு மத்திய அரசு வலுவான அர்ப்பணிப்பைக் காட்ட முடியும். இந்த சீர்திருத்தங்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கம், செயற்கை நுண்ணறிவு மீள்தன்மை திறன் மற்றும் இலட்சியத்தை மையமாகக் கொண்ட பணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். வளர்ந்த இந்தியா  என்ற பகிரப்பட்ட இலக்கை நோக்கி நாம் நகரும்போது நமக்கு பல வாய்ப்புகள்  உருவாகியுள்ளன.


சௌபாக்யா ரைசாடா டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு தன்னிச்சை கொள்கை ஆராய்ச்சியாளர் ஆவார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளாவட்னிக் அரசாங்கப் பள்ளியில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.




Original article:

Share: