தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் கருத்துத் தடை : பிரிவு 79-ஐ அரசாங்கம் பயன்படுத்துவதை X வலைத்தளம் ஏன் முறையீடு செய்துள்ளது?. -அஜோய் சின்ஹா ​​கர்புரம், அர்னவ் சந்திரசேகர்

 உள்ளடக்க மதிப்பீட்டிற்காக வடிவமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் இந்த விதியைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது.


எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான X வலைத்தளம் (முன்னர் ட்விட்டர்), தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act) பிரிவு 79(3)(b) ஐ அரசாங்கம் பயன்படுத்துவதை சவால் செய்துள்ளது. இந்தப் பிரிவு சமூக ஊடகங்களிலிருந்து உள்ளடக்கத்தை குறைப்பதற்கும் அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.


உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-ல் உள்ள பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் விதியை தவறாகப் பயன்படுத்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது.


ஷ்ரேயா சிங்கால் & பிரிவு 69A


ஷ்ரேயா சிங்கால் vs இந்திய ஒன்றியம் 2015 (Shreya Singhal vs Union of India)  வழக்கில், உச்ச நீதிமன்றம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 66A-ஐ ரத்து செய்தது. இந்தப் பிரிவு "எரிச்சல் அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக" (for the purpose of causing annoyance or inconvenience) தவறான தகவல்களை அனுப்புவதை குற்றமாக்கியது. இதற்கு, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன் மற்றும் ஜே. செலமேஸ்வர் ஆகியோர் இந்த விதி "அரசியலமைப்புக்கு முரணானது" (unconstitutionally vague) என்று தீர்ப்பளித்தனர். இது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு பரந்த, கட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கியது.


இந்த முடிவிற்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A இந்த பிரச்சினையில் முக்கிய சட்டமாக மாறியது. இந்தப் பிரிவு "எந்தவொரு கணினி வளத்திலும் உருவாக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட அல்லது தலைமை செய்யப்பட்ட எந்தவொரு தகவலையும்" தடுக்க ஒன்றியத்தை அனுமதிக்கிறது. இருப்பினும், பிரிவு 66A-ஐப் போல் அல்லாமல், இது ஷ்ரேயா சிங்கலில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல், தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்புகளை உள்ளடக்கியது.


பிரிவு 69A-ன் கீழ் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கு, இந்த விதி "அவசியம்" என்று ஒன்றிய அரசு முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், இது அரசியலமைப்பின் பிரிவு 19(2) இன் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, இது பேச்சு சுதந்திரத்திற்கு நியாயமான வரம்புகளை அனுமதிக்கிறது. இந்த வரம்புகள் இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, பிற நாடுகளுடனான உறவுகள், பொது ஒழுங்கு, கண்ணியம், ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் தொடர்பான வழக்குகளுக்குப் பொருந்தும்.


மக்கள் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்குத் தொடரும் வகையில், தடை உத்தரவில் அரசாங்கம் அதன் காரணங்களை குறிப்பிட வேண்டும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 இன் அரசாங்கத்தின் பயன்பாடு


ஷ்ரேயா சிங்கால்  வழக்கில், ஐடி சட்டத்தின் பிரிவு 79 எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் விளக்கியது. இந்தப் பிரிவு, பயனர்கள் இடுகையிடும் (post)  உள்ளடக்கத்திற்கு (X போன்ற) ஆன்லைன் தளங்கள் பொறுப்பேற்காமல் பாதுகாக்கிறது. இது ஒரு "பாதுகாப்பான இடம்"  போன்று செயல்படுகிறது, அதாவது பயனர்கள் பகிரும் விஷயங்களுக்கு தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்காது.


இருப்பினும், பிரிவு 79(3)(b) சட்டவிரோத தகவல்களை அகற்றவில்லை என்றால் இடைத்தரகர் பொறுப்பேற்கப்படலாம் என்று கூறுகிறது. இது உண்மையான தகவலைப் பெற்ற பிறகு அல்லது பொருத்தமான அரசாங்கம் அல்லது அதன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு உடனடியாக செய்யப்பட வேண்டும்.


உச்ச நீதிமன்றம் இந்த விதிக்கான வரம்பைக் குறைத்தது. அதாவது, பிரிவு 79(3)(b) நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அல்லது அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. இந்த அறிவிப்பில் பதிவு உள்ளடக்கமானது பிரிவு 19(2) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் கீழ் வரும் என்று குறிப்பிட வேண்டும்.


இருப்பினும், அக்டோபர் 2023-ஆம் ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)), மாநில அரசுகள் மற்றும் காவல்துறைக்கு ஒரு உத்தரவை அனுப்பியது. பிரிவு 79(3)(b) இன் கீழ் தகவல் தடுப்பு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று அது கூறியது. ஒரு வருடம் கழித்து, அக்டோபர் 2024-ம் ஆண்டில், MeitY “Sahyog” என்ற போர்ட்டலைத் தொடங்கியது. இந்த தளம் குறிப்பிடப்பட்ட அதிகாரிகளுக்குத் தடுப்பு உத்தரவுகளை வெளியிடவும் பதிவேற்றவும் அனுமதித்தது.


X வலைத்தளத்தின் முறையீடு என்ன சொல்கிறது?


கர்நாடக உயர் நீதிமன்றத்தில் X வலைத்தளம்  தொடர்ந்த வழக்கு, MeitY உத்தரவுகள் பிரிவு 69A-வில் உள்ள விதிகளைப் புறக்கணிக்கின்றன என்று கூறுகிறது. இந்த மனு, ஷ்ரேயா சிங்கால் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிடுகிறது. மேலும், பிரிவு 69A-வின் செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலமோ அல்லது நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ மட்டுமே உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய முடியும் என்று கூறுகிறது.


பிரிவு 79 மூன்றாம் தரப்பு இடுகையிடும் (post) உள்ளடக்கத்திற்கு இடைத்தரகர்கள் பொறுப்பேற்கப்படுவதிலிருந்து மட்டுமே பாதுகாக்கிறது என்றும் X நிறுவனம் வாதிடுகிறது. பிரிவு 79 இயற்றப்பட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகும், தற்போதைய பதிப்பு நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசாங்கம் பிரிவு 79 ஐ தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


எந்தவொரு கடுமையான நடவடிக்கையிலிருந்தும் தற்காலிக பாதுகாப்பு கோரி, மார்ச் 17 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் X நிறுவனம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இருப்பினும், நீதிபதி எம். நாகபிரசன்னா இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, மனுதாரர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் திரும்பி அனுகலாம் என்று நீதிமன்றம் கூறியது. பின்பு, வழக்கு மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


X நிறுவனத்தின் AI சாட்போட் Grok 3, இந்தி மொழிப் பயன்பாடு மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் பதில்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ள நேரத்தில், X நிறுவனத்தின் மனு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக Xநிறுவனத்திற்க்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றாலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றியம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.


பிரிவு 79 போன்ற "பாதுகாப்பான இடம்" (safe harbour) போன்ற  விதிகள் புதிய சிக்கலை Grok சர்ச்சையாக அறிமுகப்படுத்துகிறது. பொதுவாக, பயனர்கள் இடுகையிடும் இடுகைகளுக்கு (post) X நிறுவனம் போன்ற தளங்கள் பொறுப்பல்ல. இருப்பினும், Grok மூலம் வெளியிடப்படும் தகவல்களுக்கு X நிறுவனம்  பொறுப்பா என்பது தெளிவாகத் தெரியவில்லை. AI-உருவாக்கும் பதில்கள் "மூன்றாம் தரப்பினரின்" தகவலாகக் கருதப்படுகிறதா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க வேண்டும்.



Original article:

Share: