தற்போதைய செய்தி: 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் எரிசக்தி தேவை வேகமாக அதிகரித்து வருவதாக ஜிதேந்திர சிங் குறிப்பிடுகிறார். 2047-ஆம் ஆண்டுக்குள், மின்சாரத் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 70% மின்சாரம் இன்னும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்தே வருகிறது. இந்த முரண்பாடு இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும்போது பொருளாதாரத்தை விரைவாக எவ்வாறு வளர்ப்பது எனும் எரிசக்தி சவாலை எடுத்துக்காட்டுகிறது. நிலையான மற்றும் தன்னிறைவு பெற்ற எரிசக்தி எதிர்காலத்திற்கான இந்தியாவின் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அணுசக்தி மாறியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
• அணுசக்தி என்பது சக்திவாய்ந்த மின் உற்பத்தி வடிவங்களில் ஒன்றாகும். அங்கு சிறிய அளவிலான எரிபொருளால் மிகக் குறைந்த கார்பன் உமிழ்வுடன் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அணுசக்தியிலிருந்து 70%-க்கும் அதிகமான மின்சாரத்தைப் பெறும் பிரான்ஸ், இந்த தொழில்நுட்பம் குறைந்த கார்பன் எரிசக்தி உத்திக்கு எவ்வாறு முக்கியமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
• இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களை அதிகமாக நம்பியிருப்பது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கிறது மற்றும் உலகளாவிய விலை மாற்றங்களுக்கு ஆளாக்குகிறது. அதே நேரத்தில், சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, இந்தியா தனது கார்பன் தடயத்தைக் குறைப்பதாக உறுதியளித்துள்ளது.
• வானிலை சார்ந்திருக்கும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போல் இல்லாமல், அணுசக்தி எப்போதும் நம்பகமான மின்சாரத்தை வழங்குகிறது. நீர் மின்சாரம் பருவகால மாற்றங்களையும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டாலும், நிலக்கரி தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சவால்களை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், அணுசக்தி ஒரு நிலையான மாற்றீட்டை வழங்குகிறது.
• இந்தியாவின் அணுசக்தி உத்தி, ஹோமி பாபாவால் உருவாக்கப்பட்ட மூன்று கட்டத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் பெரிய தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தி முழுமையான எரிசக்தி தன்னிறைவை அடைவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 2070-ஆம் ஆண்டிற்க்குள் இந்தியா தனது நிகர-பூஜ்ஜிய இலக்கை அடையும் நோக்கில் இந்த இலக்கு இப்போது மிகவும் அவசரமானது.
• தற்போது, அணுசக்தி இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் பங்களிக்கிறது. இந்த எண்ணிக்கை 21 அணுஉலைகள் மொத்தம் 15,300 மெகாவாட் செயல்படுத்தும் பல்வேறு கட்டங்களில் கணிசமாக அதிகரிக்கும்.
• 2023-24ஆம் ஆண்டில், குஜராத்தின் காக்ராபரில் இந்தியா தனது முதல் 700 மெகாவாட் கொண்ட உள்நாட்டு முன்மாதிரி அழுத்த கன நீர் உலையை (Prototype Fast Breeder Reactor (PFBR)) வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இது சுயசார்புக்கான ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. நாடு அணு எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பத்திலும் முன்னேறியுள்ளது, முன்மாதிரி அழுத்த கன நீர் உலையை 2024-ல் முக்கியமான சாதனைகளை படைத்தது.
• சிறிய மட்டு உலை (Small Modular Reactors (SMRs)) மற்றும் பாரத் சிறிய உலை (Bharat Small Reactors (BSRs)) ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஒரு முக்கிய வளர்ச்சியாகும். சிறிய மட்டு உலை, ஆராய்ச்சிக்காக அரசாங்கம் ரூ.20,000 கோடியை ஒதுக்கியுள்ளது மற்றும் 2033ஆம் ஆண்டிற்குள் குறைந்தது ஐந்து செயல்பாட்டு சிறிய மட்டு உலைகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளது.
• 2047ஆம் ஆண்டிற்குள் 100 GW அணுசக்தி திறனை அடைய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 8.18 GW-லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. இதை அடைய, உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
• ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான சர்வதேச கூட்டாண்மைகள் புத்துயிர் பெற்றுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொவ்வாடாவில் அமெரிக்காவுடன் இணைந்து ஆறு 1208 மெகாவாட் அணுமின் நிலையங்களை அமைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• சுதந்திரத்திற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையம் உருவாக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் அணுசக்தி பயணம் தொடங்கியது. 1956ஆம் ஆண்டு, ஆசியாவின் முதல் ஆராய்ச்சி உலையான Apsara, டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre (BARC)) கட்டப்பட்டது. இது இந்தியாவின் வலுவான அணுசக்தி திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது.
• நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், சிறிய மட்டு உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ₹20,000 கோடி மதிப்பிலான அணுசக்தி இயக்கத்தை அமைக்கும் என்று கூறினார். மேலும், 2033-ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ஐந்து உலைகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறிய மட்டு உலைகள் செயல்படும் என்று உறுதியளித்தார்.
• அணு மின் நிலையங்களை நிர்மாணிப்பதிலும் இயக்குவதிலும் தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்க அணுசக்தி சட்டம் மற்றும் அணு சேதத்திற்கான குடிமை பொறுப்புச் சட்டத்தை மாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
• குறிப்பிடத்தக்க வகையில், சூரிய அல்லது காற்று போன்ற புதுப்பிக்கத்தக்கவை போல் இல்லாமல், அணுசக்தியானது தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நம்பகமான ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், வானிலை தொடர்பான குறிக்கீடுகளால் இது எளிதில் பாதிக்கப்படாது.
• சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)), தூய்மையான ஆற்றலுக்கு மாறுவது குறித்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சர்வதேச அமைப்பானது, உலகம் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால் 2050ஆம் ஆண்டளவில் அணுசக்தி இரட்டிப்பாகும் என்று கூறுகிறது. அணுசக்தியின் பிரச்சனை என்னவென்றால், அது பெரியது, விலை உயர்ந்தது, கட்ட நீண்ட நேரம் எடுக்கும். மேலும், ஏதாவது தவறு நடந்தால் அது மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும்.