முக்கிய அம்சங்கள்:
• “நீண்ட காலப் போக்குகளைப் பார்த்தால், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 2001 நிதியாண்டில் $11.5 பில்லியனில் இருந்து 2024 நிதியாண்டில் $34.8 பில்லியனாக அதிகரித்துள்ளன. இருப்பினும், இது உலக சந்தையில் 4% மட்டுமே. இந்த விகிதத்தில், பெரிய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்படவிட்டால், 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை அடைவது மிகவும் கடினமாக இருக்கும்.
• 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய, ஆடைகள் மட்டுமல்லாமல், முழு ஜவுளி மற்றும் ஆடை துறையையும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்ய, விவசாயம் முதல் ஏற்றுமதி வரை ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள சவால்களைப் பார்க்க வேண்டும்.
• 2024-25ஆம் ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக பருத்தியை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறக்குமதி 2.6 மில்லியன் பேல்களை எட்டும், அதே நேரத்தில் ஏற்றுமதி 1.5 மில்லியன் பேல்களாக மட்டுமே இருக்கும். இது 2014ஆம் நிதியாண்டில் 11.7 மில்லியன் உச்ச ஏற்றுமதியிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் உள்ள உச்ச மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee (GEAC)) அனுமதி அளித்த போதிலும், அடுத்த தலைமுறை களைக்கொல்லி சகிப்புத்தன்மை (herbicide tolerant (Ht)) மரபணுமாற்ற விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதிக்காததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
• “இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன, ஆனால் அவர்களில் பெரும்பாலானவை (சுமார் 80%) பரவலாக்கப்பட்ட துறையில் உள்ளன. இதன் விளைவாக, ஏற்றுமதிகள் இருக்கக்கூடியதைவிட மிகக் குறைவாகவே உள்ளன. முக்கியப் பிரச்சினைகள் நவீன தொழில்நுட்பத்தை மெதுவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செயல்பாட்டில் பலவீனமான இணைப்புகள் ஆகும். பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை (Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM-MITRA)) திட்டம் ஜவுளி பூங்காக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அதிக நிலத் தேவைகள் சிறு குறு வணிகங்களுக்கு அதன் வரம்பைக் கட்டுப்படுத்துகின்றன.
• சவால்களை சமாளிக்கவும், 2030-க்குள் T&A ஏற்றுமதியின் லட்சிய இலக்கை அடையவும், இந்தியா ஒரு ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்றி தைரியமான கொள்கை சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்.
• முதலாவதாக, இந்தியாவின் ஆடைத் துறை fashion-driven தொழிற்சாலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த மாற்றத்திற்கு உதவ, மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளிலிருந்து (man-made fibres (MMF)) தயாரிக்கப்பட்ட ஆடைகளில் முதலீட்டை ஊக்குவிப்பதும், MMF-ல் தரக் கட்டுப்பாட்டு விதிகள் போன்ற தடைகளை நீக்குவதும் முக்கியம்.
• இரண்டாவதாக, ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி மையங்களை உருவாக்க PM-MITRA திட்டம் விரைவாக கண்காணிக்கப்பட வேண்டும். இது துணி மற்றும் ஆடை உற்பத்தியில் அளவிடுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
• "மூன்றாவதாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreements (FTAs)) பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 66 சதவிகிதம் பங்கு வகிக்கும் முக்கிய சந்தைகளுக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும்.
• "நான்காவதாக, பருத்தி உற்பத்தியையும், இழைகளின் தரத்தையும் மேம்படுத்துவது முக்கியம். இந்தியா அதிக அளவில் பருத்தியை உற்பத்தி செய்வதால், ஒரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது, ஆனால் அது அதன் முழு திறனுக்கும் பயன்படுத்தப்படவில்லை.
• இந்த முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா தனது T&A ஏற்றுமதிகளை அதிகரித்து 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை நெருங்க முடியும். இருப்பினும், அரசாங்கம் வலுவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது நடக்கும். இல்லையெனில், அது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.