வளர்ந்த இந்தியா (Viksit Bharat) செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, எதிர்காலத்திற்கான பணியாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அதி திறனுடைய மற்றும் ஆற்றல்மிக்க கொள்கை கட்டமைப்பானது (agile and dynamic policy framework) மிகவும் முக்கியமானது.
2017-18 முதல், இந்தியாவின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதினர் சுமார் 9 கோடி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், முறையான துறை சார்ந்த வேலைகளின் 6 கோடி உயர்ந்துள்ளன. இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 லட்சம் வேலைகள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகிறது. சமீபத்திய வேலைவாய்ப்பு அதிகரிப்பில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் சுயதொழில் அல்லது முறைசாரா சேவைகள் மூலம் வந்துள்ளன. எனவே, அதிகரித்து வரும் உழைக்கும் வயதினரின் வேலை வாய்ப்புகளின் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
தீவிர தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் (rapid technological progress), அதிகளவு முறையான துறை சார்ந்த வேலைகளை உருவாக்குவதற்கான சவால் இன்னும் கடினமாகிறது. அனைத்து துறைகளிலும் உற்பத்தி தொழில்நுட்பம் குறைவான அளவு உழைப்பு மிகுந்ததாக மாறி வருவதாக தரவு காட்டுகிறது. அதிக உழைப்பு மிகுந்த உற்பத்தி மற்றும் சேவைகள் உட்பட அதிக மூலதன-தீவிர உற்பத்தியை நோக்கிய மாற்றம், செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சியுடன் வேகமடைய வாய்ப்புள்ளது.
ஆனால், உழைப்பு நிறைந்த பொருளாதாரத்தில் உற்பத்தியின் மூலதன தீவிரம் ஏன் அதிகரித்து வருகிறது? இதில் இரண்டு காரணிகள் உள்ளன. முதலாவதாக, தேவை சார்ந்த காரணிகள் (demand-side factors) ஆகும். இந்த காரணிகள் மூலதன-தீவிர நுட்பங்களைப் பின்பற்றுவதை அவசியமாக்குகின்றன. இது குறைந்த செலவில் உற்பத்தித்திறன் மற்றும் மதிப்பை அதிகரிக்க உதவுகிறது. இரண்டாவதாக, விநியோக-பக்க காரணிகள் (supply-side factors) ஆகும். இந்த காரணிகள் திறமையான அல்லது உயர்தர உழைப்பின் கிடைக்கும் தன்மையை பாதிக்கின்றன.
மூலதனம் (capital) அல்லது இயந்திரங்களின் விலை குறைந்தால் (machinery decreases), உற்பத்தியாளர்கள் அதிக மூலதன-தீவிர தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. இதில், உற்பத்தித்திறன் மேம்படாவிட்டாலும் இது நிகழலாம். சேவைத் துறையானது, மதிப்புக் கூட்டலில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேவைகளின் வளர்ந்து வரும் பங்களிப்பால் இது பிரதிபலிக்கிறது. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைந்துள்ள நிலையில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு தேக்கமடைந்துள்ளது.
உண்மையான ஊதியங்கள் அதிகம் அதிகரிக்கவில்லை என்றாலும், உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மூலதனம் மற்றும் புதிய இயந்திர அடிப்படையிலான தொழில்நுட்பத்தின் விலை விரைவாகக் குறைந்து வருகிறது. அதேநேரத்தில், நமது தொழிலாளர் படையில் 10%-க்கும் குறைவானவர்களே முறையான தொழில்நுட்ப அல்லது தொழில் பயிற்சி பெற்றுள்ளனர். நமது படித்த இளைஞர்களில் பெரும்பாலோர் வேலைவாய்ப்புக்குத் தயாராக இருப்பதற்குத் தேவையான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் சான்றுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட திறன்களை ஆதரிக்கும் புதிய தொழில்நுட்பங்களின் வருகையுடன், தேவையற்ற பணிகளின் மதிப்பிழப்பு அல்லது அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த "திறன்-சார்பு தொழில்நுட்ப மாற்றம்" (skill-biased technological change) தொடர்பாக, நிறுவனங்கள் அதிக உற்பத்தி மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான இயந்திர அடிப்படையிலான தொழில்நுட்பங்களை நோக்கி மாறும்போது தொழிலாளர்களுக்கான தேவையைக் குறைக்கிறது. எனவே, புதிய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை நிறைவு செய்யும் திறன்களுடன் நமது தொழிலாளர்களின் திறன்களை தொடர்ந்து புதுப்பித்து மேம்படுத்துவது மிகவும் முக்கியம்.
இந்த சூழ்நிலையில், முறை சார்ந்த துறையில் அதிக தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்க என்ன கொள்கைகளை பின்பற்ற வேண்டும்?
வேலைகளின் இடைவெளியைச் சமாளிக்க ஒன்றிய அரசு இரண்டு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது. முதலாவதாக, PLI திட்டம் போன்றவற்றின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் இது கவனம் செலுத்துகிறது. இரண்டாவதாக, தனியார் துறை அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive(ELI)) மற்றும் பிற பயிற்சித் திட்டங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கவும் ஊக்குவிக்கிறது.
தற்போதைய உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டம் முக்கியமாக உயர் மதிப்புள்ள பொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த தயாரிப்புகளுக்கு உயர் திறன், சிறந்த உழைப்பு ஆகியவை தேவை. இந்தத் திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர திறன், உழைப்பு மிகுந்த வேலை தேவைப்படும் துறைகளில் குறைவாக கவனம் செலுத்துகிறது. PLI பட்ஜெட்டில் 50%-க்கும் அதிகமானவை பெரிய அளவிலான மின்னணுவியல் (electronics), தகவல் தொழில்நுட்ப வன்பொருள் (IT hardware) மற்றும் ட்ரோன் உற்பத்திக்கு (drone manufacturing) ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உணவு பதப்படுத்துதல் மற்றும் மருந்துத் தொழில்களில் பெரும்பாலான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் வேலை உருவாக்கும் திறனுக்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை உள்ளது. திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உயர் ரக தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைத் தடுக்கலாம். நமது தற்போதைய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் குறைந்த அல்லது நடுத்தர திறன்களைக் கொண்டுள்ளனர்.
மறுபுறம், ELI திட்டம், முறையான துறையில் வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation(EPFO)) மூலம் அரசாங்க பணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதைச் செய்கிறது. இது உழைப்பு மிகுந்த துறைகளிலும் கவனம் செலுத்துகிறது. பணியமர்த்தல் அபாயங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனியார் நிறுவனங்கள் பயிற்சி பெறாத தொழிலாளர்களை பணியமர்த்த இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தக் கொள்கை ஆரம்பச் சுமையை அரசாங்கத்திற்கு மாற்றுவதன் மூலம் தொழிலாளர் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில், மானியம் அல்லது இடமாற்றங்கள் குறுகியகால (சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை) ஆகும். இந்தத் திட்டம் நீடித்த வேலைவாய்ப்பை உருவாக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றது.
காலப்போக்கில் பயிற்சியாளர்களைக் கண்காணிக்க கூடுதல் தரவு தேவை. இந்தத் திட்டம் நிலையான திறனுக்கு வழிவகுக்குமா என்பதை மதிப்பிட இது உதவும். ELI திட்டம் முதலாளிகளை ஆரம்ப மற்றும் தொடர்ச்சியான திறன் இரண்டிலும் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியுமா என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இது முக்கியம்.
அதாவது, உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்தத் துறைகளில் தேவையான, பூர்த்தியான திறன்களைக் கொண்ட தொழிலாளர்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்தவும், ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க, உற்பத்தி மற்றும் தொழிலாளர் திறனுக்கான உத்திகளை இணைப்பதை கொள்கை வகுப்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறை வேலை உருவாக்கத்தில் தடையாக இருக்கும் தேவை மற்றும் விநியோக காரணிகள் இரண்டையும் நிவர்த்தி செய்யும், அதே நேரத்தில் அதிக மதிப்புள்ள உற்பத்தியை நோக்கி பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றத்தையும் தூண்டும்.
தற்போது, ஒவ்வொரு அமைச்சகமும் அதன் சொந்த PLI பட்ஜெட்டைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்களுடன் சிறிய ஒருங்கிணைப்பு உள்ளது. இதன் விளைவாக, திறமையான தொழிலாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால விநியோகம் எங்கிருந்து வரும் என்பதை அவர்கள் வரைபடமாக்குவதில்லை. இதன்மூலம், ELI ஊக்கத்தொகைகளின் கட்டமைப்பை மாற்றலாம். சமமாக இருப்பதற்குப் பதிலாக, சான்றளிக்கப்பட்ட திறன்களின் ஒவ்வொரு மட்டத்திலும் இடமாற்றங்கள் அதிகரிக்கக்கூடும். இது வேலையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு இரண்டையும் ஆதரிக்கும். ELI திட்டத்தின் கவனம் திறன் விநியோகச் சங்கிலிக்கும் மாறக்கூடும். இது ITIகள் போன்ற பயிற்சி நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை மறுசீரமைத்து சலுகைகள் அளிக்கக்கூடும். இந்த சலுகைகள் திறன்களுக்கான எதிர்கால தேவையுடன் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
அதே நேரத்தில், கடுமையான தொழிலாளர் விதிமுறைகள் என்ற நீண்டகால பிரச்சினையை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த விதிமுறைகள் உழைப்பிற்கான தகுந்த விலையை உயர்த்துகின்றன மற்றும் வணிகங்களை மூலதன-தீவிர தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கின்றன. நெகிழ்வான தொழிலாளர் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான பொறுப்பு மாநில அரசாங்கங்களிடமே உள்ளது.
தகவமைப்பு மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் கொள்கை கட்டமைப்பு மிக முக்கியமானது. வளர்ந்த இந்தியாவின் (Viksit Bharat) இலக்கை ஆதரிக்கும் ஒரு பணியாளர்களை உருவாக்குவதில் அது கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் (production value chain) நாம் முன்னேறும்போது, நமது தற்போதைய மற்றும் எதிர்கால பணியாளர்களின் அளவு மற்றும் தரம் இரண்டிலும் முதலீடு செய்ய வேண்டும்.
எழுத்தாளர் ISI (டெல்லி)-ல் பொருளாதாரப் பேராசிரியராகவும் NCAER-ல் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.