இந்திய கடலோர காவல்படை, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் பதவி உயர்வுக்கான நடைமுறை என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டியிடம், விங் கமாண்டர் நிகிதா பாண்டேவுக்கு ஏன் நிரந்தர ஆணையம் மறுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியது.


• இது ஒரு வாரியத்தின் கண்டுபிடிப்புகளின் காரணமாகவும், இரண்டாவது மறு ஆய்வு வாரியம் தனது வழக்கை பரிசீலிக்க உள்ளது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறினார். நிவாரணம் கோரி பாண்டே நேரடியாக நீதிமன்றத்தை அணுகியதாகவும் அவர் மேலும் கூறினார்.


• துணைப் படைத் தலைவர் “இவர்கள் அனைவரும் புத்திசாலித்தனமான அதிகாரிகள். இருப்பினும், முக்கிய விவகாரம் என்னவென்றால், ஒப்பீட்டுத் தகுதி ஒன்று உள்ளது. 14 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சில அதிகாரிகள் வெளியே செல்ல வேண்டும் என்ற ஒரு முறை எங்களிடம் உள்ளது. சுறுசுறுப்பாக இருப்பதே படையின் முக்கிய தேவையாகும்.” என்று கூறினார்.


• "நமது விமானப்படை உலகின் சிறந்த அமைப்புகளில் ஒன்றாகும். அதிகாரிகள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள். அவர்கள் வெளிப்படுத்திய ஒருங்கிணைப்பின் தரம், அது இணையற்றது என்று நான் நினைக்கிறேன். எனவே நாங்கள் எப்போதும் அவர்களை வணங்குகிறோம். அவர்கள் தேசத்திற்கு ஒரு பெரிய சொத்து. அவர்களால், இரவில் தூங்க முடிகிறது" என்று நீதிபதி காந்த் கூறினார்.


• பாண்டே சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, விங் கமாண்டர் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த போர் கட்டுப்பாட்டாளர் என்றும், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்கு முந்தைய ஆபரேஷன் பாலகோட்டின் போது நிர்வகிக்கப்பட்ட ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நிபுணராக பங்கேற்றார் என்றும் கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


• வருடாந்திர ரகசிய அறிக்கைகள் மற்றும் பல்வேறு படிப்புகள் போன்ற சில அளவுகோல்களின் அடிப்படையில், இராணுவத்தில் ஒரு அதிகாரி 16 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றிய பின்னரே மூத்த இராணுவ அதிகாரி பதவிக்கு (Colonel) பதவி உயர்வு பெறுகிறார்


• இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண் அதிகாரிகள் 1992-ல் குறுகிய சேவை ஆணைய (Short Service Commission (SSC)) அதிகாரிகளாக சேர்க்கப்பட்டனர். அதற்குப் பிறகு ஆண்டுகளில் நிரந்தர ஆணையத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. நீதிபதி அட்வகேட் ஜெனரல் (Judge Advocate General (JAG)) மற்றும் இராணுவ கல்விப் படைகள் விதிவிலக்குகளாக இருந்தன. 2008-ஆம் ஆண்டில் அவர்களுக்காக ஒரு நிரந்தர ஆணையம் திறக்கப்பட்டது.


• மற்ற ஆயுதங்கள் மற்றும் சேவைகளுக்கு, பெண்கள் நிரந்தர பணியாளர்களாக முடியாது. மேலும், Colonel ஆவதற்கு கட்டாயமாக இருக்கும் சேவைக் காலத்தை முடிப்பதற்கு முன்பே அவர்கள் ஓய்வு பெற வேண்டியிருந்தது.


• 2019-ஆம் ஆண்டில், குறுகிய சேவை ஆணைய பெண் அதிகாரிகள் 14 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றிருக்கக்கூடிய நிரந்தர ஆணையத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் விதிகளை இராணுவம் மாற்றியது. இருப்பினும், இந்த விதி பழைய அதிகாரிகளுக்கு பொருந்தவில்லை, 2020-ஆம் ஆண்டில், ராணுவ சேவையைத் தொடங்கிய பெண்கள் அதிகாரிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.


• பிப்ரவரி 2020-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பின் மூலம், பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் வழங்கப்பட்டது. இது இராணுவத்தில் அவர்களின் மேலும் வளர்ச்சி மற்றும் பதவி உயர்வுகளுக்கான கதவுகளைத் திறந்தது. இது பெண்களுக்கான தலைமைத்துவ மற்றும் உயர் மேலாண்மை படிப்புகளைத் தாமதமாகத் தொடங்கி வருகிறது.


• மூத்த இராணுவ அதிகாரி பதவிக்கு (Colonel) பதவி உயர்வு பெற்றவுடன், ஒரு அதிகாரி இராணுவத்தில் நேரடியாக துருப்புக்களுக்கு கட்டளையிட தகுதியுடையவர், இது அதிகாரியின் தலைமைத்துவ குணங்களை அங்கீகரிப்பதாகும். பிரிகேடியர் (Brigadier) அல்லது மேஜர் ஜெனரல் போன்ற உயர் பதவிகள் உட்பட வேறு எந்த பதவியிலும் ஒரு அதிகாரி களத்தில் உள்ள துருப்புக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாததால் இது ஒரு விரும்பத்தக்க நியமனமாகக் கருதப்படுகிறது.


Brigadier  என்றால் என்ன ?


Brigadier என்பது இந்திய ராணுவத்தில் ‘ஒரு நட்சத்திர (one-star)’  பதவியாகும்.  இது Colonel பதவிக்கு மேல் உள்ள பதவியாகும். இருப்பினும், இரண்டு நட்சத்திர பதவியான Major General-ஐ விட குறைவானதாகும்.



Original article:
Share: