இந்தியா நிதி நடவடிக்கை பணிக்குழுவிற்கு (Financial Action Task Force (FATF)) ஒரு ஆவணத் தொகுப்பை [dossier] சமர்ப்பிக்கும் மற்றும் பாகிஸ்தானை மீண்டும் “சாம்பல் பட்டியலில்” (grey list) வைப்பதற்கான வாதத்தை முன்வைக்கும்.
பாகிஸ்தானை மீண்டும் "சாம்பல் பட்டியலில்" வைப்பதற்கான வழக்கை முன்வைக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவிடம் (FATF) இந்தியா ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் நிதி நடவடிக்கை பணிக்குழு சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டபோது இஸ்லாமாபாத் (பாகிஸ்தானின் தலைநகரம்) கடைப்பிடிப்பதாக உறுதியளித்த சில விதிகளை மீறுவதை புது தில்லி குறிப்பாக சுட்டிக்காட்டும். பாகிஸ்தான் 2018 மற்றும் 2022-க்கு இடையில் நான்கு ஆண்டுகளாக சாம்பல் பட்டியலில் இருந்தது.
நிதி நடவடிக்கை பணிக்குழு என்றால் என்ன?
நிதி நடவடிக்கை பணிக்குழு உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்புகளை கண்காணிக்கும் அமைப்பாகும். இது 40 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். 2023-ல் உறுப்பினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
பணம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்கிறது. அபாயங்களைக் குறைக்க உலகளாவிய தரநிலைகளை ஊக்குவிக்கிறது மற்றும் நாடுகள் பயனுள்ள நடவடிக்கை எடுக்கிறதா என்பதை மதிப்பீடு செய்கிறது" என்று அமைப்பின் வலைத்தளம் தெரிவிக்கிறது.
கண்காணிப்பு மற்றும் தகவல் அளித்தல் (MONITORING & INFORMING): ஒரு கண்காணிப்பு அமைப்பாக, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முதன்மையான பணி குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் எவ்வாறு "நிதியை திரட்டுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் மற்றும் நகர்த்துகிறார்கள்" என்பதை கண்காணிப்பது மற்றும் "சமீபத்திய பணப்பட்டுவாடா, பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் பெருக்க நிதியளிப்பு நுட்பங்கள் (proliferation financing techniques) பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
தரநிலைகளை நிர்ணயித்தல் (SETTING STANDARDS): அதன் ஆராய்ச்சியின் அடிப்படையில், நிதி நடவடிக்கை பணிக்குழுவிற்கு "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க ஒருங்கிணைந்த உலகளாவிய பதில்விடையை உறுதிப்படுத்த" பரிந்துரைகளின் தொகுப்பு உள்ளது. பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுக்க சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் இந்த குழு நாடுகளுக்கு உதவுகிறது.
இணக்கமின்மையை சுட்டிக்காட்டுதல் (FLAGGING NON-COMPLIANCE): இதுதான் சாதாரண மக்கள் நிதி நடவடிக்கை பணிக்குழு பற்றி கேள்விப்படும் சுழலாகும். எளிமையாக சொன்னால், நிதி நடவடிக்கை பணிக்குழு விதிமுறைகளை பின்பற்றாத நாடுகள் அடையாளம் காணப்படுகின்றன மற்றும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இது பொதுவாக சாம்பல் பட்டியல் (grey list) மற்றும் கருப்பு பட்டியல் (black list) என அழைக்கப்படுகின்றன.
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல்/கருப்பு பட்டியல்கள் (grey/black lists) எதை உள்ளடக்குகின்றன?
நிதி நடவடிக்கை பணிக்குழு ஆண்டில் மூன்று முறை — பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபரில் — வெளியிடும் இரண்டு பொது அறிக்கைகளில், பணம் மோசடி (money laundering) மற்றும் தீவிரவாத நிதியுதவியை (terrorist financing) எதிர்க்கும் விதிமுறைகள் (Anti-Money Laundering/Combating the Financing of Terrorism (AML/CFT)) பலவீனமாக உள்ள நாடுகளை அடையாளம் காண்கிறது.
சாம்பல் பட்டியல் (grey list), அதிகாரப்பூர்வமாக "அதிகரித்த கண்காணிப்பின் கீழ் உள்ள அதிகார வரம்புகள்" அவற்றின் பணப்பட்டுவாடா எதிர்ப்பு/பயங்கரவாத நிதியளிப்பு எதிர்ப்பு ஆட்சிகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியது. ஆனால், "ஒப்புக்கொள்ளப்பட்ட கால அளவுகளுக்குள்" இவற்றை நிவர்த்தி செய்ய நிதி நடவடிக்கை பணிக்குழு உடன் தீவிரமாக பணியாற்றுகின்றன. பெயர் குறிப்பிடுவது போல், சாம்பல் பட்டியலில் உள்ள நாடுகள் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அதிகரித்த கண்காணிப்புக்கு உட்பட்டவை. தற்போது இந்த பட்டியலில் 24 நாடுகள் உள்ளன.
சாம்பல் பட்டியலிடல் நாடுகளை பணப்பட்டுவாடா எதிர்ப்பு/பயங்கரவாத நிதியளிப்பு எதிர்ப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தூண்டுகிறது. இது பொருளாதார மற்றும் நற்பெயர் பாதிப்புகளை கொண்டுவருகிறது. இது வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச உதவியின் உள்ளோட்டத்தை பாதிக்கிறது. 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் இருந்தது இந்தியாவிற்குள், குறிப்பாக ஜம்மு & காஷ்மீரில் சட்டவிரோத நிதி ஓட்டங்களை குறைக்க உதவியது என்று இந்திய அரசு அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.
கருப்பு பட்டியல், அதிகாரப்பூர்வமாக "நடவடிக்கைக்கான அழைப்புக்கு உட்பட்ட உயர் ஆபத்து அதிகார வரம்புகள்", அவற்றின் பணப்பட்டுவாடா எதிர்ப்பு/பயங்கரவாத நிதியளிப்பு எதிர்ப்பு ஆட்சிகளில் "தீவிரமான ராஜதந்திர குறைபாடுகளைக்" கொண்ட நாடுகளை உள்ளடக்கியது. நிதி நடவடிக்கை பணிக்குழு, இந்த பட்டியலில் உள்ள நாடுகளுடன் தொடர்பு கொள்ளும் மற்ற அனைத்து நாடுகளும் அதிக கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், அந்த நாடுகளால் சர்வதேச நிதி அமைப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளும் (counter-measures) எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
தற்போது கருப்பு பட்டியலில் வட கொரியா, மியான்மர் மற்றும் ஈரான் போன்ற மூன்று நாடுகள் உள்ளன. அதன் விளைவாக அவர்களுக்கு நிதி நடவடிக்கை பணிக்குழு உறுப்பு நாடுகளால் கட்டாய பொருளாதார தடைகள் (mandated economic sanctions) விதிக்கப்பட்டுள்ளன.