நிதி ஆயோக் நிர்வாகக் குழு -பிரியா குமாரி சுக்லா

 இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனத்தின்  (National Institution for Transforming India (NITI Aayog)) கூட்டம், மழைக்காலம் மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் போன்ற தலைப்புகளின் முக்கியத்துவம் என்ன?


தற்போதைய செய்தி: பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது, மேலும் "இந்தியாவை போல ஒன்றிய அரசும் மாநில அரசங்களும் இணைந்து செயல்பட்டால், எந்த இலக்கையும் அடையலாம்” என்று கூறினார்.


முக்கிய அம்சங்கள்:


• 10-வது NITI ஆயோக் நிர்வாகக் குழுவில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் சிந்தனைக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதன் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் ஒரு இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இலக்கை நோக்கி நாம் செய்யலைப்பட்டால், வளர்ந்த இந்தியாவிற்காக 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை.


• மாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம், “முதல்வர்களுக்கான உரையின் போது, ​​உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், காலாவதியான சட்டங்களை அகற்றி முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளிடம் பிரதமர் கூறினார்” என்று கூறினார். இந்தியா பல நாடுகளுடன் கையெழுத்திட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் (Free Trade Agreements) பயன்படுத்திக் கொள்ள மாநிலங்களும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கூறினார்.


• கூட்டம் குறித்த அரசாங்க அறிக்கையின்படி, ஆபரேஷன் சிந்தூர் “ஒரு முறை மட்டுமே செய்யப்படும் முயற்சியாகக் கருதப்படக்கூடாது” என்றும், இந்தியா “சிவில் தயார்நிலைக்கான நமது அணுகுமுறையை நவீனமயமாக்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் கூறினார். சமீபத்திய மாதிரிப் பயிற்சிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் மாநிலங்கள் சிவில் பாதுகாப்பு தயார்நிலையை நிறுவனமயமாக்க வேண்டும் என்ற நமது கவனத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


• ஜூலை 2024-ல் நடைபெற்ற NITI Aayog குழுவின் முந்தைய கூட்டத்தை, பெரும்பாலான எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். அவர்கள் இதற்குக் காரணமாக, அந்தக் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட "பாகுபாடான" ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையே என்று சுட்டிக்காட்டினர்.


உங்களுக்குத் தெரியுமா?


•NITI Aayog-கின் நிர்வாகக் குழுவில் இந்தியப் பிரதமர்; சட்டமன்றம் கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள்; பிற யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள்; முன்னாள் அலுவல் உறுப்பினர்கள்; நிதி ஆயோக்கின் துணைத் தலைவர்; முழுநேர உறுப்பினர்கள், நிதி ஆயோக் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் அடங்குவர். முதன்முதலில் பிப்ரவரி 2015-ல் உருவாக்கப்பட்டது மற்றும் பிப்ரவரி 2021-ல் மறுசீரமைக்கப்பட்டது, நிர்வாகக் குழு கூட்டுறவு கூட்டாட்சியின் நோக்கங்களை உள்ளடக்கியது மற்றும் தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக துறைகளுக்கு இடையேயான கூட்டாட்சி பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு தளத்தை வழங்குகிறது.


• இதுவரை, பிரதமர் தலைமையில் ஒன்பது நிர்வாகக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி கொள்கையை ஒத்துழைப்புடன் வடிவமைக்க உதவியுள்ளன.


Original article:
Share: