சிறு நகரங்களை மறுபரிசீலனை செய்ய நகர்ப்புற சவால் நிதி பயன்படுத்தப்பட வேண்டும். -பூமா ராமன்

 ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் Smart Cities Mission (சீர்மிகு நகரங்கள் திட்டம்) அனுபவம் காட்டுகிறது என்னவென்றால், பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவது தானாகவே அலை விளைவை (ripple effect) ஏற்படுத்தாது. பிராந்திய வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


இந்தியா நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு உற்சாகமான மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. ரூபாய் 1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதியம் ("Urban Challenge Fund") அறிவிப்புடன், இந்திய அரசு நமது நகரங்களை மறு கற்பனை செய்வதற்கு ஒரு தைரியமான அடி எடுத்து வைக்கிறது. இந்த நிதியம், முதல் ஆண்டுக்கு ரூபாய் 10,000 கோடி ஒதுக்கியுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள மிக அழுத்தமான சவால்களை சமாளிக்க முயல்கிறது.


நகர்ப்புற சவால் நிதியம் மூன்று அம்சங்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களை பொருளாதார வளர்ச்சியின் உற்பத்தித்திறனான மற்றும் திறமையான மையங்களாக ஆக்குவது; இரண்டாவதாக, அவற்றை ஆக்கப்பூர்வமான வழியில் வளர்த்து மறுவளர்ச்சி செய்வது மற்றும் மூன்றாவதாக, அடிப்படை கட்டமைப்பு, குறிப்பாக நீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது. இந்த நிதியம் வங்கிக்கு தகுதியான திட்டங்களுக்கு 25 சதவீத நிதியுதவி வழங்கும், குறைந்தது 50 சதவீத செலவு பத்திரங்கள் (bonds), வங்கி கடன்கள், மற்றும்  பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnerships (PPP)) போன்ற பிற மூலங்களிலிருந்து வர வேண்டும்.


உலக வங்கி அறிக்கையின் படி, 2036-ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்திய நகரங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரிவான நகர்ப்புற விரிவாக்கத்தை குறிப்பிடுகிறது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், கடுமையான சவால்களையும் வழங்குகிறது. அதிக கூட்டம், போதுமான அடிப்படை கட்டமைப்பு இல்லாமை, வீட்டு பற்றாக்குறை, மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை டெல்லி, மும்பை, மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் முக்கிய கவலைகளாக உள்ளன. நீர், சுகாதாரம், போக்குவரத்து, மற்றும் சுகாதார பராமரிப்பு தேவை நகர்ப்புற அமைப்புகளின் திறனை மீறுகிறது. இது திறனற்ற சேவை வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சேரிகளில் வாழ்கின்றனர். சமூக ஏற்றத்தாழ்வு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பெரும்பாலும் வளர்ச்சி வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். மேலும், மோசமான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் துண்டாடப்பட்ட ஆட்சி திறமையான தீர்வுகளை தடுக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள நீடித்த நகர்ப்புற திட்டமிடல், மலிவு வீட்டுவசதியில் முதலீடுகள், அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துதல், மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் தேவைப்படுகின்றன.


வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்புற மக்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா நகர்ப்புற உள்கட்டமைப்பில் $840 பில்லியன் (ரூ. 70 லட்சம் கோடி) அல்லது சராசரியாக ஆண்டுக்கு $55 பில்லியன் (ரூ. 4.6 லட்சம் கோடி) முதலீடு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிக்கை மதிப்பிடுகிறது. இந்தியாவின் நகர்ப்புற சவாலை எதிர்கொள்ள தேவையானதைவிட வரவு செலவு அறிக்கை ரூ. 10,000 கோடி குறைவாக உள்ளது.


அறிக்கை அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை வழங்குவதற்கு நகர நிறுவனங்களின் திறன்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கிறது. தற்போது, 10 பெரிய நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)) கடந்த மூன்று நிதியாண்டுகளில் அவர்களின் மொத்த முதலீட்டு வரவு செலவு அறிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே செலவழிக்க முடிந்தது. தற்போது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நகர அடிப்படை கட்டமைப்பின் 75 சதவீதத்திற்கும் மேல் நிதியளிக்கின்றன. நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் அவர்களின் சொந்த உபரி வருவாய்களின் மூலம் 15 சதவீதம் நிதியளிக்கின்றன. இந்திய நகரங்களின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே தற்போது தனியார் ஆதாரங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.


2011 மற்றும் 2018-க்கு இடையில், நகர்ப்புற சொத்து வரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதமாக இருந்தது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3-0.6 சதவீதமாக இருந்தது. நகராட்சி சேவைகளுக்கான குறைந்த சேவை கட்டணங்கள் அவற்றின் நிதி நிலைத்தன்மையையும் தனியார் முதலீட்டிற்கான ஈர்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. நடுத்தர காலத்தில், வரிவிதிப்புக் கொள்கை மற்றும் நிதி பரிமாற்ற முறை உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிக்கை பரிந்துரைக்கிறது. இது நகரங்கள் அதிக தனியார் நிதியுதவியைப் பயன்படுத்த அனுமதிக்கும். குறுகிய காலத்தில், தனியார் நிதியுதவியை அதிக அளவில் திரட்டக்கூடிய பெரிய, அதிக திறன் கொண்ட நகரங்களின் தொகுப்பை இது அடையாளம் காட்டுகிறது.


இந்த பரிந்துரைகள் இருந்தபோதிலும், இந்த கட்டுரை அதிக உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவின் சிறிய நகரங்களில் முதலீடு செய்ய வாதிடுகிறது.


இந்தியாவின் நகரங்கள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுவதைவிட பெரியதாக உள்ளன. நகரங்களுக்கு அருகிலுள்ள பல பகுதிகள் நகர்ப்புறமாக இல்லாமல் கிராமப்புறமாக கணக்கிடப்படுவதால் இது நிகழ்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் மிகவும் துல்லியமான கணக்கீட்டைப் பெற நகரங்களின் பரந்த வரையறையைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் தொகை 2001 மற்றும் 2011-க்கு இடையில் முந்தையதை விட மெதுவாக வளர்ந்தது. ஏன் என்பதைப் புரிந்துகொள்ள நாம் மேலும், படிக்க வேண்டும். சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவில் பெரிய நகரங்கள் எப்போதும் பொருளாதாரம் வளர முக்கிய காரணம் அல்ல என்று கூறுகின்றன. நகர்ப்புறங்களில் முறையான துறை வேலைகள் குறைவாக இருப்பது, மிகவும் சிறப்பு வாய்ந்த திறன்கள் தேவைப்படுவதைத் தாண்டி, சிலரை நகர வாழ்க்கையிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் ஒதுக்கி வைக்க (exclusionary urbanisation) வழிவகுத்துள்ளது.


இதன் விளைவாக, இந்தியாவில் நகரமயமாக்கல் அதிகமாக உள்ளது. சிறிய நகரங்கள் 2001 மற்றும் 2011-க்கு இடையில் நகரங்களைவிட வேகமான வேகத்தில் வளர்ந்து வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் (Small and Medium Towns (SMS)) குறைந்த உற்பத்தி மற்றும் வாழ்க்கை செலவுகள் உட்பட உற்பத்தியில் அவர்களின் செலவு நன்மைகளை பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்க முடியும் என்று இப்போது அங்கீகரிக்கப்படுகிறது. இந்த நகரங்கள் கிராமப்புற பொருளாதாரத்தின் பல்வகைப்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கின்றன மற்றும் அவர்களின் வளர்ச்சி கிராமப்புற வறுமையை குறைப்பதில் நகரங்களின் வளர்ச்சியைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் அத்தியாவசிய சந்தை சேவைகளை வழங்குவதன் மூலமும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையில் இணைப்புகளாக செயல்படுவதன் மூலமும் கிராமப்புற வளர்ச்சியை ஆதரிக்கின்றன. மேலும், கோவிட் பிந்தைய கூட்டு பணி இடங்களை (collaborative workspaces) ஏற்றுக்கொள்ளும் போக்கு தொலைவிலிருந்து பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், புதிய வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் செயல்பாட்டை வளர்ப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். அவை ஒரு நகரத்தின் சமூக அடிப்படை கட்டமைப்பின் மதிப்புமிக்க அங்கங்களாக பார்க்கப்படலாம். அதிக நிலையான மற்றும் முழுமையான பிராந்திய வளர்ச்சிக்கு பங்களிக்கும்.


எதிர்கால வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் நகரங்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில், இது நுகர்வை அதிகரிக்கும். 2030-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பில் 70 சதவீதம் இன்னும் வளர்ச்சியடையாத நிலையில், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எழுகின்றன. ஜூன் 2023 EY அறிக்கை, சிறிய நகரங்களின் திறனை வலியுறுத்தியது, இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கத்தை முன்னறிவித்தது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஆதரவான கொள்கைகள் மற்றும் அடுக்கு 2 நகரங்களில் திறமையான பணியாளர்கள் 11 சதவீதத்திலிருந்து (2019–2023) 14 சதவீதமாக (2023–2030) வளர்ச்சியை அதிகரிக்கக்கூடும். விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், வதோதரா மற்றும் கொச்சி போன்ற நகரங்களை உலகளாவிய திறன் மையங்களுக்கான (GCC) வளர்ந்து வரும் மையங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது, மேலும் 2030-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஒரு முக்கிய GCC மையமாக மாறும். குறைந்த செலவுகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் சிறிய நகரங்கள் விரைவான நகர்ப்புற வளர்ச்சிக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன, ஆனால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு தடையாகவே உள்ளது.


எதிர்கால வேலை வளர்ச்சியில் 70 சதவீதம் நகரங்களில், குறிப்பாக 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ஆண்டிற்கான இந்தியாவின் நகர்ப்புற காட்சியில் 70 சதவீதம் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதால், அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எழுகின்றன. ஜூன் 2023-ஆம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை சிறிய நகரங்களின் திறனை வலியுறுத்தியது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை கணித்தது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஆதரவான கொள்கைகள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் திறமையான பணியாளர்கள் இருப்பதன் மூலம் வளர்ச்சி 11 சதவீதத்திலிருந்து (2019–2023) 14 சதவீதமாக 2023 முதல் 2030-க்குள் அதிகரிக்கக்கூடும். 


விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், வதோதரா மற்றும் கொச்சி போன்ற நகரங்களை உலகளாவிய திறன் மையங்களுக்கு (Global Capability Centres (GCC)) வளர்ந்து வரும் மையங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு முக்கிய உலகளாவிய திறன் மையமாக மாறும். குறைந்த செலவுகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் சிறிய நகரங்கள் விரைவான நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு தடையாகவே உள்ளது.


7000-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களுக்கு எதிராக, Metropolises-கள் மற்றும் megapolises உட்பட வெறும் 100 நகரங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. இந்த நகரங்கள் அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசிய சேவைகளின் வழங்கல், மற்றும் அவசர அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் மிகவும் தேவை உள்ளது.


 இது விவசாயத்திலிருந்து தொழிலாளர்களை மாற்ற உதவுவது மட்டுமல்லாமல், பெரிய நகரங்களில் இடம்பெயர்வு சுமையை குறைக்கவும் உதவும். இந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் ULBs (நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள்) இந்த நகர்ப்புற சவாலை சந்திக்க திறன் வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Metropolises:


Metropolises என்பது மிகப் பெரிய மற்றும் முக்கியமான நகரம், பெரும்பாலும் ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் தலைமை நகரம் ஆகும்.


Megapolises:


Megapolises என்பது ஒரு பெரிய, தொடர்ச்சியான நகர்ப்புற மண்டலத்தை உருவாக்கும் நெருக்கமாக இணைக்கப்பட்ட பெருநகரப் பகுதிகளின் சங்கிலி ஆகும்.


நகர்ப்புற சவால் நிதியம் (Urban Challenge Fund) பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவதைவிட சிறிய நகர வளர்ச்சியின் பிரச்சினையை சமாளிக்க ஒரு வாய்ப்பாகும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) போன்ற திட்டங்களின் அன்புவங்கள் காட்டுகின்றன. பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவது தானாகவே, சிற்றலை விளைவை (ripple effect) ஏற்படுத்தாது. பிராந்திய வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


எழுத்தாளர் வாழ்விட மன்றத்தின் (Habitat Forum (INHAF)) இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.


Original article:
Share: