குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) தொடர்பான ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• திங்களன்று வெளியிடப்பட்ட ‘நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்’ என்ற தலைப்பிலான அறிக்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and development (R&D)) முயற்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதி-போட்டித்தன்மையுடன் மாற உதவும் வகையில், தொகுப்பு (cluster-based) அடிப்படையிலான தர சோதனையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியது.


• 2025-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை  ‘நடுத்தரம்’ என்ற வரையறை விரிவுபடுத்தப்பட்ட பிறகு, குறைந்த கடனுடன் நடுத்தர அளவிலான நிறுவனங்களை ஆதரிப்பதற்கான சமீபத்திய நடவடிக்கைகளிலிருந்து வருகிறது. ஏப்ரல் 1 வரை, நடுத்தர நிறுவனங்கள் என்பது ரூ.50-250 கோடி வரை விற்பனை மற்றும் ஆலை மற்றும் இயந்திரங்களில் ரூ.10-50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்கள் என வரையறுக்கப்பட்டிருந்தன. திருத்தப்பட்ட வரம்புகள்—விற்பனையில் ரூ.100-500 கோடி மற்றும் முதலீட்டில் ரூ.25-125 கோடி அதிக நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் இந்த வகையை விரிவாக்கியுள்ளன.


• நடுத்தர நிறுவனங்கள் நுண்ணிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான முன்னுரிமைத் துறை கடன்களை [priority sector loans] பெறுகின்றன. கூடுதலாக, நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி விகிதங்கள் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சராசரியாக 4% அதிகமாக உள்ளது. இது மூலதனத்தை அதிக விலையாக்குகிறது" என்று அறிக்கை கூறியது.


• நடுத்தர நிறுவனங்கள் சலுகை விகிதங்களில் கடன்களைப் பெற அனுமதிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவன (Ministry of Micro, Small, and Medium Enterprises (MSME)) அமைச்சகத்தின் கீழ் ஒரு பிரத்யேக நிதித் திட்டத்தை அறிக்கை முன்மொழிந்தது. அதிகபட்சமாக ரூ.25 கோடி வரை, ஒரு கோரிக்கைக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை. சந்தை விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ரூ.5 கோடி வரை முன் அங்கீகரிக்கப்பட்ட வரம்புடன் நடுத்தர நிறுவன கடன் அட்டையை (credit card) அறிமுகப்படுத்தவும் அறிக்கை பரிந்துரைத்தது.


• இந்தியாவில் 6 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட MSME-களில், நடுத்தர நிறுவனங்கள் 0.3 சதவீதம் மட்டுமே உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், நடுத்தர நிறுவனங்களில் சராசரி வேலைவாய்ப்பு 89 பேர் என அதிகமாக உள்ளது. இது சிறு நிறுவனங்களுக்கு 19 பேரும், நுண் நிறுவனங்களுக்கு 6 பேரும் ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள அனைத்து MSME முதலீட்டிலும் நடுத்தர நிறுவனங்களும் 81 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


• ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, நடுத்தர நிறுவனங்களின் திட்டங்களுக்கு பிரத்யேகமாக நிதியளிப்பதற்காக சுயசார்பு இந்தியா (Self-Reliant India - (SRI)) திட்டத்திற்கு 25-30 சதவீதத்தை ஒதுக்குவதாக அறிக்கை பரிந்துரைத்தது. SRI நிதியத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து ரூ.10,000 கோடி மற்றும் தனியார் பங்கிலிருந்து (private equity) ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-ல் அதன் தொடக்கத்திலிருந்து, மொத்தம் ரூ.4,885 கோடி MSME-களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


•  அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், NITI Aayog-ன் துணைத் தலைவர் சுமன் பேரி திறன் மேம்பாடு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒன்றாக கவனிப்பது முக்கியம் என்றார். "தொழிலாளர் சந்தையின் பக்கத்தில், பொதுவாக சிறு, மற்றும் குறு நிறுவனங்களுடன் தொடர்புடைய முறைசாரா வேலைவாய்ப்பிலிருந்து, நடுத்தர நிறுவனத் துறையுடன் தொடர்புடைய முறையான வேலைவாய்ப்புக்கு மாற்றம் செய்ய வேண்டும். முறையான வேலைவாய்ப்புடன் தான் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பயிற்சியில் முதலீடு செய்ய ஊக்கம் பெறுகின்றன" என்று பேரி கூறினார்.


•   இந்தியாவின் உச்ச பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவின் (apex public policy think tank) அறிக்கை இந்தியாவில் திறமையான தொழிலாளர் கிடைக்கும் நிலை 55 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டது. தென் கொரியாவில் 88 சதவீதம், அமெரிக்காவில் 85 சதவீதம் மற்றும் ஜப்பானில் 81 சதவீதம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது.


•  குறு, சிறு, நடுத்தர நிறுவனத்தின் சம்பர்க் தரவுத்தளம் (MSME Sampark Portal) மூலம் உண்மையான நேர திறன் வரைவு, தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Entrepreneurship and Skill Development Programme (ESDP)) போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவாக்குதல், மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மானியம் அளிக்கப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை அறிக்கை பரிந்துரைத்தது.


Original article:
Share: