கர்ப்பத்திற்கு முன் இரத்த சோகையை தடுக்கவும் - ம்ருத்யுஞ்சய பெல்லாட்

 பல பெண்கள் தங்கள் கர்ப்பத்தை இரத்த சோகையுடன் தொடங்குகிறார்கள். இது அவர்களில் பெரும்பாலோருக்கு இருப்பது தெரியாது. இது மாற வேண்டும்.


கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால எனது பணியில், ஒரு தொடர்ச்சியான உண்மை வெளிப்படுகிறது. பல பெண்கள் ஏற்கனவே கண்டறியப்படாத இரத்த சோகையுடன் (undiagnosed anaemia) போராடி தங்கள் கர்ப்பத்தைத் தொடங்குகிறார்கள். இந்தியாவில், மக்கள் பெரும்பாலும் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மட்டுமே மகப்பேறு ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். 


ஆனால், ஒரு பெண்ணின் ஆரோக்கியம் என்பது மிகவும் கர்ப்பம் தொடங்குவதற்கு முன்னதாகவே முக்கியமானதாக உள்ளது. ஒரு பெண் கருத்தரிக்கும் நேரத்தில் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை பொறுத்துதான் அவருடைய கர்ப்பம் மற்றும் அவருடைய குழந்தையின் ஆரோக்கியம் அமைகிறது. இருப்பினும், இந்தியாவில் குழந்தைகளைப் பெறக்கூடிய 57% க்கும் அதிகமான பெண்களுக்கு இரத்த சோகை உள்ளது. 


இது கண்டறியப்படவில்லை அல்லது சிகிச்சையளிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த பெண்கள் பெரும்பாலும் சோர்வாக, தலைச்சுற்றலாக, பலவீனமாக உணர்கிறார்கள். ஆனால் இந்த அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாக புறக்கணிக்கப்படுகின்றன. இந்த பெண்கள் கர்ப்பமாகும்போது, ​​அவர்களின் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். 


இது முன்கூட்டியே பிறக்கும் வாய்ப்பு, குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மற்றும் தாய்க்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இந்த சிக்கல்களில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (pre-eclampsia) மற்றும் பிறப்புக்குப் பிறகு அதிக இரத்தப்போக்கு போன்ற நிலைமைகள் அடங்கும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நோய் மற்றும் இறப்பு அபாயத்தை ஏற்படுத்தும் நிலையை அதிகரிக்கின்றன.


இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் : (Preeclampsia) என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு தீவிரமான இரத்த அழுத்த நிலை. இதில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரதம் இருப்பது இதன் முக்கிய அறிகுறிகளாகும். ப்ரீ-எக்லாம்ப்சியா கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு பொதுவாக ஏற்படும்.


மகப்பேறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதத்தை 100,000 நேரடி பிறப்புகளுக்கு 93 ஆகக் குறைக்க உதவியுள்ளன. இருப்பினும், இந்த முன்னேற்றத்தைத் தொடரவும், அதை விரைவுபடுத்தவும், நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும். மகப்பேறு இறப்புகளை இன்னும் குறைக்கவும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், கர்ப்ப காலத்தில் கவனிப்பில் கவனம் செலுத்துவதை விட இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டும். 


நாம் மிகவும் முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும். இரத்த சோகை தடுப்பு மற்றும் மேலாண்மையை (anaemia prevention and management) உண்மையில் மேம்படுத்த, கர்ப்பத்திற்கு முன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். “தாய்மைக்கு நீங்கள் தயாரா?” என்று மட்டும் கேட்பதற்குப் பதிலாக, “உங்கள் உடல் கர்ப்பத்திற்குத் தயாரா?” என்றும் நாம் கேட்க வேண்டும்.


ஒரு விரிவான அணுகுமுறை


பல ஆண்டுகளாக, அருந்தக்கூடிய இரும்பு-ஃபோலிக் அமிலம் (Iron-Folic Acid (IFA)) குறைநிரப்பிகள் (supplementation) இரத்த சோகையைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் முக்கிய வழியாகும். இருப்பினும் இந்த அருந்தக்கூடிய சப்ளிமெண்ட்கள் உதவுவதுடன், அவற்றுக்கும் பிரச்சினைகள் உள்ளன. பல பெண்கள் குமட்டல், தளர்வான மலம், மலச்சிக்கல் மற்றும் உணவு ஏற்பில் தொய்வு போன்ற பக்க விளைவுகளை அனுபவிக்கின்றனர். இதன் காரணமாக, பல பெண்கள் சிகிச்சையை சரியாகப் பின்பற்றுவதில்லை. மேலும், நீண்ட காலமாக இரத்த சோகை உள்ள பெண்களுக்கு, கர்ப்பம் பெரும்பாலும் அருந்தக்கூடிய சப்ளிமெண்ட்களை மட்டுமே பயன்படுத்தி இரும்பு அளவை முழுமையாக மீட்டெடுக்க மிகக் குறுகிய காலமாகும். இதன் விளைவாக, குழந்தைக்கு குறைந்த இரும்புச் சத்து கடத்தப்படுகிறது, இது குழந்தைக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும்.


மிதமான முதல் கடுமையான இரத்த சோகையை நிர்வகிக்கவும், கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகும் அது மோசமடைவதைத் தடுக்கவும் நமக்கு ஒரு சிறந்த முறை தேவை. நரம்பு வழியாக செலுத்தப்படும் ஃபெரிக் கார்பாக்சிமால்டோஸ் (Intravenous Ferric Carboxymaltose (IV FCM)) ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். இது அருந்தக்கூடிய இரும்புச்சத்து (oral iron) போலல்லாமல், IV FCM இரும்புச்சத்தை நேரடியாக இரத்த ஓட்டத்தில் கடத்துகிறது. இது விரைவாக ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. ஹெப்சிடின் அளவு (Hepcidin levels) அதிகமாக இருக்கும்போது கூட IV FCM நன்றாக வேலை செய்கிறது. இது அருந்தக்கூடிய இரும்புச்சத்து சரியாக வேலை செய்வதைத் தடுக்கும்.


இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை (Iron Deficiency Anemia (IDA)) இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாகும். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. வைட்டமின் B12 குறைபாடு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. வைட்டமின் B12 இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இனப்பெருக்க வயதுடைய பெண்களில் கிட்டத்தட்ட 49% பேருக்கு வைட்டமின் B12 குறைபாடு இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. இந்தக் குறைபாடு இரத்த சோகையை பாதிக்கிறது மற்றும் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும். போதுமான வைட்டமின் B12 இல்லாமல், இரும்புச்சத்து சப்ளிமெண்ட்களை மட்டும் எடுத்துக்கொள்வது இரத்த சோகையை முழுமையாக சரிசெய்ய முடியாது.


ஹைப்போ தைராய்டிசம் (hypothyroidism) அல்லது ஹைப்பர் தைராய்டிசம் (hyperthyroidism) போன்ற தைராய்டு பிரச்சனைகளும் இரத்த சோகையை மறைக்கலாம் அல்லது மோசமாக்கலாம். இந்த தைராய்டு பிரச்சனைகள் கருவின் வளர்ச்சியை பாதிக்கலாம். பல இந்தியப் பெண்களுக்கு கர்ப்பத்தின் பிற்பகுதி வரை தங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நிலை (gestational diabetes status) இருப்பது தெரியாது. கர்ப்பத்திற்கு முன்பே தைராய்டு செயல்பாடு, இரத்த சர்க்கரை மற்றும் வைட்டமின் பி12 அளவை சரிபார்ப்பது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


ஊசி மூலம் செலுத்தக்கூடிய வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட்டை IV இரும்புச்சத்துடன் சேர்த்துப் பயன்படுத்துவது சிறந்தது. இது சிகிச்சைக்கு ஏற்ற இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.


கருத்தடைக்கு முந்தைய ஆரோக்கியத்தை (preconception health) மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறுவதற்கு சமூக ஈடுபாடு தேவை. குடும்பங்கள் சுகாதார முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவர்கள் கருத்தரிப்பதற்கு முந்தைய சுகாதார பரிசோதனைகளை ஊக்குவிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தற்போதுள்ள தாய் மற்றும் குழந்தை சுகாதார திட்டங்களில் கருத்தரிப்பதற்கு முந்தைய சுகாதார கல்வியை சேர்க்க வேண்டும். இந்த பணியாளர்கள் சமூகங்களுக்கு நெருக்கமானவர்கள். ஆதலால், முன்கூட்டிய பரிசோதனை ஏன் முக்கியமானது என்பதை விளக்க இது அவர்களுக்கு ஒரு சிறந்த நிலையை அளிக்கிறது. இந்தப் பரிசோதனைகள், பிரசவத்திற்கு முந்தைய வருகைகளைப் போலவே முக்கியமானவை என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. இரண்டும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன.



ஒரு சமூகக் கட்டாயம்


மகப்பேறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது ஒரு மருத்துவ வேலை மட்டுமல்ல. இது சமூகம் ஒன்றாகச் செய்ய வேண்டிய ஒன்று. குடும்பங்கள், சுகாதார அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூகங்கள் ஒத்துழைப்புடன், முன்கூட்டியே மற்றும் நிலையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். கருத்தரிப்பதற்கு முன்பு இரத்த சோகை மற்றும் பிற குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறுவது பெண்களுக்கு மட்டுமல்ல, பிறப்பதற்கு முன்பே திறன் தொடங்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தீங்கு விளைவிக்கும்.


கருத்தரிப்பதற்கு முந்தைய பரிசோதனைகளை இயல்பாக்குவதன் மூலம், IV FCM போன்ற புதிய சிகிச்சைகளையும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், தற்போதைய அருந்தக்கூடிய  இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் (IFA) திட்டங்களை மேம்படுத்த வேண்டும். பெண்கள் இந்த அருந்தக்கூடிய  சப்ளிமெண்ட்களை எவ்வளவு அடிக்கடி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை மாற்றுவதும் இதில் அடங்கும். தினமும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்வதன்மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாயும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான கர்ப்பத்தைப் பெற முடியும்.


செயல்பட வேண்டிய நேரம் இது. எந்தவொரு பெண்ணும் இரத்த சோகையுடன் கர்ப்பத்தைத் தொடங்கக்கூடாது அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் இரத்த சோகைக்கு ஆளாகக்கூடாது. எந்த ஒரு பெண்ணும் பிரசவம் தொடங்கியதை விட பலவீனமாக பிரசவத்தை விட்டுவிடக்கூடாது. முன்கூட்டிய கவனிப்பு பிறப்புக்கு முந்தைய கவனிப்பைப் போலவே வழக்கமானதாக இருக்க வேண்டும் - இது விருப்பமானது அல்ல, அது அவசியம். ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான அடுத்த தலைமுறையை உருவாக்க, தாய்மார்கள் கர்ப்பத்தின் தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.


மிருத்யுஞ்சயா பெல்லட், பேராசிரியர், மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் துறை, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, பெல்காம், கர்நாடகா.


Original article:
Share: