நிலையான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வர்த்தக உத்திகள், நிலையான வளர்ச்சியில் நீண்டகால முதலீடுகளுடன், இந்தியா தனது உலகளாவிய வர்த்தக திறனை முழுமையாக உணர உதவும்.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மாறிவரும் வரிகள் மற்றும் உலகளாவிய அரசியல் பதட்டங்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டில், இந்தியாவின் வர்த்தக செயல்திறன் பல சவால்களை எதிர்கொண்டது. இந்தியா இங்கிலாந்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் இன்னும் உள்ளது. 2024-25 நிதியாண்டில் (FY25) இந்தியா வர்த்தகத்தில் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல நேரம்.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட 2025 நிதியாண்டில் $820.93 பில்லியனாக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டை (FY24) விட 6.5% அதிகமாகும். பொருட்களின் ஏற்றுமதி $437.42 பில்லியன் (53%) ஆகவும், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வணிக சேவைகளில் இந்தியாவின் வலிமையால் இயக்கப்படும் சேவைகள் $383.51 பில்லியனை (47%) சேர்த்தன.
இருப்பினும், இறக்குமதிகள் சற்று வேகமாக, 6.85% அதிகரித்து, மொத்தம் $915.19 பில்லியனை எட்டின. பெரும்பாலான இறக்குமதிகள் பொருட்கள் ($720.24 பில்லியன் அல்லது 79%), மற்றும் சேவைகள் $194.95 பில்லியன் (21%) ஆகும்.
இது அதிக வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது (இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி), இது 2024 நிதியாண்டில் $78.39 பில்லியனில் இருந்து $94.26 பில்லியனாக அதிகரித்தது.
2025 நிதியாண்டில் இந்தியாவின் பெயரளவிலான உள்நாட்டு உற்பத்தி, IMF அமைப்பினால் $4.19 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் வர்த்தகம் (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் சேர்ந்து) உள்நாட்டு உற்பத்தியில் 41.4% ஆகும். இது உலகப் பொருளாதாரத்துடன் இந்தியாவின் வலுவான தொடர்பைக் காட்டுகிறது.
இந்தியாவின் தொழிலாளர்களில் 46%-க்கும் அதிகமானோர் பணிபுரியும் விவசாயத்தில், ஏற்றுமதிகள் சற்று அதிகரித்து 2025 நிதியாண்டில் 52 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 48.9 பில்லியன் டாலராக இருந்தது. எனினும் தற்போதைய அதிகரிப்பு 6.3% ஆகும். இது ஒரு நேர்மறையான அறிகுறியாக இருந்தாலும், 2030-ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கிலிருந்து இது இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
ஒப்பிடுகையில், 2005 நிதியாண்டு மற்றும் 2014 நிதியாண்டுக்கு இடையில், விவசாய ஏற்றுமதிகள் ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகரித்து, $8.7 பில்லியனில் இருந்து $43.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை), வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 2.3% ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, விவசாயத்தில் இந்தியாவின் வர்த்தக உபரி (ஏற்றுமதிகளை கழித்தல் இறக்குமதிகள்) 2014 நிதியாண்டில் $27.7 பில்லியனில் இருந்து 2025 நிதியாண்டில் $13.8 பில்லியனாகக் குறைந்தது.
இந்த மந்தநிலைக்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று உலகளாவிய விலைகள் மற்றும் சர்வதேச விவசாய விலைகள் உயரும் போது, இந்திய ஏற்றுமதிகள் நன்றாக இருக்கும்; விலைகள் குறையும் போது, ஏற்றுமதிகள் குறையும். இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகக் கொள்கைகள் மற்றொரு பெரிய காரணமாக உள்ளது. உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் வெங்காயம் போன்ற முக்கியப் பொருட்களின் ஏற்றுமதியை அரசாங்கம் அடிக்கடி தடை செய்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. இந்த அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் ஏற்றுமதி வளர்ச்சியைப் பாதிக்கின்றன.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய விவசாய ஏற்றுமதி அரிசி. இந்தியா 20.2 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) அரிசியை ஏற்றுமதி செய்து $12.5 பில்லியன் சம்பாதித்தது. இது இந்தியாவின் மொத்த விவசாய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு ஆகும். கடல்சார் பொருட்கள் ($7.4 பில்லியன்), மசாலாப் பொருட்கள் ($4.5 பில்லியன்), எருமை இறைச்சி ($4.1 பில்லியன்), பதப்படுத்தப்பட்ட உணவுகள் ($3.5 பில்லியன்), தேநீர் மற்றும் காபி ($2.7 பில்லியன்) மற்றும் சர்க்கரை ($2.2 பில்லியன்) ஆகியவை பிற முக்கிய ஏற்றுமதிகளாகும்.
2022-23-ஆம் ஆண்டில், அரசாங்கம் அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. இது உடைந்த அரிசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியது, புழுங்கல் அரிசிக்கு வரிகளைச் சேர்த்தது மற்றும் பாஸ்மதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது. இந்த விதிகள் காரணமாக, உலகளாவிய அரிசி விலைகள் அதிகரித்தன. அரிசி ஏற்றுமதி 27% குறைந்து, நிதியாண்டு 23-ல் 22.3 மில்லியன் மெட்ரிக் டன்களாக (MMT) இருந்தது. நிதியாண்டு 24-ல் 16.3 MMT ஆகக் குறைந்தது. ஆனால், ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட பணம் 6% மட்டுமே குறைந்தது.
2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் (உடைந்த அரிசியைத் தவிர) பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது, அரிசி ஏற்றுமதி 20.2 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) உயர்ந்து 2025 நிதியாண்டில் $12.5 பில்லியனை ஈட்டியது. உலகின் அரிசியில் மூன்றில் ஒரு பங்கை (FY25 இல் 61.4 MMT) ஏற்றுமதி செய்வதால், உலக அரிசி விலைகளில் இந்தியா வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
இருப்பினும், அதிகமாக அரிசியை ஏற்றுமதி செய்வது உலகளாவிய விலைகளைக் குறைக்கிறது. அதாவது கூடுதல் ஏற்றுமதிகளுக்கு இந்தியா குறைவான பணத்தை ஈட்டுகிறது. விலைகளைக் குறைக்காமல் ஏற்றுமதியிலிருந்து அதிக வருமானம் ஈட்ட, இந்தியா அரிசிக்கு 10 முதல் 15% வரை ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிசி ஏற்றுமதியில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், அரிசியில் இந்தியாவின் உலகளாவிய வெற்றிக்கு பெரும்பாலும் தண்ணீர், மின்சாரம் மற்றும் உரங்கள் மீதான அரசாங்க மானியங்கள் அதிகம். ஆனால் அரிசி வளர அவை நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கிலோகிராமுக்கும் சுமார் 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோவிற்கு சராசரியாக 4,000 லிட்டர்களை எடுத்துக் கொண்டால், அதில் பாதி நிலத்திற்குத் திரும்புகிறது என்று வைத்துக் கொண்டால், 20.2 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்வது என்பது சுமார் 40 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை அனுப்புவதாகும். அது இந்தியாவின் வரையறுக்கப்பட்ட நீர் விநியோகத்தின் மிகப்பெரிய வீணாகும்.
இந்தியாவின் விவசாய ஏற்றுமதிக் கொள்கை உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஆராய்ச்சியில் அதிக முதலீடு, சிறந்த தரமான விதைகள், அதிக நீர்ப்பாசனம், உரங்களை கவனமாகப் பயன்படுத்துதல் மற்றும் நவீன, திறமையான விவசாய முறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். அத்தகைய ஒரு முறை உரமிடுதல் ஆகும். அங்கு சொட்டு நீர் அல்லது நுண் நீர்ப்பாசன முறைகள் மூலம் உரங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் இந்தியா உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், உலகளவில் சிறப்பாகப் போட்டியிடவும், ஏற்றுமதிகளில் இருந்து அதிகம் சம்பாதிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும்.
இந்தியாவின் விவசாய இறக்குமதிகள் 2025 நிதியாண்டில் 16.5% அதிகரித்து. 2024 நிதியாண்டில் $32.8 பில்லியனில் இருந்து 2025 நிதியாண்டில் $38.2 பில்லியனாக உயர்ந்தன. இந்த இறக்குமதிகளில் சமையல் எண்ணெய்கள் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன. இவை 16.4 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு (MMT) $17.3 பில்லியன் மதிப்புடையவை. இது அனைத்து விவசாய இறக்குமதிகளிலும் 45.4% ஆகும்.
இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களை பெரிதும் சார்ந்துள்ளது. இறக்குமதி மூலம் அதன் தேவைகளில் 55-60% ஐ பூர்த்தி செய்கிறது. இதில் பெரும்பாலானவை பாமாயிலிலிருந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வகைகள் உள்ளன. இந்த அதிக சார்பு ஆபத்தானது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது.
இந்த சார்புநிலையைக் குறைக்க, எண்ணெய் பனையின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவுக்கு ஒரு நடைமுறை மற்றும் கவனம் செலுத்தும் கொள்கை தேவை. எண்ணெய் பனை ஒரு ஹெக்டேருக்கு 4 டன் எண்ணெய் வரை உற்பத்தி செய்ய முடியும். எனினும் இவை கடுகைவிட 10 மடங்கு அதிகம். இருப்பினும், எண்ணெய் பனை மரங்கள் முதிர்ச்சியடைய 4 முதல் 6 ஆண்டுகள் ஆகும். அந்த நேரத்தில் விவசாயிகள் அந்த நிலத்தில் மற்ற பயிர்களை வளர்க்க முடியாததால் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உதவ, அரசாங்கம் அவர்கள் இழக்கும் வருமானத்திற்கு சமமான நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும், எண்ணெய் மீட்பு அதிகரிக்க சிறந்த பதப்படுத்தும் நுட்பங்களுக்கு ஊக்கத்தொகைகள் இருக்க வேண்டும்.
இந்தியாவில் நில உரிமை ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், கட்டுப்படுத்தப்பட்ட தோட்ட மாதிரி உதவக்கூடும். இந்த மாதிரியில், தனியார் நிறுவனங்கள் அரசாங்க விதிகளின் கீழ் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுடன் (FPOs) இணைந்து பணியாற்றலாம். இது விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும்.
இந்தியாவின் பரந்த வர்த்தகக் கதை நம்பிக்கைக்குரியது. இருப்பினும், விவசாயம் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் முன்வைக்கிறது. வணிகக் கொள்கைக்கான நிலையான மற்றும் இராஜதந்திர அணுகுமுறை, நிலையான உற்பத்தித்திறனில் நீண்டகால முதலீடுகளுடன் இணைந்து, உலக அரங்கில் இந்தத் துறையின் முழு திறனையும் திறப்பதற்கு முக்கியமாக இருக்கும்.
அசோக் குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியராகவும், ரித்திகா ஜுனேஜா ICRIER நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.