சென்னையில், பேரிடர் மேலாண்மைக்காக நகர அளவிலான ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. -டென்னிஸ் எஸ். ஜேசுதாசன்

 மாநில அதிகார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதற்கு இந்த ஆணையம் பொறுப்பாகும்.


தமிழ்நாடு அரசு, பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் பிரிவு 41A-ன் கீழ், 7 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை நகர நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (Chennai City Urban Disaster Management Authority (CCUDMA)) அமைத்துள்ளது.


பெரு நகர சென்னை மாநகராட்சியின் (Greater Chennai Corporation (GCC)) ஆணையர் தலைவராகவும், சென்னை மாவட்ட ஆட்சியர் துணைத் தலைவராகவும் சென்னை நகர நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருப்பார்கள்.


சென்னை காவல் ஆணையர், பெரு நகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (பணிகள்), பெரு நகர சென்னை மாநகராட்சியின் நகர் சுகாதார அதிகாரி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (Chennai Metropolitan Development Authority (CMDA)) தலைமை செயல் அதிகாரி, மற்றும் சென்னை பகுதி நீர்வள துறையின் தலைமை பொறியாளர், சென்னை பகுதி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த வாரம் இது தொடர்பாக அரசாணை வெளியிட்டது. முதலமைச்சரை தலைவராகக் கொண்ட மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாகக் கொண்ட மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புகளும் ஏற்கனவே இருந்தாலும், மாநில தலைநகருக்கு "நகர்ப்புற பேரிடர்களுக்கு" குறிப்பாக நகர அளவிலான குழு அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.


மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024-ஐ தொடர்ந்து சென்னைக்கான குழு உருவாக்கப்பட்டது. மாநில தலைநகர்கள் மற்றும் மாநகராட்சி கொண்ட அனைத்து நகரங்களுக்கும் (டெல்லி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தைத் தவிர) "தனி நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை" உருவாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.


சட்டத்தின் படி, மாநில அதிகார அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதலுக்கு நகர்ப்புற அதிகார அமைப்பு பொறுப்பாக இருக்கும்.


சென்னையின் நிலப்பரப்பு மற்றும் ஒழுங்கற்ற காலநிலை காரணமாக புயல்கள், கனமழையால் ஏற்படும் வெள்ளம், மேக வெடிப்பு, பூகம்பங்கள் மற்றும் சுனாமி போன்ற பேரிடர்கள் நகரத்தை பாதிக்கச் செய்துள்ளதாக, 2024-ஆம் ஆண்டு பெரு நகர சென்னை மாநகராட்சி தயாரித்த நகர பேரிடர் மேலாண்மை முன்னோக்கு திட்டம் (Disaster Management Perspective Plan) தெரிவிக்கிறது.


சென்னையில் சில பகுதிகள் சராசரி கடல் மட்டத்திற்கு கீழே இருப்பதாகவும், இது கனமழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கை (inundation) திறம்பட நிர்வகிப்பதில் சவால்களை ஏற்படுத்துவதாகவும் இந்தத் திட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.



Original article:
Share: