முக்கிய அம்சங்கள்:
உலகளாவிய வனக் கண்காணிப்பு (Global Forest Watch (GFW)) படி, 2002ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை இந்தியா 3,48,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மை காடுகளை (humid primary forest) இழந்தது. இது நாட்டின் ஈரப்பதமான முதன்மை காடுகளில் சுமார் 5.4% மற்றும் அந்தக் காலகட்டத்தில் அதன் மொத்த மரப் பரப்பு இழப்பில் 15% ஆகும்.
2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை, இந்தியா 1,03,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மை காடுகளை இழந்தது. இது அத்தகைய காடுகளில் 1.6% மற்றும் அந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மரப் பரப்பு இழப்பில் 14% ஆகும்.
ஈரப்பதமான முதன்மை காடுகளின் ஆண்டு இழப்பு: 2022-ல் 16,900 ஹெக்டேர், 2021-ல் 18,300 ஹெக்டேர், 2020-ல் 17,000 ஹெக்டேர், 2019-ல் 14,500 ஹெக்டேர் அளவில் உள்ளது
உங்களுக்குத் தெரியுமா?:
இந்திய மாநில வன அறிக்கை 2023
8வது வன நிலை அறிக்கை (ISFR-2023) டிசம்பர் 21 அன்று டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது மற்றும் இந்தியாவில் வனப்பகுதிகளை வரைபடமாக்க செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் மொத்த பசுமைப் பரப்பு (காடு மற்றும் மரப் பகுதிகள்) நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 25% ஐத் தாண்டியுள்ளது. இது இப்போது 8,27,357 சதுர கி.மீ ஆக உள்ளது: இதில், வனப் பரப்பு: 21.76%, மரப் பரப்பு: 3.41% மற்றும் 4,10,175 சதுர கி.மீ அடர்ந்த காடு உள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, வனப்பகுதி 156.41 சதுர கிமீ அதிகரித்துள்ளது. இது 0.05% சிறிய அதிகரிப்பு ஆகும். மேலும், இது மொத்த வனப்பகுதியை 7,15,342.61 சதுர கிமீ (நாட்டின் நிலப்பரப்பில் 21.76%) ஆகக் கொண்டு வந்தது.
2003ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுக்கு இடையில், வனப்பகுதி 0.61% (20.62% இலிருந்து 21.23% ஆக) உயர்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் (2013–2023). இது 0.53% மட்டுமே (21.76% ஆக) அதிகரித்துள்ளது.
ISFR-2023-ன் படி, 2021ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளில் இந்தியா 3,913 சதுர கிலோமீட்டர் அடர்ந்த காடுகளை இழந்துள்ளது. இது கோவாவின் அளவைவிட அதிகம். இது கடந்த 20 ஆண்டுகளில் கவலையளிக்கும் போக்கைத் தொடர்கிறது. 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, இந்தியா 17,500 சதுர கி.மீ அடர்ந்த காடுகளை இழந்துள்ளது. 2003ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுக்கு இடையில், 7,151 சதுர கி.மீ காடுகளை இழந்துள்ளது.