இந்த ஆய்வறிக்கை வறுமை அளவை ஆய்வுக்கு-ஆய்வு பொறுப்பு சுமத்துதல் (imputation) என்ற முறையைப் பயன்படுத்தி மதிப்பிடுகிறது. ஒரு கணக்கெடுப்பில் சில தகவல்கள் விடுபட்டிருந்தால், விடுபட்ட பகுதிகளை மற்றொரு கணக்கெடுப்பின் தரவைப் பயன்படுத்தி நிரப்பலாம்.
சமீபத்திய ஒரு ஆய்வுக் கட்டுரை 2011-12-க்குப் பிறகு இந்தியாவில் வறுமைக் குறைப்பு கணிசமாக குறைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 2004-2005-ஆம் ஆண்டுகளில் 37%-ஆக இருந்த வறுமை நிலைகள் 2011-12-க்குள் 22%-ஆக குறைந்தது. அதன் பிறகு 2022-23-ல் 18% மட்டுமே குறைந்துள்ளது என்று இந்த ஆய்வுக் கட்டுரை தனது சொந்த கணக்கீடுகளின் அடிப்படையில் கண்டறிந்துள்ளது.
2011-12க்குப் பிறகு இந்தியாவில் வறுமை வீழ்ச்சி : பரந்த சாட்சியம்' (Poverty Decline in India after 2011–12: Bigger Picture Evidence) என்ற தலைப்பில் உள்ள இந்த ஆய்வுக் கட்டுரையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஹிமாஷு மற்றும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வ்ரிஜே பல்கலைக்கழகத்தின் பீட்டர் லான்ஜோவ் மற்றும் ஃபிலிப் ஷிர்மர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுவது என்னவென்றால், இந்தியாவில் 2011-12-க்குப் பிறகு அதிகாரப்பூர்வ வறுமை மதிப்பீடு இல்லை. அதிகாரபூர்வ மதிப்பீடு இல்லாத நிலையில், பல அதிகாரப்பூர்வமல்லாத மற்றும் முரண்பாடான மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு எடுத்துக்காட்டு சமீபத்திய தரவாகும்.
மூன்று வழிமுறைகள்
இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுவது என்னவென்றால், பல்வேறு முரண்பாடான மதிப்பீடுகளை அவற்றின் வழிமுறையின் அடிப்படையில் மூன்று பரந்த குழுக்களாக பிரிக்கலாம். 2022-23 மற்றும் 2011-12-ஆம் ஆண்டுகளின் வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) இடையே குறிப்பிடத்தக்க ஒப்பீட்டு சிக்கல்கள் இருப்பதால், மிகவும் பொதுவான அணுகுமுறை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) மாற்று சமூக-பொருளாதார ஆய்வுகளைப் பயன்படுத்துவதாகும். எந்த இடைப்பட்ட ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. 2017-18க்கான HCES ஆய்வை அரசாங்கம் "வழிமுறை சிக்கல்கள்" (methodological issues) என்று கூறி ரத்து செய்தது.
ஜனவரி முதல் ஜூன் 2014 வரையிலான NSSO-வின் 71-வது சுற்றில், அரசாங்கம் நுகர்வை அளவிடுவதற்கான ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்தியது, இது வழக்கமான மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு (Usual Monthly Per Capita Consumption Expenditure (UMPCE)) என்று அழைக்கப்படுகிறது. இது கணக்கெடுப்பில் உள்ள ஒரு கேள்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பின்னர் வந்த அனைத்து NSSO கணக்கெடுப்புகளிலும், காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்புகளிலும் (Periodic Labour Force Surveys (PLFS)) பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த முறையை முந்தைய நுகர்வு மதிப்பீடுகளுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இது ஒரு கேள்வியிலிருந்து மட்டுமே வருகிறது. மேலும், அதில் சரியாக என்ன இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த முறையின் அடிப்படையில், 2019-20-க்கான வறுமை மதிப்பீடுகள் 26% முதல் 30% வரை இருக்கும்.
இரண்டாவது அணுகுமுறையை பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா மற்றும் அவரது சகாக்கள் 2022-ல் ஒரு ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்தினர். அதில் அவர்கள் 2011-12-க்குப் பிறகு நுகர்வு தொகுப்புகளைப் பெற அரசாங்கத்தின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களிலிருந்து (National Accounts Statistics (NAS)) தனியார் இறுதி நுகர்வு செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) மதிப்பீடுகளைப் பயன்படுத்தினர். இந்த முறை அடிப்படையில் 2011-12 HCES-லிருந்து நுகர்வு செலவு தரவை 2011-12-க்குப் பிறகான PFCE-ன் மறைமுக வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் அளவிட்டது.
மூன்றாவது பரந்த அணுகுமுறை — மற்றும் ஆசிரியர்கள் தாங்களே பயன்படுத்திய முறை — ஆய்வு-க்கு-ஆய்வு பொறுப்பு சுமத்துதல் (imputation) என்ற முறையைப் பயன்படுத்துவதாகும். இதன் அர்த்தம் ஒரு ஆய்வில் உள்ள தரவு இடைவெளிகளை தொடர்புடைய அடிப்படை ஆய்வின் தகவல்களைப் பயன்படுத்தி நிரப்பலாம் என்பதாகும். இந்த முறையை, ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல, உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவமின்மை தளத்தின் (World Bank’s Poverty and Inequality Platform (PIP)) தரவுத்தளத்தை புதுப்பிக்க உலக வங்கி ஆராய்ச்சியாளர்கள் எப்போதாவது பயன்படுத்தியுள்ளனர்.
வெவ்வேறு ஆய்வுகளைப் பார்த்தல்
இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ஓரளவு வேறுபட்ட முடிவுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வாய்ப்புள்ளது. ஆனால், தரவில் உள்ள போக்குகளை வெளிப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணமாக, டேவிட் லாக் நியூஹவுஸ் மற்றும் பல்லவி வியாஸ் ஆகியோரின் ஒரு மதிப்பீடு 2011-12 HCES மற்றும் 2014-15 சேவைகள் மற்றும் நீடித்த பொருட்களின் நுகர்வு ஆய்வை (Consumption of Services and Durables) பயன்படுத்தி இந்தியாவில் வறுமை 2011-12-ல் 22%-லிருந்து 2014-15-ல் 15% ஆக குறைந்ததாக மதிப்பிட்டது என்று ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
இதேபோல், இஃபியானி ஸ்ஸெக்வு எடோச்சி மற்றும் அவரது சகாக்கள் 2022-ல், 2017-18 சுகாதாரத்தில் சமூக நுகர்வு ஆய்வை (Social Consumption on Health) பயன்படுத்தி 2017-18க்கான வறுமையை 10%-ஆக மதிப்பிட்டனர். இது 2011-12க்குப் பிறகு வறுமை குறைந்ததை என்ற போக்கை உறுதிப்படுத்தியது. 2025-ல், சுதீர்த்த சின்கா ராய் மற்றும் ராய் வான் டெர் வெய்ட் (Roy van der Weide) ஆகியோர் தனியார் துறை ஆய்வைப் பயன்படுத்தி ஆய்வுக்கு-ஆய்வு பொறுப்பு சுமத்துதல் (imputation) என்ற முறையை பயன்படுத்த ஒரு தீவிர அணுகுமுறையைப் பின்பற்றினர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) 2019-ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பிரமிட் வீட்டு கணக்கெடுப்பு (Consumer Pyramid Household Survey (CPHS)) மற்றும் 2011-12 நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு (Consumer Expenditure Survey (CES)) ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தினர். 2019-ஆம் ஆண்டில் வறுமை சுமார் 10%-ஆக இருந்தது என்பது அவர்களின் மதிப்பீடாகும்.
ஹிமான்ஷு மற்றும் பலர் ஆய்வுக்கு-ஆய்வு பொறுப்பு சுமத்துதல் (imputation) என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். எனினும், ஆசிரியர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், அவர்களின் உத்தி மூன்று அம்சங்களில் முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபடுகிறது. முதலாவதாக, அவர்கள் உலக வங்கியின் வறுமைக் கோடுகளுடன் மாறாக தென்டுல்கர் குழுவின் (Tendulkar Committee) வறுமைக் கோடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இரண்டாவதாக, அவர்கள் இடைநிரப்பலுக்கு NSSO-வின் வேலைவாய்ப்பு ஆய்வுகளைப் பயன்படுத்தியுள்ளனர். வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்பு (Employment-Unemployment Survey (EUS)) 2011-12 CES-ன் துணை ஆய்வாகும் மற்றும் ஒரே மாதிரியான மாதிரி வடிவமைப்பு மற்றும் ஆய்வு செயல்படுத்தல் நடைமுறைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும், 2017-18-ல் EUS-ஐ மாற்றிய PLFS, EUS-ஐ முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் அடிப்படையில், ஹிமான்ஷுவும் அவரது குழுவினரும் தரவைக் கணக்கிடப் பயன்படுத்திய, இரண்டு கணக்கெடுப்புகளும் ஒரே மாதிரியான முறைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டதால், அவற்றின் தரவை இணைப்பது மிகவும் நம்பகமான முடிவுகளை அளித்தது.
மூன்றாவதாக, ஆசிரியர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், உலக வங்கி ஆய்வுகளுக்கு மாறாக, அவர்களின் சொந்த பொறுப்பு சுமத்துதல் (imputation) மாதிரிகள் மாநில அளவில் மதிப்பிடப்படுகின்றன அல்லது துறை அளவில் மதிப்பிடும்போது மாநில-நிலையான விளைவுகளை (State-fixed effects) உள்ளடக்குகின்றன.
அவர்களின் வழிமுறை காட்டுவது என்னவென்றால், தென்டுல்கர் குழு வறுமைக் கோடுகளின் அடிப்படையில் வறுமை 2004-05 மற்றும் 2011-12 இடையே கூர்மையாக குறைந்தது. 37%-லிருந்து 22% வரை — அதன் பிறகு 2022-க்குள் சுமார் 18%-ஆக மட்டுமே குறைந்துள்ளது. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2011-12க்குப் பிறகு சிறிதளவே குறைந்துள்ளது. 250 மில்லியன் நபர்களிலிருந்து 2022–23-ல் 225 மில்லியன் நபர்களாக ஆக குறைந்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையே உள்ள வெவ்வேறு போக்குகள்
மாநில அளவிலான போக்குகள் குறித்த அவர்களின் பகுப்பாய்வு, மாநிலங்களுக்கு இடையே உள்ள வெவ்வேறு போக்குகளைக் காட்டுகிறது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் அதன் வறுமை விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளதாக அவர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் போன்ற பிற ஏழ்மையான மாநிலங்களில், முன்னேற்றம் மெதுவாக உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற சில பெரிய மாநிலங்களில், வறுமை ஒழிப்பு தேக்கமடைந்துள்ளதாகத் (stagnated) தெரிகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வறுமை குறித்த தற்போதைய விவாதத்திற்கு முழுமையான தீர்வு என்பது, கடந்த கால தரவுகளுடன் ஒப்பிடக்கூடிய புதிய அரசாங்க தரவுகள் இல்லாமல் நடக்காது என்பதை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் முடிவுகளை ஆதரிக்கும் பிற தரவுகளைப் பயன்படுத்தி தங்கள் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கிறார்கள்.
உதாரணமாக, அவர்கள் குறிப்பிட்டது என்னவென்றால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி, 2004-05 மற்றும் 2011-12 இடையே ஆண்டுக்கு சராசரியாக 6.9% ஆக இருந்தது. 2011-12 மற்றும் 2022-23ஆம் ஆண்டிற்கு இடையே 5.7% ஆக குறைந்தது. இது, 2011-12-க்குப் பிறகு வறுமைக் குறைப்பில் மெதுவான சரிவுடன் ஒத்துப்போகிறது என்று அவர்கள் கூறினர்.
இதேபோல், அவர்கள் சுட்டிக் காட்டுவது, தொழிலாளர் அலுவலகத்தால் (Labour Bureau) கிராமப்புற இந்தியாவில் ஊதிய விகிதங்கள் (Wage Rates in Rural India (WRRI)) தரவு உண்மையான ஊதியங்களில் ஊதிய விகிதங்களில் மந்தநிலையை சுட்டிக் காட்டுகிறது. இது ஊதியங்களின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2004-05 மற்றும் 2011-12 இடையே ஆண்டுக்கு 4.13%-லிருந்து 2011-12 மற்றும் 2022-23 இடையே ஆண்டுக்கு 2.3% ஆக குறைந்ததைக் காட்டுகிறது.
மூன்றாவதாக, 2004-05 மற்றும் 2011-12-க்கு இடையில் விவசாயத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33 மில்லியனாகவும், 2017-18 வாக்கில் மேலும் 33 மில்லியனாகவும் குறைந்திருந்தாலும், அதன் பின்னர் இந்தப் போக்கு மாறிவிட்டது என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 2017-18 முதல், 68 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயத்தில் அதிகரித்து வரும் தொழிலாளர் தொகுப்பின் ஒரு விளைவு, சமீபத்திய ஆண்டுகளில் விவசாய உற்பத்தித்திறன் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு முக்கிய காரணியாகும். குறைந்த உற்பத்தித்திறன் குறைந்த ஊதியத்திற்கு வழிவகுக்கிறது. இது அதிக வறுமை நிலைக்கு (poverty levels) வழிவகுக்கிறது.
வறுமை மதிப்பீடுகள் குறித்த இறுதி பதில் இந்த ஆய்வறிக்கை அல்ல. மேலும், ஆய்வுகள் தொடரும். இருப்பினும், ஆசிரியர்களே முடிவு செய்வது போல், வறுமை ஒழிப்பு முயற்சிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்ட போதுமான சான்றுகள் உள்ளன.