ட்ரோன்கள் மற்றும் சுற்றித் திரியும் வெடிமருந்துகள் அதிக எண்ணிக்கையில் வாங்கும் அளவுக்கு மலிவானதா? அதிக எண்ணிக்கையில் அவற்றின் பயன்பாடு மிகவும் அதிநவீன இராணுவ தொழில்நுட்பத்தின் திறன்களை ஈடுசெய்ய முடியுமா?
கடந்த வாரம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வழிப் போர்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான அக்கறையால் மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் போரின் கணிக்க முடியாத குழப்பத்தில் ஆயுத அமைப்புகள் உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள அனைத்து நாடுகளும் ஆர்வமாக உள்ளனர்.
பல்வேறு வகையான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (ட்ரோன்கள்) போன்ற மலிவான மற்றும் அதிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இப்போது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது. வான்வழிப் போரும், தாக்குதல்களும் முன்பு மேம்பட்ட போர் விமானங்களால் வழிநடத்தப்பட்டன. ஆனால் இப்போது, ட்ரோன்கள் நடவடிக்கையின் ஒரு பெரிய பகுதியாக மாறிவிட்டன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய சண்டையும், இன்றைய பிற மோதல்களும், மெதுவாக மாற்றம் நிகழ்ந்து வருவதைக் காட்டுகின்றன. விலையுயர்ந்த விமானங்களை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, குறைவான திறன்களைக் கொண்ட மலிவான ஆயுதங்களையும் இராணுவப் படைகள் பயன்படுத்துகின்றன.
இது சில வெளிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அதாவது, இந்த அமைப்புகள் அதிக எண்ணிக்கையில் வாங்கும் அளவுக்கு மலிவானதா? அதிக எண்ணிக்கையில் அவற்றின் பயன்பாடு மிகவும் அதிநவீன இராணுவ தொழில்நுட்பத்தின் திறன்களை ஈடுசெய்கிறதா?
மலிவான ட்ரோன்களின் பொருளாதார செலவுகள் மற்றும் அபாயங்கள்
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் (Rafael fighter jet) விலை சுமார் $285 மில்லியன் ஆகும். ஒப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்தும் ஒரு சுற்றுத் திரியும் வெடிமருந்து எல்பிட் ஸ்கைஸ்ட்ரைக்கரின் (Elbit Skystriker) விலை $105,000 மட்டுமே. இந்த அதிகளவில் விலை வேறுபாடு வான்வழித் தாக்குதல்களை நடத்த விரும்பும் இராணுவத்தினருக்கு மலிவான வெடிமருந்துகளை லாபகரமானதாக ஆக்குகிறது. இருப்பினும், இந்த ஒப்பீடு முற்றிலும் துல்லியமானது அல்ல. ஸ்கைஸ்ட்ரைக்கர் என்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆயுதம், இது பெரும்பாலும் "தற்கொலை" (suicide) ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட பிறகு அதை மீண்டும் பயன்படுத்த முடியாது.
பணியாளர்கள் இல்லாத அமைப்புகளின் ஒரு தெளிவான நன்மை என்னவென்றால், அவர்களுக்கு ஒரு மனித விமானி (human pilot) தேவையில்லை. இது மனித உயிருக்கு ஆபத்து இல்லாமல் ஆபத்தான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பணியாளர்கள் இல்லாத அமைப்புகளுக்கான பயிற்சியும் பொதுவாக குறைந்த விலை கொண்டது. ஒரு ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) சுட்டு வீழ்த்தப்பட்டால், எந்த விமானியும் அதனுடன் இழக்கப்படுவதில்லை. இருப்பினும், பல பணியாளர்கள் இல்லாத அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு அவற்றை இயக்க அதிக தொலைதூர விமானிகள் தேவைப்படுகிறார்கள். இது சில செலவு நன்மைகளைக் (cost advantages) குறைக்கிறது.
இருப்பினும், இது ஒரு பரிமாற்றமாகும். ஏனெனில், பெரும்பாலான UAVகள் ஆபரேட்டர்களுடனான சில வகையான தகவல்தொடர்புகளை சார்ந்துள்ளது. அது ரேடியோ அலைவரிசை தொடர்பு (radio frequency) அல்லது செயற்கைக்கோள் தொடர்புகள் (satellite communications(SATCOM)) அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் அவை குறுக்கீடு, இடைமறிப்பு மற்றும் சிக்னல் நெரிசல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவை. ஓரளவு சுயாட்சி மற்றும் வரையறுக்கப்பட்ட சூழல்களில் செயல்படும் அமைப்புகள், துல்லியம் மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காக பரவலாகப் பேசப்படுகின்றன. மறுபுறம், அவர்கள் தற்செயலாக இலக்குகளை தவறாக அடையாளம் காணும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய தவறுகள் எதிர்பாராத அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
ட்ரோன்கள் vs போர் விமானம் : திறன்கள் மற்றும் செயல்பாட்டு வர்த்தக பரிமாற்றங்களை ஒப்பிடுதல்
முழுமையான திறன்களைப் பொறுத்தவரை, தற்போது வரை, மேம்பட்ட போர் விமானங்கள் குறைந்தபட்சம் மிகவும் அடிப்படையான ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) விட சிறப்பாக செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ரஃபேல் ஜெட் 9,500 கிலோ வரை ஆயுதங்களைச் சுமந்து செல்லும் மற்றும் மேக் 1.8 வரை வேகத்தில் பறக்கும். மறுபுறம், இந்தியா பயன்படுத்தும் இஸ்ரேலிய ஹரோப் ட்ரோன், 23 கிலோ போர்முனையைக் கொண்டுள்ளது மற்றும் மணிக்கு 417 கிமீ வேகத்தில் பறக்க முடியும். இந்த ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் போர் விமானங்களை மாற்றுவதற்காக அல்ல. சிக்கலான முறையில் முடிவெடுக்கும் தேவையில்லாத சூழ்நிலைகளில் துல்லியமான தாக்குதல்களுக்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கும் MQ-9B போன்ற சில மேம்பட்ட ஆயுத ட்ரோன்கள் (fighter aircraft) வலிமையானவை. ஆனால், இந்த மேம்பட்ட ட்ரோன்கள் மலிவான ட்ரோன்களைப் போல அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை.
செயல்திறன், விநியோகம் மற்றும் எதிர்காலம்
ட்ரோன்கள் மற்றும் UAVகள் நீண்ட நேரம் காற்றில் இருக்க முடியும். இது இலக்குகளைக் கண்டுபிடித்து கவனம் செலுத்த அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. ஆனால், எதிரி வான் பாதுகாப்பைத் தவிர்க்க அவர்கள் இன்னும் விரைவாகச் செயல்பட வேண்டும். தகவல்களைச் சேகரிப்பதே அவற்றின் முக்கிய பலம். மனிதர்கள் கொண்ட விமானங்களைப் போலல்லாமல், நாடுகள் சில ட்ரோன்களை இழப்பதைப் பொருட்படுத்துவதில்லை. எதிரியின் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள அவர்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இஸ்ரேலின் ஹெரான் TP போன்ற நடுத்தர உயர நீண்ட தாங்கும் திறன் (Medium Altitude Long Endurance (MALE)) ட்ரோன்கள் உளவு பார்ப்பதற்கு ஏற்றவை. அவை நீண்டநேரம் பறக்க முடியும் மற்றும் வணிக விமானங்களுக்கு மேலே தங்க முடியும். MALE ட்ரோன்களை ஆபத்தான பணிகளிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அவை எதிரியின் வான் பாதுகாப்பை பலவீனப்படுத்த உதவுகின்றன.
இந்தத் தாக்குதல் விமானங்கள் பெரிய ஆயுதங்களைச் சுமந்து செல்லாமல் போகலாம். இருப்பினும், தாக்குதல் நடவடிக்கைகளில் அவை இன்னும் "வேலையைச்" (do the job) செய்ய முடியும். உள்கட்டமைப்பை சேதப்படுத்துவது அல்லது பயங்கரவாத தளங்களைத் தாக்குவது இலக்காக இருக்கும்போது அவை பயனுள்ளதாக இருக்கும். எதிரி வான் பாதுகாப்பு இந்த ஆளில்லா வான்வழி வாகனங்களைத் (UAV) தாக்கும்போது, அவற்றில் பலவற்றைச் சுட்டு வீழ்த்துவது எளிதாகத் தெரிகிறது. ஏனெனில், அவை குறைந்த வேகத்தைக் கொண்டுள்ளன. மேலும் மிக அதிகமாகப் பறக்க முடியாது. இருப்பினும், இந்த UAVகளை உருவாக்குவதற்கு குறைந்த செலவாகும். இதன் காரணமாக, நாடுகள் அவற்றை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. அவர்கள் தங்கள் இராணுவ இலக்குகளை அடைய முயற்சிக்க இதைச் செய்கிறார்கள்.
வரவிருக்கும் ஆண்டுகளில், இராணுவ தொழில்நுட்பம் விரைவாக முன்னேறும். இது மிகவும் அதிநவீன ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கு (UAV) வழிவகுக்கும். இந்த UAV கள் போலி விமானங்களைப் போல செயல்படக்கூடும். எதிர்காலப் போரில் மனிதர்கள் இல்லாத போர் விமானங்களும் அடங்கும். இந்த ட்ரோன்கள் மனிதர்கள் இல்லாத விமானங்களுடன் இணைந்து செயல்பட முடியும். போர் மாறும்போது, இந்தியா அதன் சொந்த ஜெட்-இயங்கும் ஆளில்லா வான்வழி வாகனங்களை உருவாக்க வேண்டும். தொழில்நுட்பத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க இது முக்கியம். இது இந்தியா மற்ற நாடுகளை நம்பியிருப்பதைத் தவிர்க்கவும் உதவும். உலகளாவிய இயக்கவியல் மாறி வருவதால் இந்தத் தேவை அவசரமானது.
எழுத்தாளர் தக்ஷஷிலா நிறுவனத்தில் கொள்கை ஆராய்ச்சியாளர் ஆவார்.