குறைந்தபட்சம் 6 ஒன்றிய திட்டங்களுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கு ஒன்றிய அரசை விட அதிகம். -டி. ராமகிருஷ்ணன்

 இந்த திட்டங்களில் மூன்று தேசிய சமூக உதவி திட்டத்தின் (National Social Assistance Programme) கீழ் வரும் திட்டங்களாகும். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme), இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Widow Pension Scheme), மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme) போன்றவைகளாகும். மற்றவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Rural), பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana), மற்றும் ஜல் ஜீவன் திட்டம் ஆகும் (Jal Jeevan Mission) ஆகும். 


ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், குறைந்தது ஆறு ஒன்றிய திட்டங்களின் செயல்பாட்டிற்கு ஒன்றிய அரசுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசு பணம் அதிகமாக வழங்குகிறது என்று தெரியவந்துள்ளது.


இவற்றில் தேசிய சமூக உதவி திட்டத்தின் (National Social Assistance Programme (NSAP)) கீழ் மூன்று திட்டங்கள் அடங்கும் - இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (indira Gandhi National Old Age Pension Scheme (IGNOAPS)), இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Widow Pension Scheme (IGNWPS)) மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme (IGNDPS))  போன்றவைகளாகும். இவற்றுடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY))-கிராமப்புற, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY)), மற்றும் ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission (JJM)) ஆகியவையும் அடங்கும்.


வியாழன் அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தனது உரையில், இந்த திட்டங்களைக் குறிப்பிட்டு, ஒன்றிய அரசின் பங்களிப்புடன், வீட்டுவசதி அல்லது தண்ணீர் வழங்கல் என எதுவாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார். "பிரதம மந்திரியின் பெயரால் உள்ள திட்டங்களின் விவாகரத்தில்கூட மாநில அரசு, 50%-க்கும் மேல் திட்ட செலவில் வழங்கி, அவற்றை செயல்படுத்தி வருகிறது" என்று கூறினார்.


ஒன்றிய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் தேசிய சமூக உதவி திட்டம் (National Social Assistance Programme (NSAP)) ஆகஸ்ட் 1995-ல் தொடங்கப்பட்டது. இருப்பினும், மாநில அரசு இந்த பகுதியில் முன்னோடியாக இருந்து, ஜனவரி 1962 முதல் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை (old age pension scheme) செயல்படுத்தி வருகிறது. இது 1974 மற்றும் 1984-ஆம் ஆண்டிற்கு இடையில், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் திருமணத்திற்குப் பிறகு ஆதரவற்ற அல்லது கைவிடப்பட்ட பெண்கள் என நான்கு வகை ஆதரவற்ற நபர்களுக்கு நலத்திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியது. இவை அனைத்தும் நவம்பர் 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு அகில இந்திய திட்டத்தில் (all-India programme) இணைக்கப்பட்டன.


தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் உள்ள முதியோர் மற்றும் விதவைகள் ஓய்வூதியத் திட்டங்களில், ஒன்றிய அரசின் பங்கு 79 வயது வரை உள்ளவர்களுக்கு ₹200 அல்லது ₹300 மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ₹500 ஆகும். பயனாளி இறுதியில் ₹1,200 பெறுவதற்காக, மாநில அரசுதான் மேம்படுத்தப்பட்ட கூடுதல் தொகையை - ₹1,000 அல்லது ₹900 அல்லது ₹700, சூழ்நிலைக்கேற்ப - வழங்குகிறது. இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் (Indira Gandhi National Disability Pension Scheme (IGNDPS)) கீழ் உள்ள பயனாளிகளைப் பொறுத்தவரை, அவர்கள் ₹1,500 பெறுகிறார்கள். அதில் வயது குழுவைப் பொறுத்து ₹300 அல்லது ₹500 ஒன்றிய அரசிடமிருந்து வருகிறது. மீதமுள்ளது மாநில அரசால் வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனது சொந்த திட்டத்திற்கு தமிழ்நாடு நிதி வழங்குகிறது. அதன் கீழ் பயனாளிகளுக்கு ₹1,500 வழங்கப்படுகிறது.


பிரதம மந்திரி அவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தை (PRADHAN MANTRI AWAS YOJANA-GRAMIN (PMAY-G)) பற்றி ஆராயும் போது, சமவெளி பகுதிகளில் ஒரு வீட்டின் யூனிட் செலவு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் சுட்டிக்காட்டியபடி, மாநில அரசின் பங்கு ஒன்றிய அரசைவிட கணிசமாக அதிகமாக உள்ளது. மாநிலத்தில், PMAY-R கீழ் ஒரு வீட்டின் யூனிட் செலவு ₹2,83,900 ஆகும். இது வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் (Reinforced Cement Concrete (RCC)) கூரைக்கான மாநில ஆதரவு செலவு மற்றும் கழிப்பறை கட்டுமானத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) மற்றும் கிராமப்புற தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission (Rural)) உடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த தொகையில், ஒன்றிய அரசின் பங்கு ₹1,11,100 மற்றும் மாநில அரசின் பங்கு ₹1,72,800. வகையில், செலவு பகிர்வின் விகிதம் 39:61 ஆகும்.


பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY))) பற்றி, இது வெவ்வேறு நிதி வழங்கல் முறைகளைப் பின்பற்றுகிறது, செலவில் 60% ஒன்றிய அரசால் ஏற்கப்பட வேண்டும் மற்றும் மீதமுள்ளது மாநிலத்தால் ஏற்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில், ஒன்றிய அரசின் பங்கு 27% மற்றும் மாநிலத்தின் பங்கு 73% ஆகும். ஜல் ஜீவன் திட்ட (Jal Jeevan Mission (JJM)) விவகாரத்தில், செலவு பகிர்வு இருவருக்கும் இடையே சமமாக செய்யப்பட வேண்டும். இருப்பினும், செயல்படுத்தலைப் பொறுத்தவரையில், மாநிலத்தின் பங்களிப்பு 55% ஆக உள்ளது.



Original article:

Share: