அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிப்பதற்கு குளிர்சாதனங்கள் (Air-conditioners) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், வளர்ந்து வரும் எரிசக்தி பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் குளிரூட்டலுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஒரு விரிவான உத்தி தேவைப்படுகிறது.
குளிர்சாதனங்களுக்கான நிலையான வெப்பநிலைக்கான வரம்புகளை அமைக்க ஒன்றிய அரசு சமீபத்தில் ஒரு விதியை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையானது அதிகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் சமூக ஊடகங்களில் பல மீம்களை (meme) ஏற்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி, குளிர்சாதனங்கள் 20°C-க்கும் குறைவான அறைகளை குளிர்விக்கவோ அல்லது 28°C-க்கு மேல் சூடாக்கவோ அனுமதிக்கப்படாது. இந்த வெப்பநிலை வரம்பு மக்களை வசதியாக வைத்திருக்க போதுமானதாக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த வரம்புகளை நிர்ணயிப்பது நிறைய ஆற்றலைச் சேமிக்க உதவும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
விரிவான வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், முன்மொழியப்பட்ட புதிய விதியானது நடைமுறைக்கு வந்த பிறகு, வாங்கப்படும் புதிய குளிர்சாதனங்களுக்குப் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் இரண்டு முதல் மூன்று மாதங்களில் மாற்றத்தைச் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். ஏனெனில், இது பெரும்பாலும் முன் கட்டமைப்புகள் வெப்பநிலையை சரிசெய்ய வேண்டும்.
இருப்பினும், மால்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற பெரிய இடங்கள் இந்த விதியைப் பின்பற்ற வேண்டியதில்லை. இந்த இடங்களில் ஒருங்கிணைந்த குளிர்சாதன அமைப்புகளைப் (centralised air-conditioning systems) பயன்படுத்துகின்றன. அங்கு வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
இந்த விதியால் யார் பாதிக்கப்படுவார்கள்? மக்கள் தங்கள் ஏசிகளை எந்த வெப்பநிலையில் அமைக்கிறார்கள் என்பது குறித்த தேசிய தரவு (National-level data) எதுவும் இல்லை. ஆனால், ஒரு சில வீடுகள் மட்டுமே தங்கள் ஏசிகளை 20°C-க்கும் குறைவாக பயன்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த குறைந்த வெப்பநிலையை அமைப்பது அறையை வேகமாக குளிர்விக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இது ஒரு தவறான யோசனையாகும்.
1.5 டன் அளவுள்ள ஏசி-யானது, ஒரு அறையை 28°C-லிருந்து குளிர்விக்கும் போது, அது 24°C, 20°C அல்லது 16°C ஆக அமைக்கப்பட்டாலும், தோராயமாக அந்த அறையானது அதே விகிதத்தில் குளிர்ச்சியடையும்.
மற்றொரு பொதுவான தவறான கருத்து என்னவென்றால், வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, உட்புறத்தில் 20°C இருப்பது போதுமான குளிர்ச்சியை உணராது. ஆனால் உண்மையில், 35, 40 அல்லது 45°C வெளியில் இருந்தாலும், உட்புறம் 20°C என்பது சாதகமானதாக இருக்க வேண்டும். ஏசி சரியான அளவில் இருந்தால், அது சரியாக வேலை செய்யும். அது நன்கு வடிவமைக்கப்பட்டிருந்தால், அது இடத்தை திறமையாக குளிர்விக்கும். நம்பகமான தெர்மோஸ்டாட் இருந்தால், அது சரியான வெப்பநிலையை பராமரிக்கும். எனவே, இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை, வெப்பநிலை வரம்பை அமைப்பது ஆறுதலைக் குறைக்கக்கூடாது.
இந்த மாற்றம் ஒரு சிறிய குழுவினரை மட்டுமே நேரடியாகப் பாதிக்கும். இந்த மக்கள் தங்கள் வீடுகளை 20°C க்கும் குறைவாக குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இது முக்கிய கேள்விக்கு வழிவகுக்கிறது. அதாவது, அரசாங்கம் அனைவருக்கும் உதவ தனிப்பட்ட தேர்வுகளை கட்டுப்படுத்த வேண்டுமா? இது ஒரு நியாயமான கவலை. ஒரு நல்ல உதாரணம் ஹெல்மெட் சட்டம் (helmet law) ஆகும். பொதுப் பாதுகாப்பைப் பாதுகாக்க அரசாங்கங்கள் மக்களை ஹெல்மெட் அணியச் செய்கின்றன. இதில், ஹெல்மெட் அணிவது என்பது பெரும்பாலும் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றியது. இதேபோல், புதிய ஏசி விதியும் (new AC rule) ஒத்திருக்கிறது. இது தனிப்பட்ட சுதந்திரத்தை சமூகத்தின் பொறுப்புடன் சமநிலைப்படுத்துகிறது.
இந்த ஒழுங்குமுறை ஒரு சிறிய குழுவினரை மட்டுமே பாதிக்கும். இதன் காரணமாக, எரிசக்தி பயன்பாடு மற்றும் உமிழ்வுகளில் அதன் மொத்த தாக்கம் சிறியதாக இருக்கும். இருப்பினும், ஏசி-களை பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது உதவுவதால் இந்த விதி முக்கியமானது. இது முந்தைய அரசாங்க நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, அரசாங்கம் 24°C ஐ இயல்புநிலை ஏசி வெப்பநிலையாக (default AC temperature) நிர்ணயித்தது. மால்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களுக்கும் இந்த வெப்பநிலையை அவர்கள் பரிந்துரைத்தனர்.
இன்னும், விரைவில் பெரிய மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தேவை. குளிர்சாதனங்களுக்காக (air conditioning) வளர்ந்து வரும் மின்சார தேவையை சரியாக சமாளிக்க இவை அவசியம். ஏசி-கள் வெப்பத்திலிருந்து நமக்கு தேவையான நிவாரணத்தை வழங்குகின்றன. ஆனால், அவை அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவின் பெரும்பாலான மின்சாரம் நிலக்கரியிலிருந்து வருகிறது. நிலக்கரி பயன்பாடு அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகிறது மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. பலர் ஒரே நேரத்தில் ஏசி-களைப் பயன்படுத்தும்போது, அது மின்சார நிலையத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மின்வெட்டுக்கான (power cuts) வாய்ப்பை அதிகரிக்கும்.
வளர்ந்து வரும் இந்த சிக்கலைச் சமாளிக்க பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமாக, சிறந்த கட்டிட வடிவமைப்பானது குளிர்சாதனங்களின் (air conditioning) தேவையை கணிசமாகக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம். எரிசக்தி திறன் கொண்ட கட்டிடக் குறியீடுகள் இருந்தாலும், அவை எப்போதும் சரியாகவோ அல்லது தொடர்ந்து பயன்படுத்தப்படுவதில்லை.
குளிர்சாதனங்கள் (air conditioning) தாங்களாகவே மிகவும் திறமையானதாக மாற வேண்டும். எரிசக்தி திறன் பணியகம் (Bureau of Energy Efficiency (BEE)) AC-களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு முறையைக் (star-rating system) கொண்டுள்ளது. 1-நட்சத்திர AC மிகக் குறைவான செயல்திறன் கொண்டது மற்றும் 5-நட்சத்திர AC மாதிரிகள் மிகவும் திறன் சார்ந்தது. தற்போது, விற்கப்படும் ஏசி-களில் சுமார் 20 சதவீதம் மட்டுமே 5-நட்சத்திர மாதிரிகளைக் கொண்டது. மேலும், இந்த மதிப்பீடுகளை தீர்மானிக்கும் விதிகளை பூர்த்தி செய்வது மிகவும் எளிதானது. எரிசக்தி திறன் பணியகம் (BEE) இந்த விதிகளை அவ்வப்போது புதுப்பிக்கிறது. ஆனால், 2028 வரையிலான தற்போதைய திட்டம் இன்னும் எளிதான தரநிலைகளை அனுமதிக்கிறது. இதன் பொருள் விதிகளை கடுமையாகவும் லட்சியமாகவும் மாற்றலாம்.
இந்த விதிகளை ஆதரிக்க, பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. இதற்கு சில சிறப்பு சலுகைகளும் இருக்க வேண்டும். உதாரணமாக, அரசு பொது அலுவலகங்களுக்கு 5 நட்சத்திர ஏசி-களை மட்டுமே வாங்க வேண்டும் என்று கோரலாம். அவை, அதிக திறன் கொண்ட மாதிரிகளுக்கான ஜிஎஸ்டி வரிகளைக் குறைக்கலாம். பழைய ஏசி-களுக்கான பரிமாற்றத் திட்டங்களும் மக்களை சிறந்த மாதிரிகளுக்கு மாற ஊக்குவிக்கும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் சந்தையை மிகவும் திறமையான குளிர்சாதனங்களை (air conditioning) நோக்கி நகர்த்த உதவும்.
அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க குளிர்சாதனங்கள் (air conditioning) இப்போது மிகவும் முக்கியமானவை. அதிகரித்து வரும் எரிசக்தி பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் குளிரூட்டலால் ஏற்படும் உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தை நிர்வகிக்க இந்தியாவிற்கு ஒரு முழுமையான திட்டம் தேவை. குளிர்சாதன வெப்பநிலை (AC temperature) குறித்த பரிந்துரைக்கப்பட்ட விதி இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு சிறிய ஆனால் புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.
எழுத்தாளர் பிரயாஸ் (எரிசக்தி குழு)-ல் ஒரு ஆய்வாளர்.