இந்தியாவை தடுப்பூசிமயப்படுத்தல் : தடுப்பூசிகள் போடாத குழந்தைகள் குறித்து…

 பல ஏழைக் குடும்பங்களில் இன்னும் தடுப்பூசிகள் போடாத குழந்தைகள் உள்ளனர்.


நல்ல செய்தி என்னவென்றால், உலகளவில் தடுப்பூசிப் பாதுகாப்பு, 1980 மற்றும் 2023-ஆம் ஆண்டிற்கு இடையில், தட்டம்மை [measles], போலியோ மற்றும் காசநோய் [tuberculosis] உள்ளிட்ட ஆறு நோய்களுக்கு இரட்டிப்பாகியுள்ளது. மேலும், உலகளவில் 75% ஆக, டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (diphtheria, tetanus, and pertussis (DTP)) தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறாத ‘தடுப்பூசிகள் போடாத’ குழந்தைகளின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு முக்கியமான செயல்திறன் குறிப்பானாகவும், தடுப்பூசி பாதுகாப்பு ஏற்றத்தாழ்வுகளின் குறிகாட்டியாகவும் உள்ளது. பல ஆண்டுகளாக தடுப்பூசி பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும், 2023-ஆம் ஆண்டில், 1.44 மில்லியனாக, இந்தியா இன்னும் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இருப்பதாக தி லான்செட் தெரிவித்துள்ளது. உலகின் ஏறக்குறைய 16 மில்லியன் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் போரை எதிர்கொள்ளும் அல்லது வளங்கள் இல்லாத நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால், இந்தியாவில் இந்தப் பிரச்சினைகள் இல்லை. இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 23 மில்லியன் குழந்தைகள் பிறந்தன. இது உலகளவில் அதிகபட்ச பிறப்பு விகிதமாகும். 2024-ஆம் ஆண்டில், உலகளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொண்ட சீனாவில், வெறும் 9.5 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்தனர். தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகத் தோன்றினாலும், 2023-ஆம் ஆண்டில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையின் பின்னணியில் பார்க்கும்போது, ​​இந்தியாவில் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் சதவீதம் 6.2% ஆகும். 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் சதவீதத்தை இந்தியா 1992-ஆம் ஆண்டில் 33.4%-லிருந்து 2016-ஆம் ஆண்டில் 10.1% ஆக குறைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு, தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டில் 1.4 மில்லியனாக இருந்தது, ஆனால், இது 2021-ஆம் ஆண்டில் 2.7 மில்லியனாக உயர்ந்து பின்னர் 2022-ஆம் ஆண்டில் 1.1 மில்லியனாகக் குறைந்து 2023-ஆம் ஆண்டில் 1.44 மில்லியனாக அதிகரித்தது.


2021 ஆய்வில் இருந்ததைப் போலவே, தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் பெரிய சதவீதம் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ளது. மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாசலப் பிரதேசத்திலும் அவர்களின் ஒப்பீட்டளவில் அதிக விகிதம் உள்ளது. பல ஆண்டுகளாக, பாலினம், சாதி மற்றும் கிராமப்புற-நகர்ப்புற நிலையின் அடிப்படையில் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளில் உள்ள வேறுபாடு கணிசமாக குறைந்துள்ளது. எனினும், ஏழைகள், குறைந்த கல்வியுள்ள தாய்மார்கள், பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) மற்றும் முஸ்லிம்களிடையே பரவல் அதிகமாகவே உள்ளது. செல்ல கடினமாக இருக்கும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், பெரிய புலம்பெயர் மக்கள்தொகை உள்ள நகர்ப்புற சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு செய்வதிலும், புதிதாக பிறந்த குழந்தைகளுள்ள முஸ்லிம் குடும்பங்களிடையே தடுப்பூசி தயக்கத்தை குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உலக சுகாதர அமைப்பின் (World Health Organization (WHO)) நோய்த்தடுப்பு கொள்கையை (Immunization Agenda, 2030) பூர்த்தி செய்ய இந்தியா அதிக பணி செய்ய வேண்டியுள்ளது - 2019-ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது தடுப்பூசிகள் போடாத குழந்தைகளை பாதியாக குறைப்பது. மேலும் 2023-ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் போடாத குழந்தைகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டின் அளவான 1.4 மில்லியனை எட்டியுள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியாவுக்கு அதிக மற்றும் நிலையான முயற்சிகள் தேவை.


Original article:

Share: