இந்தியா, குப்பைகளை உள்நாட்டு உற்பத்தியாக எவ்வாறு மாற்ற முடியும்? -துருவ் லுத்ரா

 இந்த உலக சுற்றுச்சூழல் தினம் நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களைப் பற்றி மட்டுமல்லாமல், அவற்றுக்குள் மறைந்திருக்கும் பயன்படுத்தப்படாத வாய்ப்புகளைப் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. இந்த ஆண்டின் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுதல் (Combating Plastic Pollution) என்ற கருப்பொருள் இந்தியாவின் அதிகரித்து வரும் கழிவு நெருக்கடியுடன் வலுவாக ஒத்துப்போகும் ஒரு அவசர உலகளாவிய முன்னுரிமையை எடுத்துக்காட்டுகிறது. ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board (CPCB)) கூற்றுப்படி, இந்தியா ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்களுக்கு மேல் நகர்ப்புற திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. மேலும், தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 165 மில்லியன் டன்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சுமார் 70% மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மேலும் 20%-க்கும் குறைவானது மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ளவை 3,000-க்கும் மேற்பட்ட மரபுவழி குப்பைத் தொட்டிகளில் சேருகின்றன. அவற்றில் பல ஆபத்தானவை மற்றும் நிர்வகிக்க முடியாதவையாகும்.


உதாரணமாக, இந்தியாவின் தலைநகரான புது தில்லியை எடுத்துக் கொள்ளுங்கள் - இது ஒரு நாளைக்கு டன் கணக்கில் கழிவுகளை மூன்று குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்புகிறது. இவை அனைத்தும் நீண்ட காலமாக அதற்கு வழங்கப்பட அளவை அதிகரிக்க செய்துவிட்டன. இந்தப் பெரிய கழிவுமலைகளை பாதிப்படைய செய்வது மட்டுமல்லாமல், மீத்தேன் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுகின்றன. அருகிலுள்ள சமூகங்களுக்கு கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன. மேலும், உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய மதிப்புமிக்க நகர்ப்புற நிலத்தை அழிகின்றன.


ஆயினும், இந்த நெருக்கடிக்குள் மறைந்திருப்பது வட்டப் பொருளாதாரம் (circular economy) என்ற ஒரு வாய்ப்பாகும். நோக்கத்துடனும் புதுமையுடனும் அணுகினால், இந்தியா இந்தக் குப்பைகளை புதையலாக மாற்ற முடியும். சுற்றுச்சூழல் பொறுப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முக்கிய இயக்கியாக மாற்ற முடியும்.


முக்கிய கருத்தாக, சுற்று பொருளாதாரம் நாம் எப்படி உற்பத்தி செய்கிறோம், நுகர்கிறோம், மற்றும் கழிவுகளை நிர்வகிக்கிறோம் என்பதை மறு சிந்தனை செய்வதாகும். எடு-உருவாக்கு-அப்புறப்படுத்து (take-make-dispose) என்ற பாரம்பரிய மாதிரிக்கு மாறாக, சுற்று மாதிரி வடிவமைப்பால் மீளுருவாக்கம் செய்யக்கூடியதாகும். இது வள திறனை, மறுபயன்பாட்டை, மறுசுழற்சியை மற்றும் மீட்பை வலியுறுத்துகிறது. இதன் மூலம் கழிவுகளை குறைத்து ஒவ்வொரு பொருளிலிருந்தும் அதிகபட்ச மதிப்பை பெறுகிறது.


இந்தியா, அதன் மக்கள்தொகை ஈவுத்தொகை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள்தொகையுடன், இந்த மாற்றத்தில் முன்னிலை வகிக்க தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வட்டப் பொருளாதாரப் பாதையின் மூலம் வளர்ச்சியை உருவாக்குவது, 2050ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு ஆண்டுக்கு $624 பில்லியன் வரை நன்மைகளைத் தரக்கூடும், இது எலன் மெக்ஆர்தர் அறக்கட்டளையின் இந்திய வட்டப் பொருளாதாரம்: நீண்டகால செழிப்புக்கான வளர்ச்சியை மறுபரிசீலனை செய்தல் (Rethinking growth for long-term prosperity) என்ற அறிக்கை கூறுகிறது.


இந்த மாற்றம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், காலநிலை இலக்குகளை ஆதரிக்கிறது. இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது மற்றும் மில்லியன் கணக்கான பசுமை வேலைகளை உருவாக்குகிறது.


வட்டாரப் பார்வையை உணர நடைமுறை வழிகள் உள்ளன:


மூலப்பொருட்கள் மற்றும் உயிரி வளங்களை மீட்டெடுப்பது: ஒவ்வொரு டன் கழிவுகளிலும் உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் முதல் கரிமப் பொருட்கள் வரை மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. மூலத்தில் சரியான முறையில் பிரிப்பது மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மக்கும் கழிவுகளை திறம்பட மீட்டெடுக்க உதவும். நகராட்சி கழிவுகளில் 50%-க்கும் அதிகமானவை கரிமக் கழிவுகளை உரம் அல்லது உயிர்வாயுவாக மாற்றலாம். மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம் மற்றும் நிலையான விவசாயத்தை ஆதரிக்கலாம்.


நிலத்தை மீட்டெடுப்பது மற்றும் உமிழ்வைக் குறைத்தல்: மரபுவழி குப்பைத் தொட்டிகள் நகர்ப்புறங்களில் பிரதான ரியல் எஸ்டேட்டை ஆக்கிரமித்துள்ளன. அறிவியல் ரீதியான மறுசீரமைப்பு மற்றும் உயிரி சுரங்கம் இந்த நிலத்தை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், நச்சுத்தன்மை வாய்ந்த கசிவு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீட்டெடுக்கப்பட்ட நிலத்தை உள்கட்டமைப்பு, பசுமை இடங்கள் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்தலாம்.


பசுமை வேலைகள் மற்றும் புதிய வணிக மாதிரிகளை உருவாக்குதல்: வலுவான மறுசுழற்சி அமைப்புக்கு கழிவு சேகரிப்பவர்கள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் வரை திறமையான பணியாளர்கள் தேவை. பயிற்சி மற்றும் பாதுகாப்பு மூலம் முறைசாரா தொழிலாளர்களை முறையான மறுசுழற்சி அமைப்புகளில் ஒருங்கிணைப்பது நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, திறனை மேம்படுத்தும். மேலும், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR), தலைகீழ் தளவாடங்கள் மற்றும் சேவையாக-பொருள் போன்ற வட்டப் பொருளாதார மாதிரிகள் நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வழிகளை உருவாக்கும்.


கொள்கை மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகளை செயல்படுத்துதல்: வட்டப் பொருளாதாரத்தை அளவிட, இந்தியாவிற்கு வலுவான கொள்கை கட்டமைப்புகள், தெளிவான அமலாக்க வழிமுறைகள் மற்றும் முதலீட்டு ஊக்கத்தொகைகள் தேவை. தூய்மை இந்தியா திட்டம்  (Swachh Bharat Mission, 2.0) மற்றும் தேசிய வள திறன் கொள்கை போன்ற சமீபத்திய முயற்சிகள் பாராட்டத்தக்க திட்டங்களாகும். ஆனால், அவற்றின் வெற்றி செயல்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது. பொது-தனியார் கூட்டாண்மைகள் கழிவு அமைப்புகளை அளவில் மாற்றுவதற்கு தேவையான மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்தைக் கொண்டு வர முடியும்.


இந்தியாவின் கழிவு நெருக்கடி மறுக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், அது புதிய யோசனைகளை உருவாக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வட்டப் பொருளாதாரம் தூய்மையான நகரங்களுக்கு மட்டுமல்ல, மிகவும் மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கும் ஒரு பாதையை வழங்குகிறது. இது நமது நகரங்களை தூய்மையாக்கவும், அனைவருக்கும் வலுவான மற்றும் நியாயமான பொருளாதாரத்தை உருவாக்கவும் உதவும்.


உலக சுற்றுச்சூழல் தினத்தை நாம் அனுசரிக்கும்போது, ​​விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், செயலில் ஈடுபடுவோம். வட்டப் பொருளாதாரம் என்பது தொலைதூர இலட்சியமல்ல, அது ஏற்றுக்கொள்ளக் காத்திருக்கும் ஒரு சாத்தியமான, அளவிடக்கூடிய தீர்வாகும். இந்தியா தனது குப்பைகளை வெற்றிகரமாகவும், கழிவுகளை செல்வமாகவும் மாற்றும் நேரம் இது.


இந்தக் கட்டுரையை லூத்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் துருவ் லூத்ரா எழுதியுள்ளார்.


Original article:
Share: